சட்டங்களும் சம்பிரதாயங்களும்

தேவா (ஜெர்மனி)

sisuசட்டங்கள் பாராளுமன்றங்களில் விவாதிக்கப்பட்டு, பெரும்பான்மைவாக்குகள் பெற்று அமுல்படுத்தப்படுகின்றன. லஞ்சம் புரளும் நாடுகளில் சட்டம்  அமுல்படுத்தப்படுகின்றனவா  என்ற கேள்வி ஒரு கேள்விக்குறியாகவே  இருக்கிறது. ஐனநாயகநாடுகளில் சட்டங்கள் முறைப்படி செயல்படுத்த முடிகின்றது. மதக்கொள்கைகளை அடிப்படையாக கொண்ட அரசுகள், சமயநூல்களின் எழுதப்பட்டுள்ள முடிபுகளை சட்டங்களாக மாற்றி தீவிரமாக செயல்படுத்துகின்றன.

எப்படியோ சட்டங்கள் மக்களுக்கு மேலே ஏற்றப்படுகின்றன. ஐனநாயக நாடாய் இருந்தாலும், சர்வாதிகாரமான நாடாய் இருந்தாலும், சட்டங்கள் நடைமுறைப்படுத்த படுகின்றன. ஒரு அரசு வாழ்வதற்கு அதனுடைய முதுகெலும்பாய் சட்டங்கள் தேவைப்படுகின்றன. மக்களுக்கு மேல் நிர்வாகம்  திணிக்கப்பட்டிருப்பினும், மக்கள் தம்மை வழிநடத்திசெல்ல ஒரு தலைமையை ஏற்றுக்கொள்கின்றனர். தலைமை, அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டது. மக்கள் குழுக்களாக வாழத் தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த நடைமுறை பல்வேறு வடிவங்களாகி மாறி இருப்பினும் அடிப்படைத்தோற்றம் அங்கேயே நிற்கிறது

மனிதன்  தனிமையாக தன்னை மட்டும் ஆள்பவனாக இருக்கலாம். ஆனால் தன்னை சேர்ந்தவர்களோடு இணைந்து போக வேண்டிய அவசியம் -கட்டாயம் இருக்கிறது-விரும்பியோ விரும்பாமலோ ஒரு கொள்கைக்கு அடிமைப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. நெறிப்படுத்தப்பட்ட சட்டங்கள் மக்களின் வாழ்வில் முக்கிய அம்சங்களாகவும், அடிப்படைதேவைகளை புார்த்திசெய்வனவாகவும் இருக்கின்றன. ஐனநாயக நாடுகளிலே நீதிமன்றங்களுக்கு ஊடாகவும் , அரசுகளை அசைத்து இயற்றப்பட்டுள்ள சட்டங்களுக்கு எதிராக போராடவும் முடியும். அரசியல் மூலம்-சட்டங்களின் வழியே பல பலங்களை அடையலாம் என்பதற்கு நிறைய உதாரணங்களை காட்டலாம்.

Batticaloa_January-15,-2011

ஆனால் சம்பிரதாயங்கள்  அவ்வாறு இல்லை. பழம் சமூகங்களிலிருந்து வழிவழியாக பேணப்பட்டு வரும் இவைகள் உலகின் எல்லா மூலைகளிலும் உயிர்ப்புடன் வாழ்கிறது. எழுதாத இந்த சட்டங்கள் தொடர்ந்தும் எப்படி  தீர்க்காயுசாக வாழமுடிகின்றது என்ற கேள்விக்கு சில அனுமானங்களை முன்வைக்கலாம்.காரணங்கள் கண்டுபிடிக்கமுடியாத வழக்கங்கள், முறைமைகள். அவைகள் கடைப்பிடிக்கப்படும் வழிகளால் சிறிய மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் இறுக்கமாக தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதற்காக உதாரணங்களை நிறைய காட்டலாம்.சிறப்பாக கூற‌‌ வேண்டியவைகளுக்குள்ளே சாதித்திருமணங்கள்,‌ ஆண்,பெண்ணுறுப்பை சிதைத்தல்,சிறுமி பூப்பெய்தல் நிகழ்வு , மரணசடங்குகள் போன்றவைகளில் சமூகமுறைமைகளின் தாக்கத்தை காணலாம்.

இவைகளை அறிவியல் மூலமாய் அலசலாம். கடைந்தெடுத்த மூடநம்பிக்கையாயும்  உள்வாங்கலாம். சட்டத்தின் மூலமாயும் இம்மனிதஉரிமை களுக்கு எதிராய் நடவடிக்கை எடுக்கலாம். கடும் தண்டனையும் பெறமுடியும். இருந்தாலும் ‌,,சம்பிரதாயங்கள்,, !!! சமூகங்களில் பெரும் பங்கு வகிக்கின்றன. அந்தந்த காலத்துக்கு, சுாழலுக்கு தக்கதாய் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன.

இவைகளை மீறுவதற்கு மதங்களும் அச்சமடைந்தன. மதக்கொள்கையை மக்களிடம் கொண்டுபோகவேண்டுமெனில், அவர்கள‌ிடம் வாழ்ந்துவரும் சம்பிரதாயங்களை அனுசரித்துப் போகவேண்டும். கண்டுகொள்ள்ளக்கூடாது, கேள்விக்குட்படுத்தக்கூடாது. பெரும்பான்மை மதங்கள‌ிடம் காணப்படும் இயல்பான போக்கு இது.மதங்கள் வழக்கங்க‌ளை உள்வாங்கிக்கொண்டன. ஆக கண்ணுக்கு தெரியாத வழக்கங்களை சமயத்தை முன்வைத்து, பின்பற்றும் நிலைமை பின்னரே உருவானது.பரம்ப‌ரை பரம்பரையாய் ஊடுருவி வாழ்ந்து கோலோச்சும் சம்பிரதாயங்களை மீறுவதற்கு ஏன் மக்கள் பொதுவாகவேபயப்படவேண்டும்? இவை மூடப்பழக்கவழக்கங்கள் என தெரிந்துகொண்டே, பின்பற்றுவதற்கு இன்னும் ஆழமான காரணங்கள் இருக்க‌‌ வேண்டும். சாதித்தொழில்களை தக்கவைத்துக் கொள்வதற்கு பொருளாதார-ஆதிக்க அரசியல்பின்ணனி இருக்கின்றது.

 *உடல்ரீதியான வன்முறைகளான,ஆண்-பெண் உறுப்பு சிதைத்தல்,மனிதகழிவுகளை மனிதரை கொண்டே செய்வித்தல், தீட்டு போன்றவை இன்னும் கடைப்பிடிப்பதின் அடிப்படை என்னவாக இருக்கும்?

*மனிதருக்கு சம்பிரதாயங்கள் பயம் கொள்ள வைக்கின்றனவா? அவைகளை மீறுவது ஒரு சவாலாக இருக்கின்றதா?

*ஏன் என்ற கேள்வி இல்லாமல் வாழ்க்கை இல்லை…!

கண்ணதாசன் வரிகளில் லயித்துப்போகின்றோர் நிஐவாழ்விலே ஊரோடு ஒத்துப்போதலை தலைமேற் கொள்கின்றனர்.காலம்காலமாக ‌ஒரு கேள்வி இல்லாமல் தொடர்ந்து செயற்பட்டுக்கொண்டே (பொருளாதார, இட, காலம் மாறினாலும்) வருவதற்கு வழக்கங்களின் ஆதிக்கமே ஆழமாய் ஆட்சிசெலுத்துகின்றது.பெரியார் தன்வாழ்ந்த காலத்தி‌லே மூடப்பழக்கங்களுக்கு எதிராக போராடினார்.ஆனால் சம்பிரதாயம் பகுத்தறிவுக்குள்ளேயும் உயிர்பெற்று வாழ்கிறது.

இது விடயத்தில் பெண்களின் பங்கு மிகுதியாய் காணப்படுவதை கவனிக்கலாம்.கர்ப்பபையை அவர்கள் கொண்டிருப்பதால்,உற்பத்தியின் பெறுமானத்துக்கு அவர்கள் பதில் கூறுபவர்களாய் இருக்கிறார்கள். பிள்ளை தவறு செய்தால் தாயை நோக்கியே விரல் சுட்டப்படுகிறது. தந்தைய‌ைில்லாமல் ஒரு குழந்தை உருவாகமுடியாது என்பது வெளிப்படையாய் இருந்தாலும்,  நீ மட்டுமே அதற்கு பொறுப்பு, முடிவை பெண்ணுக்கு முன்வைக்கிறது.

sisu

சமூகம் குழந்தை பிறந்து வெளிக்காற்றை சுவாசிக்க ஆரம்பித்த உடனேயே புறச்சூழல் அதனை தொற்றிக்கொள்கிறது. தாயிடமிருந்து குழந்தை தொப்புள்கொடி யை அறுத்தே இந்த வாழ்க்கைக்கு அடி எடுத்து வைக்கின்றது. அந்த நிமிடத்திலிருந்து பிரிக்கப்பட்டகுழந்தைக்கு அதனுடைய வாழ்வு அதற்கே உரிமையானது. உணவளிக்கிற இயல்பான உணர்வு, புறச் சூழலிடமிருந்து ஆபத்து ஏற்படாமல் காப்பாற்றும் பொறுப்பு ஒரு தாயானவளுக்கு இயற்கையாகவே பொருந்துகிறது.ஒரு பறவைக்கு, மிருகத்துக்கும் இந்த இயல்புணர்வு இருக்கிறது. ஆக இது ஒரு இயற்கை.

பிள்ளை வளர்ப்பும் ஒரு தாய்க்குரிய கடமையாய் மாறும்போக்கிலே தான் சம்பிரதாயங்கள் சமூகத்தால் திணிக்கப்படுகின்றது. அவளுக்கும் சமூகத்தின் ஆதரவு தேவைப்படுவதால், அதனை மீறுவதற்கு பயம் ஏற்படுகிறது. பயங்களுக்கு மேலே கட்டப்பட்ட‌‌வைதான் சம்பிரதாயங்கள் பெற்றவருக்கு பிள்ளையை பாதுகாக்கவேண்டிய இயற்கையான உணர்வு இருக்கும். ஆனால் என்பிள்ளை என்சொல்படிதான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டை அதற்கு மேல் திணிக்கும்போது ஆரம்பிக்கிறது சமூகஅரசியல். பிள்ளைவளர்ப்பு சமூகஇணைப்பாட்டுக்கு ஏற்றமாதிரி வளைந்து செல்லுகின்றது. உள்வாங்கிக்கொண்ட பிள்ளையும், வளர்பருவத்திலே மாற்றத்தை விரும்பினாலும்,சமூக நெருக்கடிகளுக்கு பயப்படுகின்றது.

காரணங்களை ஆராயவிடாமல்,அது அப்படித்தான் என்கிறது மூலம் மனிதரின் பிரதான உறுப்பான மூளையை அடக்கியாளும் தந்திரம் கொண்டது,,அது அப்படித்தான்,, என்பதன் அடித்தள‌மே அச்சம்தான். வழக்கங்கள், சம்பிரதாயங்கள் ஒரு இனத்தினது கூறுகள் என்றே வைத்துக்கொண்டாலும்,இவைகள் ஆட்சிசெலுத்தும் மறைமுக அதிகாரமே சிந்தனைக்குரியதும்,விவாதிக்கப்படவேண்டியதும் ஆகும். இந்த அரசியல்.

இவைகள் மனிதரை ஆட்டிப்ப‌டைக்கும் விந்தை‌யை ,அதேசமயம் அடிமைப்படுத்தும் கொடுமையையும் பல்வேறு வடிவங்களில் கொண்டிருக்கின்றன என்ப‌தே ஆச்சரியமானதும், அதிர்ச்சியானதும், உண்மையானதும் ஆகும்.

இன்னொரு காரணி சமூகத்தை-விசேடமாக பெண்களை அடக்கியாள்வதற்கு ஒரு கருவியாக இதனை பயன்படுத்தமுடியும்.தாய்வழிசமூகத்திலிருந்து மக்கள் நழுவிவீழ்ந்துகொண்டிருந்த காலத்திலிருந்தே, வழக்கங்களின் ஆதிக்கம் ஆட்சிசெலுத்தியிருக்கவேண்டும்.

“இது எங்கள் வழக்கம், பண்பாடு என்று வாய்ப்பாடாக கூறுவது வழமையாகிவிட்டது. பிறப்பு உலக இயற்கைதான். பிறந்தபின் வாழ்வு தத்தமக்கே உரிய உரிமை. இந்த உரிமையை பறித்து,தன் கட்டுக்குள் வைத்திருக்க, சம்பிரதாயங்கள்” என்கிற அரசியல் வேலைசெய்கின்றது.முறைமைகளை மீறுபவர்களை ஒதுக்கி வைப்பதும், தண்டனை கொடுப்பது  மட்டுமல்ல கொலையும் செய்ய தயங்குவதில்லை.குடும்பத்தால்,சமூகத்தால் ஒதுக்கப்படுவது, ஒடுக்கப்படுவது  மனிதருக்கு  சமூகம்  தரும்  மிகப் பாரிய கொடுமை. உளரீதியான சிக்கல்களை ஏற்படுத்துகின்றது.

புறக்காரணங்களை விட அகக்காரணிகள் மனிதரை அழுத்துகின்றன. ஆக மீண்டும் குழிக்குள் வீழ்தல் தொடர்கின்றது. உலகம் பொருளாதாரமயமாகிக்கொண்டு  வரலாம். கணனி செய்திகளை உலகின் மூலைமூடுக்கெல்லாம் பரப்பலாம். சிந்தனைப்பரப்பு விரிவடையலாம்.  ஆயினும் கடவுளை -மதங்களைவிட பெரியதொரு சக்தியாக சம்பிரதாயங்கள் வாழ்கின்றன என்பதே உண்மை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *