கர்நாடக கோயிலில் தலித் பெண்கள் அர்ச்சகர்களாக நியமனம்

Lakshmi

கர்நாடக மாநிலத்தின் மங்களூருவிலுள்ள குத்ரோலி ஸ்ரீ கோகர்ண நாதேஸ்வரர் கோயிலில் கணவனை இழந்த தலித் பெண்கள் இருவர் அர்ச்சகர்களாக திங்கள்கிழமை நியமிக்கப்பட்டனர். நூறாண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் கோயிலில், கணவனை இழந்த எஸ்சி-எஸ்டி சமூகத்தைச் சேர்ந்த சந்திராவதியும், லட்சுமியும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை நுழைவு வாயிலில் வந்து வரவேற்ற கோயில் நிர்வாகத்தினர், பின்னர் கோயில் கருவறைக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் இந்த 2 பெண்களும் பூஜைகள் நடத்தியதுடன், பிரசாதங்களும் வழங்கினர்.

முன்னதாக, இதேபோன்று கடந்த ஆண்டு கணவனை இழந்த 2 பெண்களை அர்ச்சகர்களாக இந்தக் கோயில் நிர்வாகத்தினர் நியமித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகத்தைச் சேர்ந்த துறவியும் சமூக சீர்திருத்தவாதியுமான நாராயண குருவால் 1912ம் ஆண்டு உருவாக்கப்பட்டது இந்தக் கோயில்.

 Thanks -fourladiesforum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *