7 சிஐஏ அதிகாரிகளும் மனித வெடிகுண்டும்

தமிழாக்கம்:-  உயிரோடை லாவண்யா

berek 1

மனித வெடிகுண்டுதாரியின் மனைவி டெஃப்னே பேரக் உடன் ஒரு நேர்காணல்

“என் கணவர் ஒரு அமெரிக்க எதிர்ப்பாளர், அதன் காரணமாக நானும் அவ்வாறே இருக்கிறேன்” மென்மையாக அதேசமயம் உறுதியான குரல் எவ்வித மனத்தயக்கங்களுமின்றி கூறுகிறார் 31 வயதாகும் டெஃப்னே பேரக்..

கடந்த டிசம்பர் 30 அன்று அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ – வின் ஆப்கன் அலுவலகத்தில், மனித வெடிகுண்டாக செயல்பட்டு,சிஜஏவின் ஏழு அதிகாரிகளைக் கொன்ற ஹுமாம் கல் அபு-முலல் அல்-பலாவியின் மனைவியான இவர், அல்கொய்தாவை உளவு புரிய சிஐஏ வகுத்த சதியை முறியடித்து தன் கணவர் செய்த செயல், இஸ்லாமின் புனிதப் போரான ஜிகாத் என்று இஸ்தான்புல்ருந்து வெளியாகும் ‘நியூஸ் வீக் – துருக்கி’ இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அல்-பலாவியின் வழக்கு நன்கு படித்த, பொருளாதார முன்னேற்றம் பெற்ற, கண்ணியம், கட்டுபாடுடைய, கடவுள் நம்பிக்கையுள்ளவரின் தீவிரவாதத்துவமாகும். இப்படிப்பட்ட மக்கள் பொதுவாக தீவிரவாதிகளாக அடையாளம் காணப்படாது இருப்பவர்களே. ஆனாலும் சமீபகாலமாகக் காவல் துறை மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான சிறப்பு அதிகாரிகளுக்கும் இப்படிப்பட்ட நபர்களின் விபரங்கள் கிடைப்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருக்கிறது. அல்கய்தா வெற்றிகரமாக நடத்தி முடித்த தாக்குதல்கள் (9/11 ருந்து லண்டனில் 2005 தாக்குதல் வரை) எல்லாம் அப்படிப்பட்ட புத்திசாகளன, தெளிவான, கடவுள் நம்பிக்கையுள்ள, சாவுக்கு அஞ்சாத, மத அடிப்படைவாதிகளாலேயே நடத்தப்பட்டுள்ளது. அல்-பலாவி மற்றும் பேரக் ,அவர்களின் கதை நாடு மதம் கலாசாரம் லைகளைக் கடந்த ஒரு கதையாகும். பேரக் துருக்கியில் வசிக்கும் ஒரு பத்திரிக்கையாளர். ‘பின்லேடன் : மேற்கின் சே குவேரா’ என்ற புத்தகத்தை மொழி பெயர்த்தவர். இவரது கணவர் அல்-பலாவி பாலஸ்தீனில் பிறந்து குவைத்திலும் ஜோர்டானிலும் வளர்ந்தவர். இவர் இஸ்தான்புல்ல் ஒரு மருத்துவராகப் பணியாற்றினார். பேரக் தனது கணவரை “”அவர் ஒரு தீவிரவாதியல்லர். ஆனால் பழமைவாதி’’ என்கிறார். அல்-பலாவி தனது மருத்துவப் படிப்பின் கடைசி வருடத்தில் (2001) இருக்கும் போது இவர்கள் இணையத்தில் சந்தித்து மணந்து கொண்டனர். பின் அவர்கள் ஜோர்டான் சென்று வாழ்ந்தனர். அங்கே சாதாரண மருத்துவமனைகளில் பணி புரிந்தார் அல்-பலாவி. அங்கே இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தனர். அல்-பலாவி 2003 அமெரிக்கத் துருப்புகள் ஈராக்கில் அத்துமீறி நுழைந்த சமயமே மாறத் தொடங்கியதாக அவருடைய மனைவி கூறுகிறார்.

மேலும் 2004 -ல் இஸ்லாமியருக்கு எதிரான புனிதப்போரைப் பற்றி தீவிரமான பேச்சு, மேற்கத்திய நாடுகள் முகம்மதிய தேசத்தில் ஆக்கிரமிக்கத் தொடங்கிய போது அவரது மாற்றம் ஆரம்பமானதாகக் கூறுகின்றார். ஆனால், அப்போது அவர் எந்த அமைப்பையும் சார்ந்தவராக இல்லை. அவர் பல்வேறு அமைப்புகளையும் தூரத்திருந்து பின்பற்றுபவராக இருந்தார் என்கிறார் பேரக். அவர் தொடர்ந்து படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டுமிருந்தாகவும் மேலும் இணையக் குழுமங்கள் மேல் அதீத ஈடுபாடும் கொண்டிருந்ததாகவும் சொல்கிறார் இவர். இந்தக் குழுமங்களில் இவர் தீவிரமான கடுமையான பின்னூட்டங்களையும் எழுதி வந்தார். குரானில் இருந்து வாசகங்களை எடுத்து அதை மேற்கோளிட்டும், இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்களின் மீது நடத்தவேண்டிய புனிதப்போர் பற்றியும் எழுதி வந்தார். இதுவே ஜோர்டானின் மத்திய புலானாய்வு துறையின் கவனத்தை ஈர்க்கக் காரணமாக இருந்திருக்கும் என்று அல்-பலாவியின் மனைவி கூறுகிறார். அரசர் அப்துல்லாவின் உறவினரான அபின் ஹாடு அந்த நிறுவத்தினர் இஸ்லாமிய புனிதப்போர் பற்றி அரட்டை அடிக்கும் இணையங்களைத் தீவிரமாகக் கண்காணித்து நடக்க இருப்பதை கணிக்கும் குழுவில் ஒருவராக இருந்தார்.

பேரக் தன்னுடைய கணவர் ஜோர்டானில் இருந்த இஸ்லாமிய சகோதரர்களோடு தொடர்பிருந்ததாகவும், அவர்கள் அனைவரும் மிதவாதப் போக்குடனான அரசியலை நடத்திக் கொண்டிருந்தனர் என்றும், மேலும் இந்த மனிதர்களாலோ இவர்களுடைய நிறுவனத்தாலோ எதையும் செய்ய முடியாது என்றும் தனது கணவர் கூறியதாகத் தெரிவிக்கிறார். மேலும் தன் கணவரின் புனிதப்போருக்கான தளத்தை அவர் கனவுகளை அவர் சொல்க் கொண்டிருந்தார்.  வருடம் கழிந்தபின், இஸ்ரேயர்கள் பாலஸதீன அடிப்படையாளர்கள், அமைப்புகள் மற்றும் காசாவில் அவ்வமைப்புகளின் அடிப்படை வசதிகளையும் முற்றிலுமாக அழித்து குப்பையாக அடுத்தடுத்து பல ராக்கெட் தாக்குதலை இஸ்ரேய நகரங்களில் கட்டவிழ்த்து விட்டார்கள்.ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் மேலும் பெரிதும் பாதிக்கப்பட்டுமிருந்த பாலஸ்தீனர்களுக்கு உதவ நினைத்த அல்-பலாவி, சில மருத்துவர்களுடன் இணைந்து செயல்பட தீர்மானித்தார். ஆனால் ஜனவரியில் ஜோர்டான் புலனாய்வுத்துறையால் (Jordan’s GeneralIntelligence Directorate) அல்-பலாவி கைது செய்யப்பட்டார். அதன்பிறகு பலாவியைக் கொண்டு அல்கய்தா தலைவர்களை அழிக்க சிஐஏவும், ஜோர்டான் புலனாய்வு நிறுவனமும் பலலட்சம் டாலர்கள் பேரம் பேசி பலாவியை சம்மதிக்க வைத்து விடுதலை செய்யப் பட்டதாகத் தெரிகிறது. ஆனால், அதன்பிறகு டிசம்பர் முப்பதாம் தேதி ஆப்கனிஸ்தானில் இருக்கும் சிஏஎவின் அலுவலகத்தில் பலாவி மனித வெடிகுண்டுதாரியாகி ஏழு சிஐஏ உயரதிகாரிகளைக் கொன்ற நிகழ்வு நடந்தேறியது. (இதில் முக்கியமான வேடிக்கை, சிஐஏ உயரதிகாரிகள் எப்போதும் அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் கூடுவதில்லை.)

நியூஸ் வீக்  இதழுக்காக நேர்காணல் கண்டவர்கள்:

 துருக்கி ஆடம் டெமிர், கிறிஸ்டோபர் டிக்கி.

Bild1 berek

 

 நீங்கள் பலாவியை எப்போது சந்தித்தீர்கள்உங்களது பாரம்பரியமாக நிச்சயிக்கப்பட்டு
நடைபெற்ற திருமணமா, அல்லது நீங்கள்காதலித்து மணந்தீர்களா?

நான் இதைப் பற்றிய தகவலைத் தர விரும்பவில்லை. என் கணவர் நான் வாழ்ந்த இஸ்தான்புல் நகரில் ஒரு மாணவராக இருந்ததால். நாங்கள் தற்செயலாகச் சந்தித்தோம் (பேரகிற்கு மிகநெருக்கனவர் ஒருவரின் மூலம் இவர்கள் இருவரும் ஒரு இணைய அரட்டை மூலம் சந்தித்தாகத் தெரியவருகிறது). அதன் பின் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம், பின் ஆராய்ந்து, பின்னர் எங்கள் கருத்துகள், குடும்ப அமைப்பு மற்றும் நண்பர்கள் ஆகிவற்றின் மூலம் ஒன்று பட்டோம். பின்னர் திருமணம் செய்ய முடிவு செய்தோம். 2002 ஆம் ஆண்டு துவக்கத்தில் நான் ஜோர்டான் சென்று என் கணவரின் குடும்பத்தாரைச் சந்திதேன். அவர்களில் குடும்பத்தினருக்கு அருகில் இரண்டு மாதம் வாழ்ந்தேன். அவருடைய படிப்பும் 2002ல் முடிவடைந்தது. உடனடியாக நாங்கள் ஜோர்டான் சென்றோம். அங்கே என் கணவர் பல மருத்துவனைகளில் பணிபுரிந்தார். 2003 ஆம் ஆண்டு எங்கள் முதல் குழந்தையும் 2004 ல் இரண்டாவது பெண்ம் பிறந்தனர்.

நீங்கள் பலாவியை அவர் மாணவராக இருந்த போதே மணந்தீர்களா?

ஆம். நாங்கள் அவர் தன்னுடைய இஸ்தான்புல் மருத்துவ பல்கலைக் கழகத்தின் பட்டப்படிப்பின் இறுதியாண்டில் இருக்கும் போது மணம் செய்து கொண்டோம். அவர் துருக்கியில் ஏழு ஆண்டுகள் படித்தார். அவருடைய துருக்கிய, ஆங்கில, அராபிய மொழிவளம் மிகச் சிறந்ததாக இருக்கும். அவர் பல்கலைக்கழத்திலும் மிகுந்த திறன் படைத்த மாணவராக இருந்தார்.

அவர் துருக்கியில் பணிபுரிந்தாரா?

அவர் பட்டபடிப்பு முடிந்ததும் சென்று விட்டார். நாங்கள் ஜோர்டானில் 2002லிருந்து 2009 வரை வசித்தோம். இடைப்பட்ட அந்தச் சமயத்தில் நீங்கள்   துருக்கி சென்றீர்களா? சிலசமயம் வேனிற்கால விடுமுறையின் போது நான் துருக்கி சென்றிருந்தேன். ஆனால் என் கணவர் வரவில்லை. நாங்கள் ஜோர்டானின் தலைநகரான அம்மானில் வசித்து வந்தோம். ஈராக் அல்களிணிதாவின் தலைவர் அபு மசாத் அல் ஜர்குவாலி பிறந்த நகரத்தில் தான் என் கணவரும் பிறந்தார் என்று தவறாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், அது உண்மையில்லை. என் கணவர் பாலஸ்தீனத்தைச் சாந்தவர்,குவைதில் பிறந்தவர். குவைத் யுத்ததின் போது ஜோர்டானுக்கு தன் குடும்பத்துடன் புலம் பெயர்ந்தவர்.

புலனாய்வுத் துறை பலாவியை அணுகியதற்கு முக்கியக் காரணமாக அவர் அல்கய்தா தலைமை அல் ஜுவாகிரியை எளிதாக, மற்றுமொரு மருத்துவர் என்ற முறையில் அவர் அணுகமுடியும் என்று நினைத்தேயாகும் என்று சொல்லப்படுகிறதே, இத்தகைய குற்றசாட்டுகள் பற்றி உங்கள் கருத்து என்ன?

berek 3

நான் இவை எவற்றைப் பற்றியும் அறியவில்லை. என் கணவர் என்னிடம், தான் பாகிஸ்தானுக்கு படிக்கச் செல்வதாகச் சொல்லி இருந்தார். பின்னர் தொலைபேசியில் பேசும் போது அவருக்கும் பல்கலைக்கழத்தில் இடம் கிட்டவில்லையென்றும் அங்கேயே வேலை பார்க்க இருப்பதாகவும் சொன்னார். மேலும் முதலில் அவர் கொஞ்சநாள் தங்கி வேலை செய்தபின் என்னையும் தன்னோடு வந்துவிடச் சொல்லி இருந்தார். பலமாதங்கள் கழிந்தபின் அவர் தன்னுடைய நிலை முற்றிலும் பிறழ்ந்து போனதாகவும் பாகிஸ்தானில் படிக்க இயலவில்லை என்றும், துருக்கியில் முயற்சிக்கலாம் என்று நினைப்பதாகவும் சொன்னார். பின்னர் அவரால் வரஇயலாமல் போனாதால் என்னை துருக்கிக்குச் சென்று அங்கேயே குழந்தைகளைப் படிக்க வைக்கவும் சொன்னார். அதனால் நான் இஸ்தான்புல் வந்து சேர்ந்தேன். நீங்கள் ஜோர்டானில் இருந்த சமயம் உங்கள் வாழ்க்கையை நடத்தவோ அல்லது உங்கள் கணவருக்கு வேலை தேடவோ சிரமங்கள் எதுவும் இருந்ததா? எங்களுக்கு அங்கே பொருளாதார ரீதியாக எந்த பிரச்சனையும் இருக்கவில்லை. பொருளாதார நிலை துருக்கியை விட ஜோர்டானில் நன்றாகவே இருக்கிறது. ஜோர்டான் மக்களின் சம்பளம் துருக்கி மக்களின் சம்பளத்தை விட குறைவென்றாலும் வாழ்க்கைத் தரம் துருக்கியை விட நன்றாகவே இருக்கிறது. ஜோர்டானில் பொருட்களின் விலை சற்று குறைவு. மேலும் நாங்கள் என் மாமனார் வீட்டில் இருந்ததால் ஜோர்டானில் வாடகை கொடுக்க வேண்டிய அவசியமில்லாமல் இருந்தது. அங்கே எங்களுடைய நிதி நிலைமை மிக நன்றாகவே இருந்தது.

 உங்கள் கணவர் தனியார் அல்லது உள்ளூர் மருத்துவமனையில் பணிபுரிந்தாரா?

மிகச் சமீபமாக அவர் யுனைடட் நேஷனல் மருத்துவனையில் பணிபுரிந்தார்; அதற்கு முன் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றினார்.

உங்கள் கணவரின் ஆர்வம் எதை நோக்கி இருந்தது?

அவர் இஸ்லாமியரின் புனிதப்போர் சம்மந்தப்பட்ட இணையக் குழுமங்களின் தளங்களில் மிகுந்த ஆர்வம்கொண்டவராக இருந்தார்.ஜோர்டான் மக்கள் துருக்கி வாழ் மக்களிலிருந்து அதிகம் வித்தியாசப்பட்டனர். ஜோர்டான் மக்களுக்கு துருக்கி (இஸ்தான்புல்) மக்களினும், இஸ்லாமியப் புனிதப்போரின் மேல் மிகுந்த ஆர்வமிருந்தது. அங்கே இஸ்லாமியப் புனிதப்போரைப் புகழ்ந்து பரப்பும் பதிவுகளும், புகைப்படங்களும் மிகச் சாதாரணமாக மக்களின் வீட்டு மற்றும் அலுவலகக் கணிணிகளில் எளிதாகக் காணலாம். அரேபியர்களுக்கு இதைப் பற்றிப் பேசுவது மிக எளிதாக இருந்தது. மேலும் அவர்கள் இதைப் பற்றி ஒளிப்படங்களிலும், இணையத்திலும் பேச அவர்கள் தயக்கம் காட்டவில்லை. என் கணவரும் அவர்களைப் போலவே இருந்தார். அவர் இஸ்லாமியப் புனிதப்போரைப் பற்றி நிறையப் பேசவும் எழுதவும் செய்தார். ஆனால் அவர் தன்னுடைய குடும்பத்திலும் எங்களுடனும் பேசும் போது மிகப் பழமைவாதத்தையே பேசுவார். நாங்கள் எப்போதும் “அவர் பேசுவார் ஆனால் செய்ய மாட்டார்’ என்றே கூறினோம்.

உங்கள் கணவர் தன்னை எந்த இஸ்லாமியப் புனிதப்போர் குழுவோடு இணைத்துக் கொண்டிருந்தார்?

என் கணவர் எந்தக் குழுவைச் சார்ந்தவர் என்று நான் உறுதியாகச் சொல்ல மாட்டேன். அவர் அடிப்படை இஸ்லாமியப் புனிதப்போர் எண்ணங்களைக் கொண்டிருந்தார். இருந்தாலும் அவர் அல்கய்தாவை ஆதரித்தவோ அல்லது அதில் இணைந்து செயல்பட்டதாகவோ அல்லது இஸ்லாமிய அடிப்படைத்துவம் கொண்டவர் என்றோ நான் சொல்லமாட்டேன். தலிபான்கள் அவர் மனித வெடிகுண்டாகி வெடித்தமைக்கு பொறுப்பினைஏற்றுள்ளார்கள். இருந்தாலும் அவர் எந்த ஒரு இயக்கத்தின் தொண்டனாக பிரத்யேகமாக எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இஸ்லாமியப் புனிதப்போர் நடத்தும் குழுமங்கள் ஒரு நிறுவனம் போலிருகின்றன. தலிபான்கள் அல்கய்தாவிடமிருந்து மிக வேறுபட்டவர்கள் அல்லர். அவர்களுடைய செயல்பாடு பெரும்பாலும் ஒரே மாதிரி தான் இருக்கின்றது. நிச்சயமாக இரண்டும் வேறு வேறு குழுக்களே.என் கருத்தும் நீங்கள் சொல்வதே. தலிபான்கள் அல்கய்தாவுடன் நெருக்கிய தொடர்பிலிருப்பவர்கள்.

மனிதவெடிகுண்டாகச் செயல்படுவதற்கு எல்லா இஸ்லாமிய நம்பிக்கைகளும் ஒப்புதல் தருவதில்லை, அதற்கு வேறு விதமான நம்பிக்கைகள் தேவைப்படுமல்லவா?

 உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் என் கணவர் நிறைய எழுதுவார் அவர் எழுத்து எல்லாம்கடுமையானவையாகவே இருக்கும். அவர் எழுத்தில் தீவிர இலக்கிய மொழியாளுமை இருக்கும். அதன் காரணமாகவே நான் அவர் என்ன எழுதுகிறார் என்று வாசித்தது இல்லை. அவர் எழுதி இருப்பதைப் படிக்க வெகு நேரம் செலவளிக்கவேண்டி இருக்கும். நான் முன்பே சொன்னது போல அவர் குரானிலிருந்து இஸ்லாமியப் போர் பற்றிய வாசங்களை எடுத்துஅதை பின் தொடர்ந்து எழுதுவார். அவர் தனக்கு தானே வழிகாட்டியாகி, அந்த குரான் வாசங்களில் சொல்லப்பட்டதை கடைப்பிடிக்க முயற்சி செய்வார். அவர் குரானில் சொல்லப்பட்டிருந்ததின் அர்த்தங்களை உணர்ந்து கொள்ளவும், இஸ்லாமிய விதிகளைப் பற்றியும் அதிகம் முயற்சி செய்வார். அவர் பலவித ஆதாரங்களை ஆராய்ந்து குரானில் இஸ்லாமியப் போரைப் பற்றி சொல்லி இருப்பவற்றை உணர்ந்து வந்தார். இஸ்லாமிய மதபோதர்க, அறிவுரையாளர்களில் சில கருத்துகளோடு ஒத்தும் சில கருத்துகளோடு வேறுபட்டும் காணப்பட்டார். அதைச் சார்ந்த வாதங்களை விமர்சித்தும் அவர் எழுதி வந்தார். அவர்களுக்கு ஆயுதம் தாங்கிய இஸ்லாமியப் புனிதப்போரை நடத்தத் தேவைப்பட்ட ஆதாரங்களை, உதாரணங்களை குரானிலிருந்து தந்து வந்தார்.

உங்கள் கணவருடைய குற்றச்சாட்டு எதைப் பற்றி இருந்தது, அவர் எந்த விடயங்களுக்காகப் போராடினார்?

 “நாம் இஸ்லாமியப் புனிதப்போரை நோக்கி ஏன் செல்வதில்லை?’ என்பது என் கணவருடைய முக்கியமான குற்றசாட்டாக இருக்கும். “நாம் எப்போதும் நிறைய அதைப் பற்றிப் பேசுவோம், எழுதுவோம், ஆனால் அதை நாம் செய்வதில்லை’ என்பதே அவருடைய முக்கிய கருத்தாக இருக்கும். மக்களின் கவனத்தை இந்தக் கருத்தை நோக்கி ஈர்க்க நினைத்தார். அவர் ஆக்கிரமிப்புக்கு உள்ளான இஸ்லாமியதேசங்களை உதாரணமாகக் காட்டுவார், ஈராக் அதில் ஒன்றாகும். என் கணவருக்கு இத்தகைய எண்ணங்கள் ஈராக் போரின் பின் வலுவடைந்தது. அவருடைய இந்த மாற்றத்திக்கு ஈராக்கில் நடைந்தேறிய ஆக்கிரமிப்பு முக்கிய பங்கு ஏற்கும்.

 நீங்கள் சில சமயங்களில், உங்களுடைய கணவரிடம் இந்த விடயங்களைப் பற்றி பேசியதோ விவாதித்ததோ உண்டா?

நிச்சயமாக நாங்கள் இவ்விடயங்களைப் பற்றிப் பேசினோம். அவர் ஈராக்கில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கான அதிருப்தியைக் காட்டினார். நாம் முகமதியர்களுக்காக முகமதியர்களாக ஏதாவது செய்ய வேண்டும் என்றும் அது நம் கடமை என்றும் சொன்னார்.

 கடந்த ஜனவரியில் ஜோர்டானில் ஜோர்டான் புலனாய்வு துறை அவரைக் கைது செய்த சமயம் என்ன அனுபவங்கள் அவருக்குக் கிடைத்தன?

அவர் கைதான சமயம் ஜோர்டான் மற்றும் அமெரிக்கப் புலனாய்வுத் துறை அவரை ஒரு கண்காணிப்பாளராக மாற மனமாற்றம் செள்ததாக நம்பியது. எனக்கு அவர்களிடையே நடந்த பேச்சு வார்த்தைகள் சம்மந்தமாக எதுவுமே தெரியாது. ஆனால் என் கணவர் அவ்வளவு எளிதில் மனமாற்றம் கொள்பவரில்லை.

அவர் அல்கய்தா அல்லது தலிபான் அமைப்புகள் சார்பாக பணிபுரிந்தாரா?

தலிபான்கள் அவர் நடத்திய தாக்குதலுக்கு பொறுப்பேற்று இருக்கிறார்கள். அவர் இங்கிருந்து போகும் முன், அவர் கைதான சமயம் ஜோர்டானின் புலனாய்வுத் துறை அவரை தொடர்பிலிருக்கச் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர் மூன்றே நாட்களில் விடுதலையானார். அவ்வளவு எளிதாக கைதானவர்கள் விடுதலை ஆவதில்லை.

ஜோர்டான் அமெரிக்கப் புலனாய்வுத் துறை உங்கள் கணவருக்கு எந்தவிதமான அன்பளிப்பை அளித்திருப்பார்கள்? (என்னவிலைக்கு உங்கள் கணவர் அவர்களுக்காக வேலை செய்யச் சம்மதித்து இருப்பார்)

என்ன நடந்திருக்கும் என்று புரியவில்லை. என் அனுமானத்தின்படி ஒருவேளை இப்படிப்பட்ட போர் குணத்திற்கு ஜோர்டானில் இருப்பவர்களால் செல்ல இயலாது. அவர் புனிதப்போர் பற்றி இத்தனை பேசியும் இவ்வளவு கடுமையாக விவாதித்துமிருந்தும் இதுவே அவர்கள்  இவரை விட்டுவிடப் பெரிய காரணமாக இருந்திருக்கக் கூடும். புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள் “நீ இதை எல்லாம் விட்டு விட்டால் இந்த இந்த வசதிகள் செள்து தருவோம்’ என்று சொல்லி இருக்கலாம். அவர்கள் நிறைய வாக்குறுதிகளை அளித்திருக்கக் கூடும். பணம் கூடத் தந்திருக்கலாம். அவ்விடம் விட்டு வெளியேறும் பொருட்டு இதை எல்லாம் ஏற்றுக் கொண்டதைப் போல என் கணவர் நடந்திருக்கலாம். இதைப் பற்றி நாங்கள் பேசியதுண்டு; ஆனால் அவர் இந்த விடயங்கள் பற்றி என்னிடம் கூறியதில்லை. அவருக்கு எதுவும் அளிக்கப்பட்டதா இல்லையா என்று கூடச்சொன்னது இல்லை. எல்லாம் நடந்தபிறகு ஒருவன் மனிதனுக்கு இவை எல்லாம் வழங்கப்பட்டிருக்கும் என்று நினைவு வருவதில் கொஞ்சமும் தவறில்லை.

 ஜோர்டான் மற்றும் அமெரிக்கப் புலனாய்வுத் துறைகளுக்காக ஒரே சமயத்தில் பணிபுரிந்தாரா உங்கள் கணவர்?

 என் கணவர் இரண்டு புலனாய்வுத் துறைகளையுமேஉபயோகப்படுத்திக் கொண்டதாகவே உணர்கின்றேன். அவர் சில தகவல்களைக் காட்டி இருக்கலாம். அந்தத் தகவல்களின் காரணமாக அவ்விரு நிறுவனங்களின் நம்பிக்கையும் பாராட்டையும் பெற்றிருக்ககூடும். இதன் காரணமாகவே நிறுவனத்தின் அடிவேர் வரை அவரால் எந்தவித சந்தேகத்திற்கும் ஆளாகாமல் நுழைய முடிந்தது.

அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் நபராகவே உங்கள் கணவர் பணிபுரிந்தார் என்று உங்களால் நம்ப இயலுமா?

நீங்கள்என்னைக் கொன்றால் கூட நான் அவர் ஜோர்டான் மற்றும் அமெரிக்கப் புலனாய்வு நிறுவனங்களுக்காகப் பணிபுரிந்தார் என்று நம்பமாட்டேன். ஆனால் அப்படிப்பட்டதைப் போல ஒரு நிகழ்வு உண்மை என்றால் அதை என்னிடமிருந்து மறைத்திருக்கமாட்டார். அவரொன்றும் மலையில் வாழவில்லை. சமீபகாலமாக நிறையத் தகவல் அனுப்பிய வண்ணமே இருந்தார். ஒரு நாளைக்கு மூன்று மின் மடல்கள் அனுப்புவார். அவர் கடைசியாக அனுப்பிய மடலில் துருக்கிக்கு வர இருப்பதாக அனுப்பி இருந்தார்

அவர் பாகிஸ்தானுக்கு எப்படிச் சென்றார்? துருக்கி வழியாகச் சென்றாரா?

அவர் துபாய் வழியாகச் சென்றார். நான் என்னுடைய கணவரின் அலுவலில் தலையிடும் பெண் அல்ல. நான் தேவைக்கு அதிகமான உணர்வுகளைக் கொட்டி, “ஓ போகாதீர்கள். நீங்கள் போய் விட்டால் நான் என்னசெய்வேன்’ என்று பேசவில்லை. நான் அப்படிப்பட்டவளில்லை. நாங்கள் நிறையமுறை பேசியபோது “இப்படிச் சொல்வதற்கு கடவுள் மன்னிக்கட்டும், ஒருவேளை எனக்கு எதுவும் நேர்ந்தால் நீ எப்படி வாழ்வாய்?’ என்று கேட்டிருக்கிறார். நான் அதற்கு “கடவுள் மிகவும் பெரியவர் அனைத்தும் அறிந்தவர், அவர் ஒருவரே ஒவ்வொருவரின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் அளிப்பவர்’ என்பேன். அது என் நம்பிக்கை. இறுதியாக அது மட்டுமே நம்பிக்கை. என் நம்பிக்கையின்படி இது அவர் இறப்பதற்கான நேரம்; இதை நாம் தள்ளிப் போட இயலாது. குரானில் அப்படியே எழுதப் பட்டிருக்கிறது. சூழ்நிலை இப்படி இருக்கும் போது, எந்த நடப்பும் அதன் விளைவும் என் எண்ணங்களை மாற்ற இயலாது. நான் அவரை இந்தநிலைக்குத் தள்ளவோ அவர் உணர்வுகளை எனக்குச் சாதகமாக்கிக் கொள்ளவோ இல்லை. நாங்கள் கொஞ்சகாலம் முன் ஆப்பிரிக்கா சென்று அங்கே உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவவேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தோம். பாகிஸ்தானிலும் அதே தான் நடந்தது.அங்கே அனேகமக்கள் பெரும் உதவி தேவைப்படுபவர்களாக உள்ளார்கள். அங்கே என் கணவர் ஒரு மருத்துவராகப் பணி புரிந்ததது எனக்கு மிகவும் சந்தோசத்தை அளிக்கிறது. நான் அவரின் இந்த விருப்பத்திற்கு ஒரு நாளும் எதிர்ப்பு சொல்லி இருக்கமாட்டேன். அமெரிக்க குண்டுகளுக்கு கை,கால்களை இழந்தவர்களுக்கு என் கணவர் உதவியதையே நான் பெரும் மகிழ்வாக நினைக்கிறேன்.

அப்படியென்றால் நீங்கள் இருவரும் ஒத்தகருத்தையே கொண்டிருந்தீர்கள்?

ஆம்; நாங்கள் இருவரும் ஒத்தகருத்தைக் கொண்டதாகவே நம்புகிறேன். நானும் என் கணவரும் ஒருவரை ஒருவர் நிறையக் காதலித்தோம். நான் அவர் செயல்கள்அனைத்தையும் மதித்தேன். அவை யாவும் அவருடைய தேர்வாகும்.

அவருடைய இறப்பு எப்போது உங்களுக்குத் தெரியவந்தது?

நான் அதை எந்த ஊடகத்தின் வழியாகவும் அறியவில்லை. 2010 ஜனவரி ஒன்றாம் தேதி அவருடைய நண்பர் ஒருவர் வாயிலாக அதை அறிந்தேன். நீங்கள் இருவரும் கடைசியாக நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டது எப்போது? 2009 மார்ச் 18ஆம் தேதி அவர் கிளம்பிய தினம். அதன் பிறகு அவர் என்னுடன் தொலைபேசியில் பேசினார். நாங்கள் இணையத்தில் எளிதாக உரையாடிக் கொண்டோம்.

 நீங்கள் உங்களுக்காக என்னவெல்லாம் செய்து கொண்டிருந்தீர்கள்?

2005லிருந்து 2006 வரை நான் ஜோர்டானில் இருந்தபோது விகிட் என்ற இஸ்லாமிய தினசரியில் வேலை செய்து கொண்டிருந்தேன். அரபி ஊடகத்தில் வெளியாகும் சிலகட்டுரைகளை அவர்களுக்காக மொழிபெயர்ந்துத் தந்தேன். அங்கிருந்து வெளிவந்த பின் 2007லிருந்து 2009 வரை நான் குரான் வகுப்புகளுக்குச் சென்று வந்தேன்.

 

உங்கள் கணவர் தன்னுடைய நேரத்தை வீட்டில் எப்படிச் செலவளித்தார்?

அவர் எங்களோடு அமர்ந்திருப்பார். அவருடைய கணிணி எப்போதும் திறந்தே இருக்கும். ஒரு புறம் அவர் தன்னுடைய மருத்துவத்துறை சார்ந்த புதுப்புது விடயங்களை அறிவதில் ஆர்வமாக இருந்தார். அதே சமயம் அவர் இஸ்லாமியப் புனிதப்போர் சம்மந்தமாகவும் விடயங்கள் அவர் சிந்தனையை விட்டு அகன்றதில்லை. கொஞ்சநேரம் மருத்துவப் புத்தகத்தை வாசிப்பார்; பின் அதை மூடி விட்டு இஸ்லாமியப் புனிதப்போர் பற்றிப் பேசும் இணையங்களுக்கே திரும்ப வந்து விடுவார்.

 

இந்த இடைப்பட்ட காலத்தில் உங்கள் வீட்டிற்கு யாரும் வந்து சென்றார்களா? அவருடைய மருத்துவ நண்பர்கள் போன்றோர்?

என் கணவருடைய கருத்துகளும் நடவடிக்கைகளும் எங்களுக்கு மணமான காலத்திலிருந்தே எப்போதும் மாறியதில்லை. அவருடைய நண்பர்ள் யாரையும் வீட்டிற்கு அழைத்து வந்ததே கிடையாது. அவர் பல்கலைக்கழக நண்பர்களுடனும் வீட்டிற்கெல்லாம் சென்று அவ்வளவாகப் பழகமாட்டார். அவருடைய மருத்துவ நண்பர்களை எப்போதுமே அவர் எங்கள் வீட்டில் சந்தித்தது இல்லை. அவர்களுடன் வீட்டிலிருக்கும் போது தொலைபேசியில் கூட பேச மாட்டார். அவர் என்னுடனும் என் குடும்பம் குழந்தைகள் மற்றும் அவர் சகோதரக் குழந்தைகளுடன் மட்டுமே பேசுவார். அவருடையஅரசியல் சிந்தனைகள் என்ன? அவர் போரை ஆதரித்தார். தன்னுடன் விவாதிக்கும் யாரையும் அவர் எவ்விதத்திலாவது தன் கருத்தைத் தெரிவிக்க சமாதானம் செய்யவே முயற்சி செய்தார். அவர் ஜோர்டானின் அரசியல் மீது ஆர்வமற்றவராகவே இருந்தார். அவர் சன்னி பிரிவைச் சார்ந்த முகமதியர்; சியா பிரிவை சார்ந்தவர் அல்லர். அவர் பின்லேடன் மற்றும் தலிபான்கள் மீது இரக்கம் கொண்டிருந்தார். அவர்களுக்குக் கடுமையான போராட்டமிருப்பதாகவே விவாதித்து வந்தார்.

நீங்க பல்கலைகழத்தில் படிக்கும் போது பர்தா அணியவில்லை அல்லவா?

ஆம். நான் படிக்கும் காலத்தில் அணியவில்லை. ஆனால் திருமணம் ஆவதற்கு கொஞ்ச நாட்களுக்கு  முன்பிருந்து அணியத் துவங்கினேன்.

 நீங்கள் கணவர் மனிதவெடிகுண்டுத் தாங்குதல் நடத்தி தற்கொலை செய்து கொண்டார் என்று அறிந்தபோது எவ்வாறு உணர்ந்தீர்கள்?

 

நான் தொலைபேசியின் வாயிலாக இந்தச் செய்தியை அறிந்தேன். நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். என் கணவர் பாகிஸ்தானில் இருந்தவரை துருக்கி வர விரும்புவதாகவே தெரிவித்து வந்தார். துருக்கியின் குடியுரிமை பெறவேண்டும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் அங்கெல்லாம் குடியுரிமை பெறுவதற்கான முயற்சிகள் கொஞ்சம் சிரமமாக இருந்தது. அதனால் அவர் வந்ததும் குடியுரிமை சம்மந்தப்பட்ட விடயங்களை ஆரம்பிக்கலாம் என்றிருந்தோம். அவர் எப்போதும் “இரண்டு மாதங்கள் பொறுமையாக இருங்கள் வந்து விடுவேன்’ என்றே சொல்லிக் கொண்டிருந்தார்.
விமானங்களைப் பார்க்கும் போதெல்லாம் என் குழந்தைகள் “அப்பா வந்துவிட்டார்’ என்று சொல்வார்கள். நாங்கள் காத்திருந்தோம்
.

 

உங்கள் கணவர் இஸ்லாமியப் புனிதப்போர் நடத்த விழையும் குழுவோடு தொடர்பு வைத்திருந்த சம்மந்தம் வெறும் ஒன்பது மாதகாலமாக இருந்திருக்க முடியாது. வெகு நாட்களாக இருந்திருக்க வேண்டும். இல்லாவிடில் அவர் எல்லோரையும் இவ்வளவு எளிதாக சமாதானம் செய்து இருக்கமுடியாது அல்லவா?

 

இது உண்மையாக இருக்கலாம். அவருக்கு அல்கய்தா அல்லது தலிபானோடு நீண்ட நாட்களாகப் பழக்கமிருக்கலாம். ஆனால் அது எந்த அளவிற்கான பழக்கமென்றும் எப்போது தொடங்கியது என்றும் எனக்குத் தெரியாது. அவர் இஸ்லாமியப் புனிதப்போர் சார்ந்த அறநிலையங்களில் தன்னை இணைத்துக் கொண்டதில்லை. இஸ்லாமியக் கருத்துகள் பரிமாறும் சந்திப்புகளில் கலந்து கொண்டதில்லை. வேலையற்ற நேரங்களில் வீட்டில் மட்டுமே இருந்தார். தன் கணிணி முன்பு புனிதப்போர் சார்ந்த இணையக் குழுமங்களோடு இருப்பார்.

 சிஐஏ நிறுவனத்தினர் அவரை முன்பே தொடர்பு கொண்டிருந்தால்?

அவர்கள் தொடர்பு கொண்டார் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் முடிவைக் கவனியுங்கள். என் கணவர் அவர்களை முட்டாளாக்கியுள்ளார். அவர் தன்னைத் தானே துன்புறுத்திக் கொண்டு எதிரியை அழிப்பவாரானால் அல்லா அவருடைய மரணத்தை ஆசிர்வதிக்கட்டும்.  அல்லா ஒருவருக்கு மட்டும் தான் தன்னைத் தானே துன்புறுத்திக் கொண்டு எதிரியை அழிப்பது பற்றி தெரியும். தற்காலத்தில் இந்தமுறையானது மிகவும் கீழ்த்தரமாகி விட்டது. எல்லோரும் தங்களை தன்னை தானே துன்புறுத்திக் கொள்பவர்கள் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர். என் கணவர் தான் நம்பிய ஒன்றை செய்திருக்கிறார். அவரால் இத்தகைய தாக்குதலை வெற்றிகரமாக நடத்திக் காட்ட முடிந்தது.

 

நீங்கள் இரண்டு புத்தகங்களை அரேபிய மொழியிலிருந்து துருக்கிக்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளீர்கள். ஒன்று “பின்லேடன்: மேற்கின் சேகுவேரா’ என்பதும் மற்றுமொன்று சதாம்குசேனின் வாழ்க்கை வரலாறு ஆகும். நீங்கள் அவர்களில் கருத்தை இந்த புத்தகங்களில் ஆதரிக்கிறீர்களா?

 

பின்லேடன் சம்மந்தப்பட்ட புத்தகத்தில் நடுநிலையான பலகட்டுரைகள் இருக்கின்றன. துருக்கியில் பின்லேடன் அமெரிக்கரின் கண்ணோட்டத்தில்தான் பார்க்கப்படுகின்றார். நான் பின்லேடனை மக்கள் அரேபியரின் கண்ணோட்டத்திலும் பார்க்கவேண்டுமென்றே விரும்பினேன். பின்லேடன் தான் நம்பியவற்றை செய்யத் துணிந்த அதற்காகப் போராடும் ஒருவர் என்பதே என்னுடைய சொந்தக் கருத்தாகும். நான் அவரை மிகவும் மதிக்கிறேன். துருக்கியர்கள்  பின்லேடனை அமெரிக்காவின் கூலிப்படை என்பார்கள். அவர் அமெரிக்கரின் கூலி அல்ல. என்னுடைய கணவர் கூட அமெரிக்கரின் கூலியல்ல. அப்படி அவர் கூலியாக இருந்தால் அல்ஜுவாரியை பிடிக்க அனுப்பப்பட்டவர் எட்டு பேரை தன்னோடு மாய்ப்பாரா? அவருடைய இந்தச்செயல் அமெரிக்கக் கூலி என்று பேசப்படும் பேச்சுக்கொரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.  அமெரிக்கா ஒருவரை தீவிரவாதி என்று அழைத்தால் அந்தநபர் தீவிரவாதியாகி விடுவாரா என்ன? என் கண்ணோட்டத்தில் பின்லேடன் ஒரு தீவிரவாதியில்லை. பின்லேடனும் சரி என் கணவரும் சரி இஸ்லாமியத்திற்காகப் போர் புரிந்தவர்கள் ஆவார்கள்.

 

சிலர் மனித வெடிகுண்டாகத் தற்கொலைத் தாக்குதல் நடத்துதல் இஸ்லாமியத்தில் அனுமதிக்கப் படவில்லை என்று சொல்கின்றனர். இன்னும் சிலர் இதற்கு அனுமதி இருப்பதாகவும் சொல்கிறார்கள்; உங்களுடைய சொந்தக் கருத்து என்ன?

நாங்கள் ஆராய்ந்து அறிந்ததில் நாம் செய்யும் ஒரு காரியம் நம் எதிரியை மிகுந்த பயத்திற்குள்ளாக்கு மென்றால் அதைச் செய்யலாம், இஸ்லாமியப் பெரியோர் அறிவு சார்ந்தோர் இதையே சொல்லி இருக்கிறார்கள்.

 

உங்கள் கணவர் துருக்கியில் ஏழு வருடம் வாழ்ந்துள்ளார். இந்தநாட்டைப் பற்றி அவருடைய கருத்து என்ன?

துருக்கியில் வாழ்ந்தவரை அவர் பழமைவாதியாகவே இருந்தார்; தீவிரவாதியாக இல்லை. அவர் தீவிரவாதத்தில் பின்னரே ஈடுபாடுகொண்டார். 2004 லிருந்து 2009 வரையிலான காலகட்டத்தில் அவருடைய தீவிரவாத செயல்களை சார்ந்த எண்ணங்கள் தெளிவடைந்தன. துருக்கியில் நிலவி வரும் பொதுப்படையான சூழ்நிலை அவரை மிகவும் கவலையடையச் செய்தது. துருக்கியில் இருக்கும் மக்கள் மதம் சார்ந்த சிந்தனைகளுக்கு சற்றே அப்பாற்பட்டு இருப்பது அவருக்கு மகிழ்வை தரவில்லை. துருக்கி வாழ் மக்களின் கூற்றுபடி அவர் முகமதிய தீவிரவாதியானார்.

 

நன்றி உன்னதம் , கௌதம் சித்தார்த்தன்

 

1 Comment on “7 சிஐஏ அதிகாரிகளும் மனித வெடிகுண்டும்”

  1. I really enjoyes reading this interview.
    Thankyou for your translation.
    i find this very interesting and same time painful interview.
    Her voice is srong and very personal political view. this may be same for many islamic people specially women.Where ever strugle there is always light of truth.
    Vaishnavi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *