“நீத்தார் பாடல்கள்”பிறழ்வுக் குறிப்புகளிலிருந்து 

சி. ரமேஷ்

நவீன சிந்தனைகளை உள்வாங்கி கட்டமைக்கப்பட்ட மரபுகளை உடைத்து வெளிக் கொணரப் படாத அல்லது புறக்கணிக்கப்பட்ட அனைத்து கூறுகளையும் உள்வாங்கி வெளிவரும் படைப்புக்கள் புதிய திசை வழி ஊடறுத்துப் பாயும் தன்மை கொண்டவை. மனித வாழ்வை ஊடறுத்து உணா;வுகளுக்கு நெருக்கமான கவிவழி இப்படைப்புக்கள் வெளிவரும் போது அவை சமூக அமைப்பின் நோக்கங்களோடு கூடிய பண்பாட்டுவயமாக்கத்தினூடாகத் தனித்தன்மைகொண்ட வீரியமிக்க படைப்பாக முகம் கொள்கின்றன. அவ்வகையில் அண்மையில் வெளிவந்த கற்பகம் யசோதரவின் ‘நீத்தார் பாடல் பிறழ்வுக் குறிப்புகளிலிருந்து’ என்னும் தொகுதி ஊழிக்காலத்தின் அடக்குமுறைக்குட்பட்ட வதைபட்ட மனிதர்களின் கொடுந்துயர்களை காவிச் செல்கிறது. யுத்தநிலத்தில் பிறந்து வஞ்சிக்கப்பட்ட மனிதர்களின் வாழ்வைப்பாடும் இத்தொகுதி பெண் சுய அடையாளப் புனைவு வழி புனிதங்கள் என கற்பிக்கப்பட்ட கற்பிதங்களைத் தகர்த்தெறிகின்றது.

2005 தொடக்கம் 2010 வரை எழுதப்பட்ட முப்பத்தாறுகவிதைகளும் அதிகாரத்தின் பெயரால் வஞ்சிக்கபட்ட மக்களின் கதையைக் கூறுகிறது. அதிகாரத்துக்கு எதிராக கிளர்ந் தெழுந்து வாழ்வு சிதைக்கப்பட்டு நீத்துப் போன மக்களின் மனவுலைச்சலைக் கோடிட்டுக் காட்டுகிறது.

மாறக்கூடியதன்மை கொண்ட அh;த்தகுறிகளால் கட்டமைக்கப்படும் கவிதை பன்முக வாசிப்பைச் சாத்தியப்படுத்தவல்லது. அர்த்தங்களுக்குள் அர்த்தம் என விரியும் கற்பகம். யசோதரவின் கவிதைமொழி ஒற்றை அர்த்தத்துக்குள் முகம் கொள்ளாமல் சொற்களின் வாயிலாக புதிய பேச்சு செயற்பாட்டை நிகழ்த்துகின்றன. புனிதங்களால் கட்டமைக்கப்பட்ட அதிகார மையங்களைத் தகா;க்கும் கற்பகம். யசோதரவின் தீக்கோழி படுகொலைகளால் மீவுருவாக்கம் செய்யப்படும் தலைமைகளைச் சாடுகிறது. தேசநலன்களை விடுத்து தேசத்தை ஆளும் தலைமைகள் படுகொலைகளின் வாயிலாக அதிகாரங்களைக் கைப்பற்றிக் கொண்ட வரலாற்றைந் சாடும் இக்கவிதை ரத்தம் குடித்து வளா;ந்த சுதந்திரப் போராட்டத்தை மீள் வாசிப்புச் செய்கிறது.

 

இரத்தம் தெறிக்கத் தெறிக்க(ப்)
“போருக்குப் பிந்தைய தெருக்களில்
நடந்த பங்கஜ விசரிநான்…
போரில் சிதைவுண்ட வதையுண்ட
என் ரத்தம் குடித்து
நிலமெல்லாம் பதம் பெற்று
பயிரெல்லாம் சடைத்தன
கொல்லுங்கடா கொல்லுங்கடா
மையத்துக்கே தலையுரிமை
மற்றவாக்கு மயிர், உரிமை”

ஓர்  ஊழிக்காலத்தின் பாடல்களாய் அமையும் நீத்தார்; பாடல்கள் அதிகாரத்தின் அடக்குமுறைக்கு இலக்காகி உயிர்நீத்தவர்களின் வாழ்வைப் பாடுகிறது. மூடுண்ட வெளிக்குள் முடக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டவா;களின் பிராத்தனைகளை எந்த தேவததூதனும் செவிசாய்த்து ஏற்றுக் கொள்வதில்லை. நடைமுறை ஒழுங்கமைப்புக்களை மீறி காவுகொள்ளப்பட்டவார்களுக்காக ஒலிக்கும் இக்குரல் மனிதப்படுகொலைகளைக் கடந்து பிணங்கள் காட்சிப்பண்டங்களாக்கப்பட்டு ஊடகங்களில் விற்கப்படுவதைக் கண்டிக்கிறது. வெறிக்கூச்சல்களால் மக்களிடத்தில் குரோத மனப்பான்மையைத் தூண்டி இனத்துவேஷத்தை வளர்க்கும் இச்செயல் ஆபத்தானது. சமூகப் பொறுப்பணர்வுக்கப்பால் அரசியலை நோக்காகக் கொண்டு நிகழ்த்தப்படும் இவ்வெறித்தனமான செயல்களை ஊடகங்கள் ஊதிப் பெருப்பிக்கின்றன.பலிக்கிடாக்கள் ஆக்கப்பட்ட மனித உடல்களை காட்சிப்பண்டங்களாக்கி தேசத்தலைவர்கள் தம்மை நிலை நிறுத்துவதை நோக்காகக் கருதி மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கைகள் அறவே களையப்படவேண்டியவை. இதனை 

“நம்பு
எவருமே கண்டிரா
எனது நிர்வாணமாக்கப்பட்ட உடல்
ஒரு பிரசாரக் கருவியாகி
பிரசுரிக்கப்பட்ட போதிலும்
நான் அழுதது அதற்கே…”

என்னும் அடிகளில் உணர்வு வடிவமாகப் பதிவு செய்யும் “இன்னுமோர் கொலை நாள்”, இராணுவத்தால். இயக்கப் பிளவுகளால், சகோதர இயக்க முரண்பாடுகளால், அவற்றுக்கிடையில் ஏற்பட்ட முறுகல்களினால் படுகொலை செய்யப்பட்டு வீதிகளில் வீசியெறியப்பட்ட பிணங்களையும் நினைவுகூருகிறது. அன்பென்பதை அறியாது கனவுகள் அழிக்கப்பட்டு சிதைவுண்ட பூமியில், திசையறியாப் போராட்டம் மனித உயிர்களைக் காவு கொள்ளும் ஆட்கொல்லியாய் மாறி உயிரிகளை அச்சுறுத்துகிறது. இராணுவத்தால். இயக்கப் பிளவுகளால், சகோதர இயக்க முரண்பாடுகளால், அவற்றுக்கிடையில் ஏற்ப்பட்ட முறுகல்களினால் அப்பாவிப் பொது மக்கள் நாள்தோறும் படுகொலை செய்யப்பட்டு வீதிகளில் பிணங்களாய் எறியப்படுகிறார்கள். அதிகாரத்தின் வெறித்தனத்துக்கு பழியாகி மண்ணில் மரணித்த மனித உயிரிகளை கற்பகம் யசோதராவின் “நீத்தார்பாடல்கள்” உள்ளுணர்வின் தடத்தில் வெளிப்படுத்தி நிற்கிறது.ஒன்பது பகுதிகளைக் கொண்ட இந்நீத்தர்பாடல்கள் கண்ணியமற்ற யுத்தத்தால் தம் குருதியை தாமே குடித்த மனித இனத்தின் வாழ்வைப்பாடுகிறது. கடந்தகால வரலாற்றுருவாக விளங்கும் இக்கவிதை பிரளயத்தின் உத்தாpப்புக்களை சாவரங்குகளின் நிகழ் புலங்களை மனித ஓலங்களாகச்; சித்திரிக்கிறது.

வென்றவனின் வரலாற்றில்
நிலத்தில் எண்களே கூடிக் கொண்டிருக்கிற
துயிலும் இல்லங்களுள் இருந்து
இளங்குறிகள், யோனிகள்
போர் செய்ய மறுக்கின்ற
பெரும் ஓலம் எழுகிறது
கணணி யுகத்துள்
அதைக் கண்டிறாத குக்கிராமங்களில்
தலைமுறைகளின் ஓலம்
வதைகளால் இறுகிய
இராணுவ முகாம்களுள் இருந்தோ
மனம் பிறழும் ஓலம்

பிரளய வெளியில் வீரம் மனிதத்தை விழுங்கிய கதையை கற்பகம் யசோதரவின் நீத்தார்பாடல்கள் தனக்கேயுரிய மொழியில் வழி மொழிகிறது.
மனிதர்களை தேடித்தேடி வேட்டையாடும் யுத்தக்களத்தில் படுகொலைகளுக்குள் சிக்கிக்கொண்டு அந்தரித்தபடி உயிர்வாழ்கின்ற வாழ்க்கை கொடுமையானது. கற்பகம் யசோதரவின் “புதைகுழி” மனிதா;களின் இயல்வாழ்க்கையை சிதைத்து மக்களை அசௌகரியத்துக்குள்ளாக்கும் யுத்தத்தைப் பாடுகிறது.

“யுத்தம் என்ன தந்தது, 
அந்த இராணுவம் என்னை வன்புணாந்தது,
எனது இராணுவம் உனது தகப்பனை
கண்ணுக்கு முன்னால் கொன்று போட்டது
தனக்கு முன்னால் மண்டையில் போட்டதால்
எனது அழகிய தீபன் வலிப்பு வந்து,
மூளை குழம்பி, குழம்பிய மூளையை திருத்து
ஒரு டிரான்சிஸ்டர் றேடியோவைத் திருத்துவது போல
யுத்தம் பழகிய பிறழ்வுகளைத் திருத்தி
உடல் இயந்திரத்தை இடையிடையே ஸ்தம்பிக்காது
ஓடச் செய்.
அவள் நான் தலையிலடித்து அழுகிறாள்
புதை குழியை ஐ.நா திறந்து திறந்து மூடுகிறது…”

வன்மங்களாலும் தந்திரங்களாலும் காவுகொள்ளப்பட்ட பு+மியின் மனச்சிதைவுகளையும் காயங்களையும் அவலங்களையும் வெளிப்படுத்தி நிற்கின்றன கற்பகம் யசோதரவின் கவிதைகள். ஐ.நா.சபை வாய் மூடி மௌனித்த நிலையில் அதிகாரத்தின் குரூர பசிக்கு இரையாகிப் போன மனிதா;களின் சிதைந்த வாழ்வைப் பேசுகின்றன இக்கவிதைகள். தன்னைச் சூழவுள்ள தேசம், அதன் போக்குகள் குறித்து எதுவித அக்கறையுமின்றி ஏகாதிப்பத்திய நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு செயற்படும் அமக்காவைக் கண்டிக்கும் கவிதையே ஐக்கிய அமொpக்க இராணுவம் ஓ ஐ.நா. அறிக்கை. தனக்கு அச்சுறுத்தலாக உள்ள நாடுகளின் மீது பயங்கரவாதம் என்னும் பெயாpல் படையெடுக்கும் அமொpக்கா மனிதநேயமற்று செயற்படும் தன்மையை இக்கவிதை கண்டிக்கிறது. தேசநலனுக்காக பிறநாடுகளைக் கைப்பற்றி அதன் இறைமையைச் சிதைத்து அறமற்ற பணிகளில் ஈடுபடும் அமெரிக்காவை
“ஏ.. அமெரிக்க இராணுவமே, நீ படையெடுத்த நாட்டின்
பெண்களை என்ன செய்வாய் என்றெமக்கு – உன்
சீ. என். என். சொல்லத் தேவையில்லை”
(இந்திய இராணுவம் சொல்லித் தந்தது)

என்னும் அடிகளுக்கூடாக இந்தியாவை ஆதாரங்காட்டி இக்கவிதை சாடுகிறது.

1933க்கும் 1945க்கும் இடையிலான காலப்பகுதியில் ஹிட்லா; தலைமையிலான தேசிய சோ‘லிஸ்டுகள் யூதமக்களுக்கும் தங்களுடைய அரசியல் எதிரிகளுக்கும் இழைத்த அநீதிகள் மனித குலவரலாற்றில் மகாபயங்கரமானவை. திட்டமிட்ட முறையில் இவர்கள் நச்சுவாயு கூடங்களில் கொல்லப்பட்டனர் . இப்பின்னனியை மையப்புலமாகக் கொண்டு இயங்கும் ‘டஹ்கவ்வை அறிதல்’ என்னும் கவிதை ஈழத்தின் வரலாற்றுச் சுவடுகளுக்கூடாக தன்னை முன்மொழிகிறது. முகாங்களில் எழும் கதறல்களையும் குருதி படிந்த நாட்களின் வலிகளையும் இக்கவிதை பதிவு செய்கிறது. கனடிய குடியுரிமை பெற்ற ‘ஓமர் காடர்’ குழந்தை போராளியாக கைதுசெய்யப்பட்டு குவான்ரனமோ குடா சிறையில் அடைக்கப்பட்டார். தம் இருபத்தோராவது வயதிலேயே தம் சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். குழந்தைப் போராளிகள் போhpல் ஈடுபடுத்தப்படுவதைக் கண்டிக்கின்ற மேற்குலகம் ஒரு குழந்தைப் போராளியாகக் கைது செய்யப்பட்ட ஓமர் கடார் என்னும் சிறுவனைக் கருத்தில் கொள்ளவில்லை. மௌனிகள் ஆக்கப்பட்ட வெளித்தேசமோ ஓமர் கடார் போல எம் தேசத்தில் அடைக்கப்பட்ட சிறுவர்களை கண்டு கொள்ளவில்லை. சிறையில் வதையால் துன்புறும் எம் குரல்களுக்குச் செவிசாய்கவில்லை.

கண்டும் காணாதிருக்கும் அதிகார வர்க்கத்தை நோக்கி 
“முலையை உறிஞ்சியபடி நித்திய அமைதியில்
உறங்கிப் போன பிள்ளைகள்
இரத்த வெள்ளத்தில் எற்றுண்டு போகு முன்னே
எங்களை அறியுங்கள்
எங்களுடன் பேசுங்கள்
நாங்கள் இருக்கிறோம் என்பதை காணுங்கள்”

எழுப்பும் இக்குரல் “குற்றங்களை காணாதிருத்தல்” கவிதையில் நெஞ்சைக் கசக்கி பிழியும் ஓலமாய் ஒலிக்கிறது.கற்பகம் யசோதரவின் குரல் அநீதி கண்டு பொங்கி எழும் குரல். வலிகளையும் வேதனைகளையும் தாங்கி எழும் அந்தராத்மாவின் குரல். இக்குரல் பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிகண்டு கோபவாவேசத்துடன் “கலாசார இயக்கத்துக்கு பாராட்டு” கவிதையிலும் ஓங்கி ஒலிக்கிறது. உயிரைப் பணயம் வைத்து இடம்பெயர்ந்து செல்லும் கடற்பயணத்தின் கொடுமையான அனுபவங்களின் வலியே “கள்ளத்தோணிகள்”. கோணமலையிலிருந்து புறப்பட்ட குடும்பமொன்று கொந்தளிக்கும் அலைகளுக்கிடையில் படகு மூழ்கி இறந்ததைப் பாடும் இக்கவிதை உயிர் குறித்தான கரிசனையின்றி மேய்பவர்களால் காவுகொள்ளப்படும் உயிர்களையும் அதன் ஓலத்தையும் பாடுகிறது.
கந்தகநெடியால் சூழப்பட்ட பூமியும் அனுதினம் காவு கொள்ளப்படும் மனித உயிர்களும் 

“…யோனியை மூடியுள்ள யுத்த நிலங்களின் கரும்வேர்கள்
நஞ்சையே உறிஞ்சுகின்றன.இயற்கையின் விளைவில் கசியும் திரவம்
நஞ்சாகி உள் நுழைகையில் 
பிள்ளைகள் திரும்பியிரா 
சாமங்களில்
நெஞ்சு வெடிக்க கத்துகிறேன்.

அழகிய படிமங்களுக்கூடாக கட்டுறும் “என் புத்தனே” என்னும் கவிதை சாவின் விளைச்சலுக்குள் புதையுண்ட பூமியில் எம்மை இரட்சிக்க வரும்படி ஆயுதம் தாங்கிய புத்தனிடம் மன்றாடுகிறது.வன்மத்தின் உள்ளார்ந்த வெளிப்பாடு இக்கவிதையில் ஆயுதம் தாங்கிய புத்தரின் முரண்நகையாக தோற்றம் கொள்கிறது.  தனித்துவம் தீவிரமும் கொண்ட கற்பகம் யசோதரவின் கவிதைகள் விடுதலையின் உணர்வினால் வஞ்சிக்கப்பட்டவர்களின் துயரங்களைக் வாழ்வின் குரூரங்களையும் வெளிப்படுத்தி நிற்கின்றன. சமூகத் தணிக்கைக்கு உட்படாத சுதந்திர மொழியில் பிறநாடுகளின் அனுபவங்களை ஈழத்தின் போரியல் சூழலில் வைத்து நோக்கும் இக்கவிதைகள் கடந்தகால யுத்தசூழ்நிலையின் நிலைமாற்றத்துக்கான நகர்வை சுட்டிநிற்கிறது. உணர்ந்தவர்களின் எதிர்வுகொள்ளலாக பகிர்தலின் வெளிப்பாடாக அமையும் இக்கவிதாவெளி ஆளுமையின் தன்னிலை மிக்க அடையாளத்தை போரின் வழி நிறுவி செல்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *