பெண்பிள்ளைகளின் விருப்பத்திற்குமாறாக நடத்தப்படும் கட்டாயத் திருமணத்தை நிறுத்து!(Stop mariage forcé!!)

தேனுகா (பிரான்ஸ்)

Téléphone-Voix-de-FemmesAffiche 1பெண்பிள்ளைகளின் விருப்பத்திற்குமாறாக கட்டாயத்திருமணம் செய்துவைக்கமுடியாது!

கட்டாயத் திருமணத்தை நிறுத்து!(Stop mariage forcé!!) எனும் கோஷத்துடன் VOIX DES FEMMESஎன்ற அமைப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. பெண்பிள்ளைகளின் விருப்பத்திற்கு மாறாக சில பெற்றோர்கள் கட்டாயத் திருமணத்திற்கு நிர்ப்பந்திக் கிறார்கள். தம் தாய் நாடுகளுக்கு விடுமுறைகளுக்காக அழைத்துச் செல்லப்படும் பிள்ளைகளுக்கே இக்கொடுமை நடந்தேறுகிறது. நீண்ட விடுமுறைக்காலமான யூலைஆகஸ்ட் மாதங்கள் அபாயமான காலகட்டம் என இவ்வமைப்பு எச்சரித்துள்ளது. இச்செயலைத் தடுக்கவே VOIX DES FEMMES  அமைப்பு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் அந்நாடுகளிலிருந்து உதவிகேட்டுத் தகவல்களை அனுப்பினால் அங்கிருந்து காப்பாற்றி; அழைத்து வரப்படுவார்கள். இவ்வாறாகப் பெண்பிள்ளைகளின் விருப்பத்திற்கு மாறான திருமண உறவை ஏற்பாடு செய்யும் பெற்றோர்கள் 3 வருடச் சிறைத் தண்டனையும் 45 000
யூரோ தண்டனைப் பணமும் செலுத்தவேண்டும் என பெண்களின் குரல் அமைப்பு தெரிவிக்கின்றது.

தொடர்புகட்கு

WWW.STOP-MARIAGEFORCE.FR
தொலைபேசி: 01 30 31 05 05 

http://www.stop-mariageforce.fr/le-mariage-force.html 

Téléphone-Voix-de-Femmes

Affiche 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *