மார்ச் 8 மகளிர் தினசிந்தனை 2010- பெண் விடுதலை மட்டுமே ஆணின் விடுதலை

ஓவியா (இந்தியா)

index இந்த மார்ச் 8 மகளிர் தின கட்டுரை ஊடறு இணையத்திற்காக என்னிடம் கேட்கப்பட்ட போது எனது சிந்தனை மீண்டும் மீண்டும் சமீபத்தில் நடந்து கொண் ருக்கும் நிகழ்வுகளையே சுற்றி சுற்றி வந்து கொணடிருந்தது.  சில தினங்களுக்கு முன் காலையில் பத்திதிரிகையில் வந்த தலைப்பு செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது

இந்த மார்ச் 8 மகளிர் தின கட்டுரை ஊடறு இணையத்திற்காக என்னிடம் கேட்கப்பட்ட போது எனது சிந்தனை மீண்டும் மீண்டும் சமீபத்தில் நடந்து கொண் ருக்கும் நிகழ்வுகளையே சுற்றி சுற்றி வந்து கொணடிருந்தது.  சில தினங்களுக்கு முன் காலையில் பத்திதிரிகையில் வந்த தலைப்பு செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  மார்க்சிஸ்டு  கம்யுனிஸ்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரான டபிள்யு பி வரதராசன் அவாகளைக் காணவில்லை  கடிதம் எழுதி வைத்து விட்டுப் போய்விட்டார்  இது மிகவும் அவமானமாகவும,வருத்தமாகவும் இருந்தது.  ஒரு தலைவர் இப்படி காணாமல் போகலாமா?  என்ன செய்தி இது?  கடிதத்தில் அவர் இப்படி எழுதி வைத்திருந்ததாகச் சொன்னார்கள்  ‘உட்கட்சி பிரச்சனைகளை சமாளிக்க முடிந்த என்னால் குடும்பத்துக்குள் உள்ள பிரச்சனைகளை சமாளிக்க முடியவில்லை.’  அதனைத் தொடர்ந்து வந்த செய்திகளில் கட்சிக்குள் அவர் மீது பாலியல் புகார் ஒன்று கொடுக்ககப்பட்டதாகவும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் அவரைக் கட்சி உறுப்பினர் நிலையிலிருந்தே நீக்கி விட்டதாகவும் குறப்பட்டது. ஒரு வாரம் கழித்து அவரது உடல் போருர் ஏரியில் கண்டெடுக்கப் பட்டது  அவர் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப் பட்டது.  இன்று அது கொலையா தற்கொலையா என்பது புலனாய்வில் இருக்கிறது. அதன் முடிவு எவ்வாறாக இருந்தாலும் அவருடைய இறுதி நாட்கள் அவர் மீதான பாலியல் புகார் ஒன்றை வைத்து பின்னப் பட்டிருப்பதை நாம் உணர முடிகிறது. 

 

international_womens_day

என்னுடைய மிக நெருங்கிய உறவக்காரப் பெண்ணின் கணவர் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென தூக்குப் போட்டுக் கொண்டு இறந்து விட்டார்.  இருபதாண்டுகளுக்கு மேலாக ஒரு முழு நேரக் குடிமகனாக வாழ்ந்தவர்; அவர்.  சாவதற்கு முன் தனது மனைவி நடத்தையில் தனக்கு சந்தேகம் இருப்பதாக சொல்லிக் கொண்டிருந்து விட்டு செத்துப் போனார்.  இருபதாண்டுகள் உருப்படியாகாமால் வாழ்ந்த அந்த மனிதனின் சாவுக்கு இந்தப் பெண் காரணமா இல்லையா என்று இந்த சமுகம் இன்று விசாரித்துக் கொண்டிரக்கிறது.  அந்தப் பெண்ணிற்கு சேர வேண்டிய சமுக உரிமைகள் சொத்து அனைத்தையும் தீர்மானிக்கிற விசயமாக இது உருவெடுத்து விடுகிறது.

நாள்தோறும் ரிசிகளைப் பற்றியும் புண்ணிய தல கள் பற்றியும் இமயமலைக்கே சென்று தகவல் திரட்டி தந்து கொண்டிக்கும் தொலைக் காட்சி ஊடகம் ஒன்று திடீரென ஒரு சாமியார் ஒரு நடிகையோடு உறவு கொள்ளும் காட்சியை மிகவும் அருவெறுக்கத் தக்க விதத்தில் வெளியிட்டது.  பல்லாண்டுகளாக அந்தச் சாமியாரை புனித மனிதராகக் கொண்டாடிக் கொண்டிருந்த மக்கள்  கூட்டம் திரண்டு சென்று அந்த மடத்தை அடித்து நொறுக்குகிறது.  சாமி இல்லை என்று சொல்லுகிறவர்களஇ; சாமியாரையே சாமி என்று சொல்லுகிறவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு மடத்தைத் தாக்கினார்கள்.

தலைவர் டபிள்ய பி வரதராசன் சாவு குறித்து நண்பர் ஞாநி கட்டுரையொன்றினை குமுதம் ஏட்டில் எழுதியிருந்தார்.  பெண்ணியச் சிந்தனைகளோடு நன்கு பரிச்சயமுள்ளவர் அவர்.  மிகவும் வியக்கத்தக்க விதத்தில் கம்யுனிஸ்டு கட்சியின் கற்பு நெறியை சிலாகித்து அவர் எழுதியிருந்ததைப் படித்து நான் அசந்து போனேன்.  அதுவும் எப்படி?  திராவிட இயக்கமெல்லாம் பாலியல் புகார்களை பேட்ஜ் மாதிரி மாட்டிக் கொள்வார்கள். ஆனால் கவரிமான் சாதி கம்யுஸ்னிஸ்டு கட்சி.  எனவே நடவடிக்கை எடுத்து விட்டார்கள்.  பாலியல் புகார் ஒன்றின் மீது காத்திருந்தது போல் கம்யுனிஸ்டு கட்சி நடவடிக்கை  எடுத்தது தவறு என்றால் அதற்காக தலைமறைவானதும் தற்கொலை செய்து கொண்டதும் (உண்மையாகவே தற்கொலை என்றால்) ஒரு தலைவருக்கழகா?  இவர்கள் எல்லாம் சமுகத்தின் வழிகாட்டிகளா?  திராவிட இயக்கத் தலைவர்களை விமர்சிக்க வாய்ப்புத் தேடி  ஞாநி இப்படி பரிதாபத்துக்குள்ளாகக்  கூடாது.  தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் செய்திகள் ஞாநியை இன்னும் பரிதாபகரமான நிலைக்கு தள்ளிக் கொண்டிருக்கி;ன்றன.

இந்த நேரத்தில் சில நாட்களுக்கு முன் தெலுங்கானா பிரச்சனைகள் சூழ்ந்திருக்க ஆந்திர ஆளுநர் என்.டி.திவாரி தனது தள்ளாடும் வயதில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி தனது பதவியையே துறந்ததையும் நினைவில் கொள்வோம்.
  
மேலே நாம் எடுத்துக்காட்டியிருக்கும் சம்பவங்கள் அனைத்திலும் ஊடாடி நிற்கும் விசயங்கள் இரண்டு:

–  பாலியல் அவதூறு ஒன்றினைக் கூறி இந்த சமூகத்தை ஒருவருக்கு எதிராக ஒரு நொடியில் அணி திரட்டிட முடியும் அது சாமியாராக இருந்தாலும் சரி சாதாரணப் பெண்ணாக இருந்தாலும் சரி தலைவராக இருந்தாலும் சரி அதுவும் முற்போக்கு இயக்கத்தின் தலைவராக இருந்தாலும் கூட

– சமூகத்தின் இந்த பலவீனத்தை எப்போதுமே சமூக விரோத சக்திகள் தங்  களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  இந்தப் போர்வையை ஒரு கறுப்புத் திரையாக பயன்படுத்தி சமூகத்தின் கண்களை திசை மாற்றி விட்டு தங்களுக்கு என்ன தேவையோ அதனை சாதித்துக் கொள்கிறார்கள்.

இந்த மக்களிடம் நாம் ஒரு கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது:  ஊழல் வழக்குகளிலும் லஞ்ச வழக்குகளிலும் மனிதர்கள் கைதாகும் போது இதே போன்ற ஆத்திரம் எதுவும் உங்களுக்கு வருவதில்லையே அது ஏன்?சமூகத்தி;ல எத்தனையோ கிரிமினல் குற்றவாளிகள் பல இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை தங்களது ஒரே ஒரு செயலில் நசுக்கி அழித்து விடும் குற்றவாளிகள் இருக்கிறார்களே…. அவர்களை நோக்கியெல்லாம் ஏன் உங்கள் கோபக் கணைகள் பாய்வதில்லை?  அவ்வாறு நீங்கள் ஆத்திரப்பட்டால் எத்தனையோ அநியாயங்கள் அழிந்து போகுமே? உண்மையில் இவர்களுக்கு வருவது சமுக அநீதிக்கு எதிரான கோபமா அல்லது தங் களுடைய அடக்கப்பட்ட உணர்வுகளுக்கு இவர்களுக்குக் கிடைக்கும் வழகால் இதுதானா?

நாடோடி வாழ்விலிருந்து நிலையான வாழ்வுக்கு மாறிய சமூகம் சொத்து உருவாகக் காரணமாயிற்று.  இந்த சொத்து தனிநபர் சொத்தாக மாறிய போது தன் வாரிசு அதற்கான தனியுரிமை என்ற சிந்தனை வளர்ந்தது.  அதற்கான வாயிலாக ஒரு பெண்ணும் ஆணும் திருமணம்  செ;;ய்து ஆணின் வாரிசை உற்பத்தி செய்கிற குடும்பம் என்ற அமைப்பு தோற்றம் கண்டது.  இந்த அமைப்பைக் காப்பாற்ற ஆணின் தலைமையிலான சமூகம் பெண்ணின் மீது கற்பு நெறியைத் திணித்த அதே வேளையில் ஆணுக்கான வரம்பற்ற பாலியல் சுதந்திரத்தை அங்கீகரித்து விபச்சாரம் என்ற செயல்பாட்டையும் சமூக அமைப்பாக ஏற்றுக் கொண்டது.  இதற்கு சரியான உதாரணம் தேவதாசி முறையாகும்.  தொல்கர்பபியத்திலிருந்து அனைத்துத் தமிழ் இலக்கியங்களும் ஏற்றுக் கொண்ழருக்கும் பரத்தையர் வீதிகளும் மற்றொரு உதாரணம்.  உண்மையில் துறவிகள் விபச்சாரிகள் சாமியார்கள் இவர்கள் அனைவரும் குடும்ப அமைப்புக்கு வெளியேதான் இருக்கிறார்கள்.  உ;ணமையில் இவர்களின் இயக்கம் தடை செய்யப்படுமேயானால் உலகின் அனைத்து மக்களும் குடும்ப அமைப்புக்குள் மட்டும்தான் வாழ வேண்டும் என்று கறாரான விதி செய்தால் இந்த ஆண்களே குடும்ப அமைப்பை விட்டு வெளியேறி விடுவார்கள்.  இதனை நான் ஏன் சொல்கிறேனென்றால் பாலியல் அத்து மீறல்களைக் கேள்விப்பட்டவுடன் இந்த சமூகம் கொள்கிற கோபம் எவ்வளவு பொய்யானதுஇ கேலிக் கூத்தானது என்பதை எடுத்துக் காட்டத்தான்.

பாலியல் அத்து மீறல்கள் சரியா தவறா என்பதைப் பிறகு பார்ப்போம்.  பாலியல் அத்து மீறல்களைக் கண்டிப்பவர்களின் செயல்பாடுகளில் உண்மையின் சாரம் என்று எதுவுமில்லை.  எந்த நடவடிக்கைகளில் உ;ணமையில்லையோ அவை அருவறுப்பானவையேயாம்.

பாலியல் உறவுகள் வாழ்வி;ன் ஒரு பகுதியாக இருக்கலாமே தவிர அது மட்டுமே வாழ்க்கையின் அடிப்படையாக மாற்றப் பட்ழருக்கக் கூடாது.  ஆனால் குடும்பம் என்ற அமைப்பு பாலியல் உறவு என்ற தாம்பத்திய உறவை மட்டுமே அடிப்படையாக்கியதுடன் பாலியல் சுகம் தருவதையும் பி;ளளை பெறுவதையும் பெண்ணின் கடமைகளாக மாற்றி விட்டது.  இந்த அமைப்பை ஆள்பவனாக ஆண் இருந்த போதிலும் அதன் இயக்கம் அவனையும் காவு கொள்ளவே செய்கிறது என்பதைத்தான் இந்த ஆண்களின் தற்கொலைகள்ஃகொலைகளின் பின்னால் இருக்கும் இரகசியங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

 பெண்ணின் உரிமை என்பது பெண்ணுக்கான கல்வி உரிமை, பொருளாதார உரிமை, தொழில் உரிமை என்பதோடு  கூட பாலியல் உரிமை என்பதையும் இணைத்து சிந்தி;க்க நாம் தவறுவோமேயானால் நாம் அவ்வப்போது பெறுகின்ற உரிமைகளைக் கூட மீண்டும் மீண்டும் பறி கொடுக்கிற சூழல்கள் வந்து கொண்டேதானிருக்கும்.எனவே தோழர்களே, ஆணின் தலைமையிலான சமூகம் என்பதை மாற்றி ஆண்கள் பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் அனைவரும் தங்கள் பால் வேறுபாடுகளைக் கடந்து சமத்துவ செயல்பாட்டுரிமைகளைப் பெறகின்ற புதிய பாலின சமத்துவ சமுதாயம் படைப்போம் என்பது நமது மார்ச் 8 சிந்தனையாக இருக்கட்டும். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *