“மூன்றாவதுகண்” குழுவினரினால் நடாத்தப்பட்ட “பால்நிலை சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்” நிகழ்வு

நிரோசினி

மட்டக்களப்பில் செயற்பட்டு வரும் மூன்றாவதுகண் நண்பர்கள் வட்டத்தினரின் ; ‘பால்நிலைச் சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்’ எனும் நிகழ்ச்சிகள் கடந்த 16.03.2014 ஆந் திகதி ஊறணியிலுள்ள புனித ஜோண்ஸ் தேவாலய சமூக மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் ஓவியர் சுசிமன் நிர்மலவாசனின் தாபனக்கலைக் காட்சி குறித்த நிகழ்ச்சியின் கருப்பொருளை விளக்குவதாகவும் நிகழ்ச்சியில் பங்குபற்றிய அனைவரையும் இதில் ஈடுபடுத்துவதாகவும் அமைந்திருந்தது.

மூன்றாவதுகண் நண்பர்களின் பால்நிலைச் சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட ஓவியர் சுசிமன் நிர்மலவாசனின் தாபனக் கலையாக்கம

மட்டக்களப்பில் செயற்பட்டு வரும் மூன்றாவதுகண் நண்பர்கள் வட்டத்தினரின் ; ‘பால்நிலைச் சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்’ எனும் நிகழ்ச்சிகள் கடந்த 16.03.2014 ஆந் திகதி ஊறணியிலுள்ள புனித ஜோண்ஸ் தேவாலய சமூக மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் ஓவியர் சுசிமன் நிர்மலவாசனின் தாபனக்கலைக் காட்சி குறித்த நிகழ்ச்சியின் கருப்பொருளை விளக்குவதாகவும் நிகழ்ச்சியில் பங்குபற்றிய அனைவரையும் இதில் ஈடுபடுத்துவதாகவும் அமைந்திருந்தது.

அதாவது 6 அடி நீளத்திலும் 4 அடி அகலத்திலுமான கடதாசிகளால் தயாரிக்கப்பட்ட பெரிய வரை தாளில் ஒரு பெண்ணிப் முகம் வரையப்பட்டு அப்படம் மண்டப வாயிலில் நிலத்தில் விரித்து ஒட்டப்பட்டிருந்தது. இவ் ஓவியத்தின் மீது பல்வேறு வர்ணங்களிலுமான பனிக்கட்டிகள் பார்வையாளர்களால் அவர்கள் விரும்பிய விதத்தில் வைப்பதற்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன.

வழங்கும் முன் நிர்மலவாசன் அவர்கள் பெண்ணிலைச் சிந்தனைகளைப் பரவலாக்கம் செய்வது என்பதும் இப்படித்தான் பல்வேறு வண்ணங்களிலுமான பனிக்கட்டிகள் உருகி இந்த ஓவியத்திற்கு வேறொரு வடிவத்தைக் கொடுக்கப் போகின்றது அது உடனே நடந்து விடாது மாறாக மெல்ல மெல்ல படிப்படியாக இடம்பெறும், அவ்வடிவம் நம் எல்லோரதும் கைகளால் ஆக்கபூர்வமாக செய்யப்படும் மாற்றங்களினூடக அமைந்திருக்கும் எனவே மாற்றங்களுக்கான எமது செற்பாட்டிற்காக இக்கலைப்படைப்பாக்கம் மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார்.

மூன்றாவதுகண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாட்டு நண்பர்களால் “பெண்ணிலை வாதம்” சார்த  பாடலுடன் நிகழ்வு ஆரம்பமானது.

இதன்போது, கடந்த பத்து வருடங்களாக பால்நிலைச் சமத்துவம், பெண்ணிலை வாதம் சார்ந்து செயற்பட்டுள்ள மூன்றாவதுகண் நண்பர்களின் செயற்பாடுகளும் புரிதல்களும் பற்றிய அனுபவப் பகிர்வுகளுடனான கருத்தரங்கும், ஓவியர் சு.நிர்மலவானனின் தாபனக் கலை ஓவியக் கண்காட்சி மற்றும்  “மூன்றாவதுகண்’ நண்பர்கள் குழுவினரின் புத்தக வௌியீடும், கண்காட்சியும் இடம்பெற்றது.

இந் நிகழ்வு “பால்நிலை சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்” எனும் பொருளுக்கமைய சிறப்பாக இடம்பெற்றதனை அவதானிக்க முடிந்தது. இதன்போது.  பெண்ணியச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *