20வருடங்களை பூர்த்தி செய்துள்ள- வெட்கித் தலைகுனிய வேண்டிய ருவாண்டா இனப்படுலை- “Why are you killing us? We used to be friends”

1994 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் இரு இனங்களுக்கிடையில்  நிகழ்த்தப்பட்ட கொடுரமான இனப் படுகொலையால் 8 இலட்சம் பேர் கொல்லப் பட்டனர்.

வரலாற்றில் நிகழ்ந்த மிக மோசமான  மனத இனப் படுகொலைகளில் எனக் கருதப்படும்; இவ் இனப்படுகொலை நடத்தப்பட்டு இன்றுடன் 20வருடங்களை பூர்த்தி செய்துள்ளன வெட்கித் தலைகுனிய வேண்டிய இவ் இனப்படுலையை ஐ.நா தடுக்கத் தவறியது உண்மை என்றும் இது வெட்கக்கேடானது என்றும் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

20 வருட நிறைவு காரணமாக ருவாண்டாவில் திங்கள் தொடங்கி ஒரு வார காலத்துக்குத் துக்க தினம் அனுட்டிக்கப் படுகின்றது. நேற்று நடந்த நினைவு தின நிகழ்ச்சியில் ருவாண்டா அதிபர் போல் ககாமே மற்றும் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போதே பான் கீ மூன் மேலே கூறிய கருத்தை அறிவித்திருந்தார். இதேவேளை இந்த இனப் படுகொலை நிகழக் காரணமாக இருந்த ருவாண்டா அரசுக்கு பிரான்ஸ்  உடந்தையாக இருந்தது என்று போல் ககாமே குற்றம் சுமத்தியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *