புகழ்பெற்ற விட்டல் ருக்மணி கோயிலில் பெண்கள், அனைத்து சாதியினர் அர்ச்சகராகின்றனர்!

விஜி, கோவை.

புகழ்பெற்ற மகாராஷ்டிரா விட்டல் ருக்மணி கோயிலில் பெண்கள் மற்றும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மஹராஷ்டிர மாநிலத்தில் பந்தர்பூரில் உள்ளது சுமார் 900 ஆண்டுகள் பழமையான விட்டல் ருக்மணி ஆலயம். இந்தக் கோயிலில் பல நூற்றாண்டுகளாக படுவே மற்றும் உத்பாத் ஆகிய இரண்டு பிராமண சமூகங்களைச் சேர்ந்தவர்களே பூஜைகளையும் சடங்குகளையும் செய்து வந்தனர்.இந்த சமூகங்கள் வசம் இருந்துவந்த ஆதிக்கத்தை எதிர்த்து கோயிலின் அறக்கட்டளை மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கோயிலின் வருமானம் மற்றும் பூஜைகள் தொடர்பில் இந்த இரண்டு சமூகங்களும் தமது பரம்பரை உரிமைகளை இனிமேல் கோர முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இத் தீர்ப்பை எதிர்த்து படுவே மற்றும் உத்பாத் என்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். உச்ச நீதிமன்றமும் கோவிலின் வருவாய் மற்றும் சடங்குகளில் இந்த சமூகங்களுக்கு உள்ள பரம்பரை உரிமைகளை நிராகரித்து தீர்ப்பளித்தது.இதைத் தொடர்ந்து அர்ச்சகர் பணியிடங்களுக்கு பெண்கள் மற்றும் அனைத்து சாதியினரும் விண்ணப்பம் செய்யலாம் என்று விட்டல் ருக்மணி கோயில் நிர்வாகம் விளம்பரம் செய்துள்ளது. கோயிலின் பாரம்பரிய சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் தெரிந்த பிரமணர் அல்லாத ஹிந்துக்களும் பெண்களும் அர்ச்சகர் பொறுப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று காலியாக உள்ள 8 அர்ச்சகர்கள் பணிக்கான விளம்பரம் கடந்த வாரம் வெளியானது.இது குறித்து கருத்து தெரிவித்த விட்டல் ருக்மணி கோயில் அறக்கட்டளையின் தலைவர் அண்ணா டாங்கே, இந்தியாவில் பாரம்பரியமான, ஆகம விதிமுறைப்படியான கோவில்களில் பூஜைகள் உள்ளிட்ட அனைத்து மதச் சடங்குகளும் பிராமணர்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வரும் நூற்றாண்டு கால வழக்கத்தை மாற்றும் முதல் முயற்சி இது என்றார்.

நம் தமிழகத்திலும் இந்த மாற்றங்கள் நிகழ விழைகிறேன்.

—————-

பார்ப்பனர்கள் மட்டுமே கோயில் அர்ச்சகராகலாம் என்ற ஆதிக்கத்திற்கு உச்சநீதி மன்றம் மரண அடி கொடுத் துள்ளது. தாழ்த்தப்பட்டவர் கள் பிற்படுத்தப்பட்டவர் கள், பெண்களும் அர்ச்சக ராகலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.

மகாராட்டிர மாநிலத் தில் சோலாப்பூரை அடுத்த பந்தர்பூரில் 900ஆண்டுகள் பழைமைவாய்ந்த வித்தோபா கோயில் உள்ளது. புனித நகராகக்கூறப்படும் இந்நக ரில் உள்ள கோயிலின் வர லாற்றிலேயே முதன்முத லாக பூசை செய்வதற்கு பிற்படுத்தப்பட்ட வகுப் பைச் சேர்ந்த பெண்களுக்கு அர்ச்சகராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்மூலம் பழமை யான ஆண்ஆதிக்கம் உடைத்து நொறுக்கப்பட்டு முடிவுக்கு வந்துள்ளது.

வித்தல் ருக்மணி கோயில் அறக்கட்டளையின் தலை வர் அன்னா டாங்கே இது குறித்து கூறும்போது, நூற் றாண்டுகளாக பார்ப்பனர் களால் மட்டுமே  கோயில் பூசை, சடங்குகள் செய்யப் பட்டு வந்ததை மாற்றி, நாட்டிலேயே முதல் முயற்சி யாக  கோயில் அறக் கட் டளை மூலமாகவே பழைய முறை உடைத்து நொறுக் கப்பட்டுள்ளது.

நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் கோயில் பூசைகள், சடங்குகள் ஆகிய வற்றை அனைத்து ஜாதி யினரும் குறிப்பாக பார்ப்பனர் அல்லாதோர் செய்ய வேண்டும் என்று விரும் பினோம் என்றார்.

மேலும் அவர் கூறும் போது, கோயிலின் கடவுள் சிலைகளை வித்தோபா மற் றும் உடனுறை தெய்வமா கிய ருக்மணி ஆகியோருக்கு இரண்டிலிருந்து மூன்று சிறப்புப் பூசைகள் செய்வ தற்கும். அதோடு மற்ற கோயில்களில் பூஜைகள், இந்து சமய சடங்குகள் செய்வதற்கும்  நன்கு பயிற்சி பெற்ற  பெண்கள் அர்ச்சகர் களாக பணிபுரிவதற்குத் தேவை என்று எட்டு அர்ச் சகர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களைக்கோரி இந்த வாரத்தில் விளம்பரப் படுத்தியிருந்தோம்.

அதன்படி நேர்காணல் முடித்து இந்த மாதம் 18ஆம் தேதி அன்று பணிநியமன ஆணை அளிக்கப்பட உள் ளது. இந்தப் பணி முற்றிலும் தற்காலிகமானதும், ஒப்பந்த அடிப்படையில் உள்ளது மாகும். தேர்வு செய்யப்படு பவர்களின் தகுதிக்கேற்ப ஊதியம் அளிக்கப்படும் என்று டாங்கே கூறினார்.

அறக்கட்டளை சார்பில் முறையாக உச்ச நீதிமன்றத் தில் முறையீடு செய்து வழக்கு 40ஆண்டுகாலமாக வழக்கு நடைபெற்று,  கோயில் வருவாய் மற்றும் பூசைகள், சமயச்சடங்குகள் செய்வதற்கு பாத்வே, உத்பத் ஆகிய குடும்பத்தாரின்  பரம்பரை உரிமைகளைத் தள்ளிவிட்டு கடந்த சனவரி யில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஆனாலும், தீர்ப்பை அமலாக்க முன் வந்ததுடன், அந்தக் கோயிலை 1968 பி.டி.நட்கர்னி குழு சிபாரிசின்படி மாநில அரசு கையகப்படுத்த முடிவெ டுத்தது. அவ்விரு குடும்பத் தார் மாநில அரசின் முடிவை எதிர்த்துவந்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் டாங்கோ கூறுகிறார்

மகாராட்டிரத்தின்  முன் னாள் அமைச்சர்டாங்கே கூறும்போது, உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை முன் னதாகவே பெற்றுவிட் டோம்.  மும்பையின் தென் கிழக்கில் சுமார் 350கி.மீ. தொலைவில் உள்ள கோயில் களில் கடந்த சில மாதங் களாகவே கோயில் வரு வாயை கோயிலுக்கே சேரும் படியாக மாற்றிவிட்டோம்.

அதற்கு முன்பாக இரு குடும்பத்தாரும் நாள் தோறும்நடைபெறும் பூசை களை ஏலம் விடுவார்கள். இரு அர்ச்சகர்கள் பூசைகளை தங்கள் தலைமையில் நடத்து வதாகக் கூறி,  ருக்மணிக்கான பூசைக்கு ரூபாய் ஏழாயிரத் துக்கும், வித்தோபாவுக்கு பூசை செய்ய ரூபாய் இருப தாயிரத்துக்கும் ஏலம் எடுப் பார்கள்.

நாள்தோறும் கிடைக்கக் கூடிய வருவாயாக சுமார் ரூபாய் ஒன்றரை இலட் சத்தை எட்டும்.  சிறப்பு நாள்களிலும், பண்டிகை நாள்களிலும்  அதிகம் கிடைக்கும் வருவாய் முழு மையாக அவர்கள் வைத்துக் கொள்வார்கள். ஆனால், தற் போது அனைத்து வரவு களும் கோயில் அறக்கட் டளைக்கே செல்கிறது. இந்த ஆண்டு கோயில் வருவாய் அய்ந்து கோடியைத் தாண் டும் என்று விவரித்தார் டாங்கே.

எல்லா வகுப்புகளிலிருந்தும் அர்ச்சகர்கள்

கோயில் அறக்கட்டளை புனிதப்பணியாக இலவச மாக சேவை ஆற்றக்கூடிய வர்களை ஏராளமாக நிய மிக்க விளம்பரப்படுத்தி உள்ளோம் என்று கூறிய டாங்கே மிகவும் புன்னகை யுடன் விண்ணப்பதாரர்கள் எந்த வகுப்பிலிருந்தும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள், மராத்தாக்கள், தாழ்த்தப் பட்டவர்கள், பழங்குடி யினர் மற்றும் பிற ஜாதிகளி லிருந்தும் இருப்பார்கள் என்றார்.

பந்தர்பூரில் உள்ள கோயிலில் வித்தோபா கட வுளின் சிலை (கிருஷ்ணன் சிலை) மற்றும் உடனிருக் கும் ருக்மணி சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. நகரில் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் வழிபடக் கூடியவர்களாக உள்ளனர்.

மகாராட்டிர மாநிலம் உட்பட பிற பகுதிகளிலிருந் தும் நாள்தோறும் சுமார் முப்பதாயிரம்பேர் வருகை புரிவார்கள். ஆண்டுக்கு நான்கு முறை விழாக் கோலமாக இருக்கும்.

அந்த நாள்களில் இரண்டு மில்லியனுக்கும் மேல் மக்கள் கூடுவார்கள். கண் ணைக்கவரும் வகையில் நவராத்திரி, தசரா உள்ளிட்ட காலங்களில் பக்தர்கள் புத்தாடை, நகைகள் அணிந்து கொண்டு, விளக்குகளின்  அலங்காரங்கள்  அருகில் ஓடும் அமைதியான பீமா ஆற்றின் நீரோட்டத்தில் பிரதிபலிக்கும்.

மும்பையில் பிரபல மான டப்பா வாலாக்கள் என்னும் உணவு எடுத்து செல்வோர் இரண்டு இலட் சம்பேர் இந்தக் கோயி லுக்குஆண்டுதோறும் தவறாது வரும் பக்தர்கள் ஆவார்கள். நூறு கிலோ மீட்டருக்கு அப்பால் இருந் தும் பாதசாரியாக பல்வேறு பகுதிகளிலிருந்தும் இரண்டு, மூன்று வாரங் களாக நடந்தே இந்தக் கோயிலுக்கு வருவார்கள்.

இந்து மாதங்களான சைத்ர (மார்ச்,ஏப்ரல்), அஷாதி (சூன்,சூலை), கார்த்திக் (அக்டோபர், நவம்பர்), மாகி (சனவரி, பிப்ரவரி) ஆகிய மாதங்களில்  நடைப்பயண மாக வருவார்கள்.

அப்படி வரும்போது, சுற்றி உள்ள கோயில்களான துல்ஜா பவானி கோயில்(சத்ரபதி சிவாஜிகுடும்பத்தார் கோயில்), சிறீ சுவாமி சமர்த் கோயில், சிறீ ஷேத்திரா கோயில், தத்தாத்ரேயா கோயில் ஆகியவற்றையும் கண்டு வருவார்கள் என்று அறக்கட்டளைத் தலைவர் டாங்கே கூறினார்.

(-டைம்ஸ் ஆஃப் இந்தியா, 11-5-2014)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *