தூப்புக்காரி மலர்வதியுடனான நேர்காணல்

 கேள்விகள் -றஞ்சி -பதில்கள் –  மலர்வதி

அது பத்திரிகைக்காக… பிறருக்காக எழுதியதில்லை.. எனக்காக என் இற்றலுக்காக, என் கண்ணீரின் உரத்தின் துணையாக எழுதி எழுதி இரும்புப் பெட்டியில் வைத்து விடுவேன். புத்தகமாக்க வேண்டும் அது வெளி வர வேண்டுமென்று நினைக்கவே மாட்டேன்.. விழி நீர் ஓழுகும் போதெல்லாம் என்னருகில் எனக்கு இற்றலாக இருந்தது, இருப்பது காகிதங்களும் பேனாவும் தான். அப்படி தான் என் தூப்புக்காரியும் எனக்குள் பிறந்தாள்.

எத்தனை பக்கங்கள் ஆந்த பிஞ்சு முகங்களில், அங்கு தெரிந்த சின்னஞ்சிறு சிறுவர்கள் கூட தூப்புக்காரி புதினத்தை வாசித்து அதிலிருந்து எழுப்பிய வினாக்கள் வியப்பில் ஆழ்த்தியது. என் கைத் தொட்டு பேச துடித்த அவர்கள் பாசங்கள்… அவர்களின் வாழ்வியல் எதார்த்தத்தின் பதிவுகள் என்னை நடுங்க வைத்தது.. ஓரு தலித்தாக பிறப்பதின் ரணம் அங்கு அந்த சின்ன சிறுவர்களிடம் கண்டு உறைந்துப் போனேன். அவர்கள் கூறினார்கள் வகுப்பறைகளில் கூட நாங்கள் நிராகரிக்கபடுகிறோம், சோற்றுக்கும் மலத்திற்கும் எங்களுக்கு வேறுபாடில்லை.. எங்கள் முன்னோர்களெல்லாம் (பாட்டி, தாத்தா) தெருவீதியில் மலங்களை அள்ளி சுமப்பதைப் பார்க்கிறோம், சாக்கடையின் அருகே எங்கள் குடிசைகள்.. எங்களைச்சுற்றி கொசுக்கள்.. ஓயாத நாற்றம் இதைத்தாண்டி எங்கள் வாழ்வு வெளிச்சத்திற்கு வருவதே இல்லை. அதற்கு தான் கல்வியைத் தேடி வந்திருக்கிறோம்…

தங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தை ஊடறு வாசகர்களுக்காக…?

தங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தை ஊடறு வாசகர்களுக்காக…?தங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தை ஊடறு வாசகர்களுக்காக…?எனது இயற்பெயர். இ. மேரிபுளோறா. காத்திருந்த கருப்பாயி என்ற புதினத்தின் வழி புளோறா என்ற அழைப்பு பெயரை தமிழாக்கம் செய்து மலர்வதியாக்கி கொண்டேன். இந்தப்புனைப் பெயர் வைக்க தக்கலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர். ம. பென்னி உறுதுணையாக இருந்தார். கட்டுரைச் சார்ந்த நூல்கள் புளோறா ஏன்ற பெயரிலே வெளிவந்தது.. என்னுடைய படைப்புகள் நூல் வடிவமாக வந்தது மொத்தம் அய்ந்து. அதில் இரண்டு புதினங்கள்.. மூன்று சமயம் சார்ந்த கட்டுரை நூல்கள். என் அம்மா பெயர் எம். ரோணிக்கம், அப்பா பெயர். ஜி. ஏலியாஸ், ஓரு சகோதரன் உண்டு, அவர் பெயர் இ. ஸ்டிபன், ஓரு சகோதரி உண்டு. அவர் பெயர் திருமதி. இ மேரிலதா. இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது.

இளம் எழுத்தாளர்களுக்குரிய சாகித்திய அகாடமி விருது பெற்றுக் கொண்ட போது உங்கள் மன உணர்வு எப்படியாக இருந்தது.?

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் தூப்புக்காரி புதினத்தைப் படைக்கும் போது மறைந்திருந்கும் இந்த மலர்வதியை உலகம் கண்டு கொள்ளும் என்று நினைக்கவே இல்லை. முறையாக கற்றுக் கொண்டு இது தான் இலக்கியம் என்று எழுத வந்தவளில்லை நான்;, இதை நான் மறுக்காமல் ஓப்புக் கொள்ள வேண்டும். என் எழுத்தின் சக்தி மனிதவாசிப்பு தான். சிறு வயதில் காதிதத்துண்டுகளில் கவிதை எழுதும் போதோ அல்லது இயற்கையைப் பற்றி எழுதும் போதோ நாடகங்கள் எழுதும் போதோ என்னுடன் இருக்கும் என்தோழிகள் எவ்வளவு நன்றாக எழுதுகிறாய் என்று சொல்லும் போது நினைப்பேன்.. இந்த உலகில் எல்லோருக்கும் எழுத வரும். எல்லோரும் எழுதுவார்கள்.. ஏன் என்னை மட்டும் இவர்கள் சொல்லுகிறார்கள் என்று எனக்கு வரும் பாராட்டை எனக்குள் கொண்டு சென்றதே இல்லை..நாட்கள் போக போக என் சிந்தனையில், வாழ்க்கையில், வார்த்தையில் நான் மற்றவர்களிடமிருந்து விலகித் தெரியும் போது சராசரியிலிருந்து விலகி நிற்கும் போது எனக்குள் ஏதோ இருக்கிறது என்று உணர்ந்தேன். எனக்கு வௌரம் தெரிந்ததிலிருந்து எழுதினேன்.

அது பத்திரிகைக்காக… பிறருக்காக எழுதியதில்லை.. எனக்காக என் இற்றலுக்காக, என் கண்ணீரின் உரத்தின் துணையாக எழுதி எழுதி இரும்புப் பெட்டியில் வைத்து விடுவேன். புத்தகமாக்க வேண்டும் அது வெளி வர வேண்டுமென்று நினைக்கவே மாட்டேன்.. விழி நீர் ஓழுகும் போதெல்லாம் என்னருகில் எனக்கு இற்றலாக இருந்தது, இருப்பது காகிதங்களும் பேனாவும் தான். அப்படி தான் என் தூப்புக்காரியும் எனக்குள் பிறந்தாள். இந்த புதினம் வெளிவருவதற்கு முன்பு இப்புதினத்தின் அணிந்துரைக்காக சாகித்திய ஆகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பொன்னீலன் அவர்களை நாடி நின்ற போது…

அவர் தூப்புக்காரியை வாசித்து விட்டு தந்த முதல் விமர்சனம், நீ என் இலக்கிய மகள், இந்த வயதில் என்னையும் மிஞ்சி விட்டாயே என்று அவர் கூறிய போது அவர் கண்களில் மினுங்கிய கண்ணீர்த்துளிகள் எனக்கான முதல் வாசலாக இருந்தது.

malrwathy2

அதைப் போன்று எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமியின் அணிந்துரை இலக்கிய உலகில் அடையாளம் இல்லாத எனக்கு முகவரியாக அமைந்தது..அதன் பின்பு இந்த புதினம் தமிழகம் முழுவதும் சலனங்களை உருவாக்க என்னையே நான் கிள்ளிக் கொண்டதுண்டு. நான்கு சுவருக்குள் அமர்ந்து என் மனவானின் ஏண்ணங்கள் விரிந்துப் போக யாருக்கும் தெரியாமல் எனக்கு நானே இரசித்தும் கலங்கியும் வெறும் இருநூறாம் பக்கத்தில் வெட்டியும், குறுக்கியும் பென்சில் கொண்டும், பேனாக் கொண்டும் எழுதிய புதினம் சாகித்திய அகடாமி வாசலைத் தட்டி திறந்து விட்டதா என்பது இன்றளவும் ஆச்சரியமே.. இது எனக்கான அடையாளத்தைப்
பெற்றுத்தந்த விருது. இன்னும் எழுத்துப்பயணம் நிறையவே இருக்கிறது தொடர்ந்து வா என்பதற்கான ஓரு வாசலாக இவ்விருது அமைந்திருக்கிறது.

?.ஓரு சமூகம் தன்னுடைய தூய்மையை, சுத்தத்தை காப்பாற்றிக் கொள்ள தலித்துக்களை இந்த உலகின் ஓரத்திற்கே தள்ளி விட்டது என்ற கருத்தில் உடன்படுகிறீர்களா?

இது காலம்காலமாக உள்ள சிக்கல். தொழில் என்று உருவானதோ அன்று சாதியும் உருவாகி விட்டது. இயற்கையில் பிளவில்லை.. அதன் படைப்பில் வேற்றுமையில்லை. மனிதன் உருவாக்கிய சாதி ஓரு சிலரை அடிமைப்படுத்துவதில் வன்மையான கண்டிப்பு எப்போதும் எனக்கு உண்டு.

சமீபத்தில் நான் மதுரையில் ஓரு நிகழ்வுக்கு சென்றிருந்தேன். சக்தி விடியல் என்ற அமைப்பு சாக்கடை சுத்தம் செய்பவர்களின் குழந்தைகளுக்கு கல்வி விழிப்புணர்வு கொடுக்க கூடிய ஓரு அமைப்பு. இந்த அமைப்பை திரு.ச. எம் ஜேசுதாசன் என்பவர் வழிநடத்தி வருகிறார். இங்கு கற்று வந்த பல தலித் மாணவர்கள் உயர்கல்வி கடந்து கல்லூரி படிப்பையும் முடித்து தற்போது பொறியாளராக இன்னும் சிறப்பான உயர்நிலையைத் தொட்டுள்ளார்கள் என்பது மகிழ்ச்சியே.. கல்வி அனைத்து சாதீய கட்டமைப்பையும் தகர்த்து விடும் என்ற நிலையில் உள்ள அமைப்பில் நான் அங்குள்ள சிறுவர்களை சந்தித்து அவர்களோடு உரையாட அழைக்கப்பட்டேன்.

எத்தனை பக்கங்கள் ஆந்த பிஞ்சு முகங்களில், அங்கு தெரிந்த சின்னஞ்சிறு சிறுவர்கள் கூட தூப்புக்காரி புதினத்தை வாசித்து அதிலிருந்து எழுப்பிய வினாக்கள் வியப்பில் ஆழ்த்தியது. என் கைத் தொட்டு பேச துடித்த அவர்கள் பாசங்கள்… அவர்களின் வாழ்வியல் எதார்த்தத்தின் பதிவுகள் என்னை நடுங்க வைத்தது.. ஓரு தலித்தாக பிறப்பதின் ரணம் அங்கு அந்த சின்ன சிறுவர்களிடம் கண்டு உறைந்துப் போனேன். அவர்கள் கூறினார்கள் வகுப்பறைகளில் கூட நாங்கள் நிராகரிக்கபடுகிறோம், சோற்றுக்கும் மலத்திற்கும் எங்களுக்கு வேறுபாடில்லை.. எங்கள் முன்னோர்களெல்லாம் (பாட்டி, தாத்தா) தெருவீதியில் மலங்களை அள்ளி சுமப்பதைப் பார்க்கிறோம், சாக்கடையின் அருகே எங்கள் குடிசைகள்.. எங்களைச்சுற்றி கொசுக்கள்.. ஓயாத நாற்றம் இதைத்தாண்டி எங்கள் வாழ்வு வெளிச்சத்திற்கு வருவதே இல்லை. அதற்கு தான் கல்வியைத் தேடி வந்திருக்கிறோம்..

malarwathyஅதில் சில பெண்சிறுமிகள் என் மனத்திரையில் இன்னும் பதிந்துக் கொண்டு நிற்கிறார்கள்.. அவர்கள் கேட்ட கேள்வியின் ரணம் இன்னும் உரமாக இருக்கிறது. வருங்காலம் பயமாக இருக்கிறது.. இது உங்கள் வாரிசு வேலையென்று எங்கள் மீது சுமத்தி விடுவார்களோ என்று பயப்படுகிறோம். எங்கள் நிலை எங்கள் தாயைப் போல் எங்கள் மேல் சுமத்தப்படுமோ என்று அஞ்சி அஞ்சி தான் வாழ்கிறோம் என்ற போது, நான் சொன்னேன்.. கல்வியில் வளரும் போது எவரும் இது தான் உங்கள் தொழில் என்று உங்களைக் கட்டாயப்படுத்த முடியாது.. எல்லோருக்கும் கல்வி, கல்விக்கேற்ற வேலை அப்படியென்றால் இங்கே சாதி சார்ந்த தொழில் நாளடைவில் நலிந்துப் போய் விடும் என்றேன். இன்றளவும் தலித்தியத்தின் மீது சுமத்தப்படும் தொழில் சார்ந்த பின்னடைவு குறைய வில்லை.. சுத்தம் என்று தங்களை சமூகத்தில் காட்டிக் கொள்பவர்களின் மனச்சாக்கடையை கழுவ எந்த பினாயிலும் இல்லை.

?.தூப்புக்காரி புதினம் என் சொந்தக்கதையல்ல, என் சொந்தங்களின் கதை என்ற போது மக்களின் மனநிலை

ஓரு இலக்கியவாதிக்கு எல்லா மனிதர்களின் வலிக்குள்ளும் சென்று அமரமுடியும். அந்த வலியை தன் வலி போல் உணரமுடியும். அந்த உணர்வு இருந்தால் தான் அவன் படைப்பாளி. எங்கோ ஓன்றைப் பார்த்து விட்டு, அதற்கு கற்பனைக் கொடுத்து அதைப்புனைந்துக் கொடுப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை.. அதற்குள் படைப்பாளியின் உயிரும் உணர்வும் கலந்திருக்க வேண்டும். என் தூப்புக்காரி என்னில் பிறக்க பல காரணங்கள் இருந்தன.. மருத்துவமனைகளுக்குப் போகும் போது அங்குத் தெரியும் துப்புரவு தொழிலாள பெண்கள்.. அவர்களின் சிரித்த முகங்களுக்குள் மறைந்திருக்கும் வாழ்க்கை வலி.. அதைப்போன்று அன்றாடம் நாம் பார்க்கும் சாக்கடைத் தொழிலாளிகளின் மலர்ந்த முகம்.. அழுக்கில் பின்னப்பட்டு நின்றாலும் அவர்களின் எதார்த்த மன அழகை நான் இராதித்ததுண்டு.

என் சிறு பருவத்தில் என் அம்மா எங்கள் வீட்டின் பக்கத்தில் இருக்கும் நடுநிலைப்பள்ளிக்கூடம் ஓன்றில் பள்ளிக்கூடத்தை துப்புரவுச் செய்யும் பணியை செய்தார்கள்.. நான்கைந்து ஆண்டுகள் அந்த பணியை செய்து விட்டு, அதன் பின் அதே பள்ளியில் சத்துணவு ஆயாகவாக பணியாற்றி தற்போது ஓய்வும் பெற்று விட்டார்கள். இவ் நிறுவனத்தில் சாதியம் இல்லாத துப்புரவுத் தொழிலே சில பின்னடைவுகளை கொடுத்ததை நான் என் பிஞ்சுப் பருவத்தில் கண்டதுண்டு.. அப்படியென்றால் சாதியின் பெயரால் இத் தொழில் புரிபவர்களை ஈந்த ஊலகம் ஏப்படி மதிக்கும் ஏன்னென்ன ஈழிநிலைகளை வாரி இறைத்திருக்குமென்பதையும் நான் உணர்ந்துக் கொண்டேன்.

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை சாதிய மோதல்கள் இல்லை, இவர்களுக்கு இது தான் என்று தொழில் இல்லை.. பிழைப்புக்கான தொழிலாகத்தான் அடிமட்ட தொழிலையும் செய்து வருகிறார்கள். இங்கு பெருக்கெடுத்து ஓடும் சாக்டைகள் குறைவு, நாகர்கோவில் பெருநகரத்தில் சாக்டையைக் காணலாம்.. தக்கலைப் பக்கம் போனால் சாலைத்துப்புரவாளர்களைக் காணலாம்.. பெருக்கெடுத்து குவியும் ஆழுக்குகள் பெருநகரங்களில் எனும் போது என் ஊரைச்சுற்றிய பகுதியில் மருத்துவமனைகள் தான் திகம்.

இங்கு மருத்துவமனைகளைச் சுத்தம் செய்ய போகும் தாய்மார்கள் சாதியம் கடந்தவர்கள். என் அம்மா சாதிக்குள் உட்பட்டு நின்று செய்த தொழில் இல்லை. நான் பிறப்பில் தலித் இல்லை. இதை ஏன் குறிப்பிடுகிறேனென்றால் எழுத்தாளர் அம்பை எனக்கு நன்கு அறிமுகமான எனக்கு வழிகாட்டிப் போல் இருப்பவர்கள். அவர்களிடம் சில புகார்கள் சென்றிருக்கிறது. தலித் இல்லாத ஓருவராக மலர்வதி இருக்கும் போது தலித் சார்ந்த பாராட்டை அவர் பெற்றுக் கொண்டிருக்கிறார் , இதை நீ மறுத்தாக வேண்டுமென்றார்.

ஓரு தலித்துக்கு கிடைக்கும் அடையாளம், பாராட்டு எதுவும் நீ அந்த இடத்தில் நின்று வாங்க கூடாது என்றார்.. நீ எழுத்தாளர்.. மனித வலிகளை அதன் உக்ரத்தை யார் அனுபவித்தாலும் அதை பதிப்பிக்கத் துணிந்த எழுத்துப் போராளி அவ்வளவு தான். ஏல்லாவற்றிற்கும் மேலாக நீ மனிதன். இது தான் என் கருத்தும்..

அதனால் தான் குறிப்பிட்டேன் தூப்புக்காரி என் சொந்தங்களின் கதையென்று.. நான் வாழும் சமூகத்தில் தலித் என்ற அடையாளம் பெற்று எவரும் இல்லை.. இங்கே பணத்தின் பெயரால், படிப்பின் பெயரால் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளும் தலித்திய வலிகளே.. பாதிக்கப்பட்ட அத்தனைப் பேரும் என்னைப் பொறுத்தவரை தலித்துகள் தான்.

நம் காலத்தின் முன்பு தொக்கி நிற்கும் மிகப்பெரிய கேள்வி இந்த தேசிய அவமானத்தை துடைக்க சட்டம் மட்டும் போதுமா? இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

வாழ்வுக்கு உதவாத சட்டம் யாருக்கு வேண்டும். சட்டம் இயற்றுவது எளிது… இதனால் அதன் கடினத்தை சுமப்பவர்கள் நலிவுற்றவர்களே. எல்லாவற்றிலும் வளர்ச்சி, எல்லாவற்றிலும் முன்னேற்றம் என்ற வளர்ச்சியின் கூப்பாடுகள் கேட்கிறது. ஓரு நிமிடம் எங்கு வளர்ச்சி? சோலைகள் இருந்த இடத்தில் உயர்ந்த கட்டிடங்கள் வளர்ந்து நிற்கிறது. கல்வி வளர்ந்து நிற்கிறது.. இதனால் தனி மனித வளர்ச்சி எங்கே வளர்ந்து நிற்கிறது. அவனவன் அழுக்கை அவனவன் சுத்தம் செய்ய கடமைப்பட்டுள்ள போது, அழுக்கை சுத்தப்படுத்துபவன் எப்படி கீழ்மட்டவன் ஆக முடியும்? அதைப் போக்க சட்டம் மட்டும் போதாது, எல்லா இழிநிலைக்கும் ஓரே ஓரு மருந்து மனித மதிப்பு. பிறந்த இடங்களும் சூழ்நிலைகளும் மாறிப் போயிருக்கலாமே தவிர மனிதமாண்பில் சிதைவில்லை. சட்டம் என்பது வாழ்வுக்கு இன்று உதவிக் கொண்டிருக்கிறதா என்பதை இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

இழிநிலை என்ற மனிதக் கழிவுகளை அகற்ற பெண்களே ஆதிகம் பயன்படுத்தப் படுகிறார்கள் இதைப்பற்றி உங்கள் கருத்து?

இந்த உலகம் பெண்களை இன்னும் இரண்டாம் நிலையில் பார்த்துக்கொண்டிருப்பதின் சாட்சிய நிலைதான் பெண்களை அதிக அளவிற்கு இதில் இழுத்துப்போட்டிருக்கிறதோ எனத் தோன்றுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் அத்தனை பேரும் தாழ்த்தப்படவர்களாக இருக்கும் போது, பாதிக்கபடும் பெண்களும் அதில் அடங்கிப் போகிறார்களோ எனத்தோன்றுகிறது. குடும்பம், குழந்தைகள் என்ற பொறுப்பு அதிக அளவில் பெண்களிடம் ஓப்படைக்கப்படுவதால், அவள் தாய்மைக்கு அதிக அளவு கடமை இருப்பதாக கூறப்படுவதால் கணவன் குடிகாரனாக, கையலாகதவனாக, நோயுற்றவனாக, இறந்துபோய்விட்டவனாக இருக்கும் போது அதிக பாரம் பெண்மீது வந்து விழும் போது கல்வி என்ற தன்னம்பிக்கை பின்புலமாக இல்லாமல் இருக்கும் போது, மலம் ஓட்டினால் என்ன? அழுக்கு உண்டால் என்ன? ஏதோ தங்கள் குழந்தைகள் உயிர்வாழ வேண்டும் என்ற பாசத்தில் அதிக அளவில் இதில் சிக்குண்டுப் போகிறார்கள்.

இது மாறிப் போகவேண்டுமென்பது என்னுடைய மட்டுமன்று பலருடைய விருப்பமாக இருக்கிறது. எப்போதுமே பெண் தன் சக்தியை ஆற்றலை பிறரிடம் வைக்கும் போது அவள் பலமற்றுப் போகிறாள். பெண்ணுக்கு இன்று நகையோ, பட்டாடைகளோ, அவசியமாக வேண்டாம். ஆனால் அவசியமாக கல்வி வேண்டும். அது அவளுக்குள் ஓளிரும் போது ஈந்த சமூகம் கொடுக்கும் இழி நிலைக்குள் முடங்க வேண்டிய கட்டாயம் இல்லை.

அடுத்த படைப்பைப் பற்றி?

தூப்புக்காரி எழுதியது வரை நான் இலக்கியவாதியா என்று தெரியாத நிலையில் இருந்ததால் எனக்கு அதிக பொறுப்பு இருந்ததாகத் தெரியவில்லை.. கடந்த ஓன்றரை ஆண்டுகளாக நான் சந்தித்த மனிதர்கள், கண்டுக்கொண்ட பெண்கள், அவர்கள் என்னோடு பகிர்ந்துக் கொண்ட கண்ணீரின் காயங்கள், அவர்கள் வலிகளின் உள்ளாழங்கள், கரம்பற்றி நம்பிக்கை கேட்டுக்கொண்ட நிமிடங்கள் என்னை கனக்கசெய்தது.. இன்னும் எழுது என்ற உத்வேகத்தை தந்தது.

நான் சந்தித்துக் கொண்ட பெண்களின் வலிகளை எழுதி இந்த உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட எனக்கு வாழ்நாட்கள் போதாது. நான் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது.. ஓங்கி வந்த அழுகையை உள்ளங்கையில் அடக்கிக் கொண்டு முகம் சிவக்க அமர்ந்திருந்த பெண், என்னில் சாய்ந்துக் கொண்டு அழுத கல்லூரி மாணவிகள், அறியாப்பருவத்தில் பிள்ளைப் பெற்று கணவனின்றி வாழும் அந்தப் பெண், தன் கணவன் ஆயிரம் தரம் அடித்தாலும் அவனை வெளியேற்ற துணிவில்லையென்று சிரித்துக் கொண்டு கூறிய அவள்.. எட்டு வயதில் உடலளவில் பாதிக்கப்பட்ட பெண்… இன்னும் பல பல பரிணாமங்களுடன் என்னைத் தொட்டப் பெண்களின் வலிகளை .ந்த உலகம் அறிந்துக்கொள்ள அடுத்த படைப்பை செதுக்கியுள்ளேன்.. சீக்கிரம் அது வெளிவரும்.

ஊடறுவில்

தூப்புக்காரி: விளிம்புநிலை மனுசியின் குரல்

“தூப்புக்காரி” என் சொந்தக்கதை மட்டுமல்ல, என் சொந்தங்களோட கதை

1 Comment on “தூப்புக்காரி மலர்வதியுடனான நேர்காணல்”

  1. அருமை மலர்வதி. உங்கள் பதிலில் ஒவ்வொரு வரியிலும் வலியும் கையறு நிலையும் தெள்ளென தெரிகிறது. ஒரு விஷயம் சொல்ல வேண்டும். என்னதான் நாம் பாடுபட்டாலும் சம்பந்த பட்டவர்களும் அந்த இழி நிலையிலிருந்து வெளி வர முன் வர வேண்டும். அதற்கு அவர்கள் துணிய வேண்டும். அந்த துணிச்சலை உங்கள் எழுத்து தரவேண்டும்.

    அருமையான நேர்காணலை தந்த ஊடறு ரஞ்சி மேடத்திற்கு நன்றியும் அன்பும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *