இன்று (ஜூன் 20) உலக அகதிகள் தினம்!

5 facts: World Refugee Day


இன்று (ஜூன் 20) உலக அகதிகள் தினமாகும். 2001 ஆம் ஆண்டு ஐ.நா இன் பொதுச் சபையால் ஒவ்வொரு வருடமும் ஜூன் 20 ஆம் திகதி அகதிகள் தினம் என பிரகடனப்படுத்தப்பட்’டுள்ளது.உலகளாவிய ரீதியில் பெருகி வரும் அகதிகளின் பிரச்சினைகள் குறித்து உலக மக்களிடையே கவனத்தை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கம் என தெரிவிக்கபடுகிறது.

 

உலகம் முழுதுவம் தற்போது அகதிகளின் எண்ணிக்கை 50 மில்லியனைத் (5 கோடி) தாண்டி விட்டதாக ஐநா அறிக்கை கூறுகிறது. இந்த எண்ணிக்கை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அகதிகளாக இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையின் அதிகபட்சம் என்பதுடன் உலகத்தின் மொத்த சனத்தொகையில் 0.7ம% வீதமும் ஆகும். இன்றைய உலகில் அகதிகள் பிரச்சினயாக முகம் கொடுக்கும் நாடுகளாக சிரியா, தென் சூடான், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, ஈராக், கென்யா மற்றும் ஆப்கானிஸ்தான்,  ஆகியவை விளங்குகின்றன.

உலகம் முழுதுவம் 33 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உள்நாட்டிலும் 17 மில்லியன் மக்கள் வரை வெளிநாடுகளுக்கும் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளதாக கணக்கெடுப்புக்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் மட்டும் அகதிகள் எண்ணிக்கை 6 மில்லியனாக அதிகரித்துள்ளது.

 

நீடித்து வரும் போர்களாலும் அகதிகளை ஏற்றுக் கொள்ள செல்வந்த நாடுகளின் பாராமுகமும் உலகில் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்து வரக் காரணம் என ஐ.நா தெரிவிக்கின்றது. உள்நாட்டுப் போர் மட்டுமன்றி அகதிகள் உருவாக இன்ன பிற காரணங்களாக வன்முறை, மனித உரிமை மீறல்கள் மற்றும் பஞ்சம் போன்றவையும் விளங்குகின்றன. மேலும் உலகில் தற்போது உள்நாட்டுப் போர் காரணமாக உருவாகி வரும் அகதிகளில் 55மூ%வீதம் சிரிய யுத்தத்தால் உருவானவர்கள் என்பதுடன் தற்போதுள்ள உலகில் உள்ள அகதிகளில் அரைவாசிக்கும் அதிகமானோர் ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் உலகில் அதிகளவான அகதிகளுக்குப் புகலிடம் வழங்கும் நாடுகளாகப் பாகிஸ்தான், ஈரான், லெபனான் ஆகியவை விளங்குகின்றன. என ஐநா தனது அறிக்கையில் தெரிவத்துள்ளது.

 thanks -photos by  -reuters

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *