நாவலடி கூத்தில் பெண்கள்

தொகுப்பு: குழந்தைவேல் ஞானவள்ளி,
நுண்கலைத்துறை -கிழக்குப் பல்கலைக்கழகம்.

இலங்கையின் பழமை அதன் பாரம்பரியத்தினை பேணிப் போற்றும் மட்டுமாநகரில் தழிழரின் பாரம்பரியக் கலையான கூத்துக்கலை அதன் தனித்துவப் பண்பு மாறாது இன்றளவிலும் ஆடப்பட்டும், பேணப்பட்டும் வருகின்றன.

அவ்வகையில் மட்டக்களப்பில் வடமோடி, தென்மோடி, மகுடி, வசந்தன், பறைமேளக் கூத்துஞ்ஞ். என பலதரப்பட்ட மக்களின் வாழும் கலைகள் பிரதான இடத்தைக் கொண்டுள்ளன. இதில் வடமோடி, தென்மோடிக் கூத்துக்களுக்கு தனிச்சிறப்பிடமேயுண்டு.

இவை இவ்வாறு இருக்க மட்டகளப்பு பிரதேசத்தில் நாவலடி என்ற இடத்தில் “அர்ச்சுனன் தவநிலை” என்ற வடமோடிக் கூத்தின் சதங்கை அணி விழா நிகழ்வுகள் பற்றியதான எனது இச்சிறு கண்ணோட்டம் “நாவலடி கூத்தில் பெண்கள்” என்ற தலைப்பின் கீழ் அமைகின்றது.

கடந்த 14.06.2014 அன்று நாவலடியில் சதங்கை அணி விழா இடம்பெற்றது. இதில் தம்பிமுத்து அண்ணாவியார் கடவுள் வணக்கத்துடன் கூடிய அர்ச்சுனன் தவநிலை என்ற வடமோடிக் கூத்தினை ஆரம்பித்து வைத்ததோடு கூத்தருக்கான சதங்கையினை அணிவித்தார். கலாநிதி சி. ஜெய்சங்கர் அவர்களால் அண்ணாவியார் மாலை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார். சிவனிடம் அர்ச்சுனன் பாசுபதம் பெறும் வரலாற்றுக் கதையினை அழகுற கூறிடும் அர்ச்சுனன் தவநிலை என்ற கூத்தில்

சிவராசா-அர்சுணன்
கோணேஸ்வரன்-கிரு~;ணர்
காரூண்யம்-வேடன்
ஜீவனநாதன்-மூஹாசுரன்
இந்திரன்-சிவன்
ஜெமினிதரன்-பேரண்டன்
ஜீவா- பேரண்டச்சி
பிரஹாஷினி- பார்வதி;
கிருஷிகா- வேடுவிச்சி

போன்றோர் தக்க பாத்திரங்களை ஏற்று இக்கூத்தினை ஊர் மக்களின் பேராதரவுடன் முழுமை பெற செய்கின்றனர்.

இதில் பெருமையுடன் கூற வரும் விடயம் யாதெனில் இரு பெண்கள் தயக்கமின்றி மிகவும் உற்சாகத்;துடனும் மகிழ்வுடனும,; ஙரண விருப்பம் மற்றும் திருப்தியுடனும் இக்கூத்தில் பங்கேற்று அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளனர். இது குறித்து அவர்களிடம் வினவிய போது சகோதரி கிருத்திகா தரம் எட்டில் “வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில்” கல்வி பயின்று வரும் மாணவி. இவர் நாடகமும் அரங்கியலும் என்ற பாடத்தினை விருப்பமுடன் கற்று வருபவர்.

அவர் “நான் சிறுவயதில் மாமாங்கத்தில் கூத்தினை விடிய விடிய பார்த்திருக்கின்றேன். அப்போதிலிருந்தே எனக்கு கூத்தில் ஒரு அதித ஈடுபாடு இருக்கின்றது. எனது மாமா அர்ச்சுனன் தவநிலை கூத்தினை பழக்கும் போது என்னை வேடுவிச்சி பாத்திரமாக அறிமுகப்படுத்த விரும்பினார். நானும் உடனடியாக மிகுந்த ஆர்வத்துடன் சம்மதித்தேன். என் வீட்டாரும் என் விருப்பத்திற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

இக்கூத்தின் ஆட்ட அசைவுகளையும், பாடல்களையும் பத்து நாட்களில் படித்துக் கொண்டேன். மிகவும் எளிமையாக இருந்தது. எனவே தொடர்ந்தும் கூத்தினை ஆட ஆர்வமாக உள்ளேன்;” என சிரித்துக் கொண்டே தனது மழலை கலந்த மொழியில் உற்;சாகத்துடன் எம்மிடம் கூறினார்.

 

மேலும் “ஆண்களது ஆட்ட முறைகளையும் விரைவில் கற்றுக் கொள்வேன்” என்றும் கூறினார். அவரது ஆட்ட அசைவு நுனுக்கங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டதோடு வேகமும் விறுவிறுப்பும் நிறைந்ததாக அமைந்தது.

இவர் உமையாள் வேடம் மாறி வரும் “வேடுவிச்சி” பாத்திரம் ஏற்று கூத்தினை ஆடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக உமையாள் பாத்திரமேற்ற 21 வயது நிரம்பிய சகோதரி பிரஹாசினி என்பவரது பங்காற்றினையும் நாம் பாராட்டத்தான் வேண்டும். இவர் கூறுகையில் “நான் தையல் பாடநெறியினை பயின்று விட்டு தற்சமயம் வீட்டில் தான் இருக்கின்றேன். சிறுவயதில் இருந்தே எம்மவர் கலையில் எனக்கு மிகுந்த விருப்பம். அதில் பங்கேற்று நானும் ஆட வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இப்போது தான் நிறைவேறியிருக்கின்றது.

அர்ச்சுனன் தவநிலையில் வரும் உமையாளின் பாடலுக்கு நான் ஆடியிருக்கின்றேன். என் வீட்டாரும் சரி ஊர் மக்களும் சரி என்னை ஊக்குவித்தனரே அன்றி விமர்சிக்கவில்லை. இது எனக்கான பெரிய வெற்றி” என்று உற்சாகத்துடன் கூறிய அவரிடம் தொடர்ந்தும் ஆடுவீர்களா? திருமணத்தின் பின்னரும் இது தொடருமா என கேட்டதற்கு “நிச்சயமாக இது போல பல கூத்துக்களில் பங்கெடுக்க ஆர்வமாக உள்ளேன். திருமணத்தின் பின்னர் குடும்பத்தவர்கள் சம்மதித்தால் அதன் பின்னரும் ஆட தயாராக உள்ளேன்” என தயக்கமின்றி கூறும் அவரை மேலும் மேலும் பாராட்டத் தோன்றியது. தானே முன் வந்து விரும்பி அப்பாத்திரத்தை ஆடுகின்றார் என்ற விடயம் அவரது ஆர்வத்தை வெளிச்சமிட்டு காட்டுகின்றது.

கிருஷிகா மற்றும் பிரகாஷினி ஆகிய இருவரது ஆர்வமும், தமது கலையினை பாதுகாக்க வேண்டும் என்ற அவர்களது அக்கறையும் எம்மை போன்றோருக்கும் இருக்குமாயின் நி;ச்சயமாக எம் மூத்த கலையினை மங்காது பேணிடலாம். மீண்டும் அவர்களுக்கு எனது இதயம் கணிந்த பாரகாட்டுக்களை கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறையூடாக கூறிக் கொள்கின்றேன். நாவலடி அர்ச்சுனன் தவநிலை கூத்தானது அடுத்த மாதம் ஆறாம் திகதிக்கு பின்னர் முழுமை தன்மையோடு (உடைஇ ஒப்பனை) அரங்கேற்றப்படும். இதில் கலந்து கொண்டு அவர்களை ஊக்கப்படுத்த அனைவரும் அழைக்கப்படுகின்றீர்கள்.

எண்ணிலடங்காத உயிரைக் குடித்த சுனாமிப் பேரலைக்குப் பிறகு நாவலடியில் பழக்கி அரங்கேற்றப்படும் முதலாவது கூத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆழிப்பேரலையில் இழந்த இழப்புக்கள், வடுக்கள் ஏராளம். ஆனபோதிலும் சதங்கை அணிவிழாவினை அடுத்து கூத்து அரங்கேற்றப்படுவது பாரம்பரிய கலையின் இருப்பினைச் சுட்டி நிற்பதோடு, பெண்கள் அதில் விருப்பத்துடன் பங்கேற்பது இங்கு கவனிக்கத்தக்கதோர் அம்சமாகும்.

நன்றி

http://www.maddunews.com/2014/06/blog-post_101.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *