மன்னார் தழல் இலக்கியவட்டத்தின் ஏற்பாட்டில் “மகளிர் தினம்”

 தகவல் சந்தியா

மன்னார் தழல் இலக்கிய வட்ட இலக்கியத் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்த மகளிர்தின நிகழ்வானது இன்று  16/03/2014) காலை 10 மணிக்கு கலைஅருவி மண்டபத்தில் இடம்பெற்றது. எழுத்தாளர் வெற்றிச்செல்வியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக வருகை நேர விரிவுரையாளர் பண்டிதர்.ம.ந.கடம்பேஸ்வரன், செல்வி.கோதை பரதலோஜினி , திருமதி.வதனி (கலாச்சார அலுவலர்), செல்வி ஜெயசீலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். தமிழ்மொழி வாழ்த்துடன் ஆரம்பித்த இந்நிகழ்வில் திரு. தேவா மகளிர் தினம் பற்றிய அறிமுக உரையை ஆற்றினார்.

கவிஞர் மயூரனின் தலைமையில் மகளிர்தினக் கவியரங்கம் இடம்பெற்றது. இக்கவியரங்கில் மன்/அல் அஸ்கர் தேசிய பாடசாலையின் மாணவிகள் பங்குபற்றி சிறப்பாக கவிதைகளை வாசித்தனர். .

 

 மன்னார் பரத கலாலயா நாட்டியப் பள்ளி மாணவர்களான பங்குபற்றிய ஒயிலாட்டம் மிகச்சிறந்த சமுதாயக் கருத்துக்களைக் கொண்டதாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.  மாணவி செல்வி.நிசா “ மகளிருக்கு எதிரானவன்முறைகள்” பற்றிய உரையையும், தலைமையுரையை எழுத்தாளர் வெற்றிச் செல்வியும் ஆற்றினர்.

பண்டிதர் ம.ந.கடம்பேஸ்வரனின் “இலக்கண மரபு” எனும் ஆய்வுநூல் பற்றிய சிறப்புப்பார்வையை ஆசிரியை.கோதை பரதலோஜினி ஆற்றினார். புதிய தளம் இலக்கிய சஞ்சிகை பற்றிய அறிமுக உரையை திரு. காந்தன் ஆற்றினார். மன்னார் அமுதனும், வெற்றிச்செல்வியும்  நெறிப்படுத்திய இந்நிகழ்வில் செய்தித்தளத்தின் அனுசரனையுடன் மாணவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் பரிசுகள் வழங்கப்பட்டன. திருமதி.சுஜானா அப்துல்ரகுமான் அவர்கள் இநநிகழ்விற்கு பல வழிகளிலும் உதவிகளை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *