செல்வி சர்மலா சந்திரதாசனின் ஓவியக்காட்சி…

தகவல் சந்தியா இஸ்மாயில்

திருமறைக் கலாமன்றத்தின் ஓவியக்கூடத்தின் ஏற்பாட்டில் வளர்ந்து வருகின்ற இளம் ஓவியரான செல்வி. சர்மலா சந்திரதாசனின் ஓவியக்காட்சி; எதிர்வரும் சனிக்கிழமை (21.02.2015) காலை 10.00 மணிக்கு இல.15, றக்கா வீதி யாழ்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தின் ஓவியக்கூடத்தில் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.  இந் நிகழ்வில் ஈழத்தின் மூத்த ஓவியரான திரு. ஆசை இராசையா பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஓவியக்காட்சியை திறந்து வைப்பார். சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி கல்விவலய கல்வி அபிவிருத்தி பிரதி கல்விப்பணிப்பாளர் சு. சிறீகுமரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்.

 

செல்வி சர்மலா சந்திரதாசன் யாழ்பாணம் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவர், சிறுவயது முதல் ஓவியக் கலையில் ஆர்வம் மிக்கவராக இருந்த இவர், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் சித்திரமும் வடிவமைப்பும் துறையில் பயின்றதுடன், தற்போது அந்தப் பல்கலைக் கழகத்தில் சித்திரமும் வடிவமைப்பும் துறையில் வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகின்றார்.  இலங்கையில் பல்வேறு ஓவியப்போட்டிகளில் பங்குபற்றி பரிசில்களைப் பெற்றுள்ள இவரின் ஓவியமொன்றே கடந்த 2012 ஆம் ஆண்டு இந்தியாவில் இடம்பெற்ற camlin art competition இல் மாணவர்களுக்கான பிரிவில் இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டதுடன், விருதினையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.  இவரது ஓவியக்காட்சி எதிர்வரும் மார்ச் மாதம் 21 ஒரு மாத காலத்திற்கு திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *