எத்தனங்கள்

சந்திரலேகாகிங்ஸிலி (மலையகம் ,இலங்கை)

எல்லா சில எத்தனங்களும்
எனக்குள் திமிறுகிறது…
உடைப்பெடுக்க எண்ணிய
அத்தனை கட்டுக்களும்
தனக்கிலகுவாய் சந்தர்ப்பங்களின் போது
லாவகமாய்,வீச்சாய்…
உலகை வெல்ல முனைகின்றது
நான் நானாக இருக்கும்பொழுது
அது என்னை விடுவதாய் இல்லை
கட்டுக்களை கனவிலும் கூட
பிய்த்தெரியும் போராட்டம் தொடர்கிறது.

நிஜத்தின் உடைப்புக்களை துணியும் போது
என் ஒவ்வொரு தலைமயிரையும்
திக்கு திக்காக பிய்த்தெரிய
காத்திருக்கும்…
சூனியபிசாசுகள்
இருந்தாலும் எத்தனிக்கின்றேன்.
எனக்கு உலகம் உடுத்திய
உடைகளைத் தெறிந்து
நிர்வாணப்படவும்
“சுயம்”பேசவும் எத்தனிக்கின்றேன்.
பேய்கள் விடுவதாய் இல்லை…
தம் கூரியநகங்களால்
என்னை குத்தியும் பார்க்கின்றன
ஆனாலும் எத்தனிக்கின்றேன்.

என் எத்தனிப்புகளுக்கு பல
ஆதரவுகள்
சுpல நிராகரிப்புகள்…
சுpல காரித்துப்புதல்கள்
சுpல ஏளனங்கள்,என்!
அடையாளத்தில்
சில நகைப்புகள் என் அச்சாணிக்குள்
இருந்தாலும் எத்தனிக்கின்றேன்.

பேய்கள் ரத்தம் குடிக்கவும்
துடிக்கின்றன…
அதன் நகங்களை உடைத்தெறியவும்
அதன் கைகளை பிய்த்தெறியவும்
அதன் பற்களை துண்டு  துண்டாய்
நொருக்கவும்
அதன் உயிர் மூச்சை ஒரேவிசையில்
நசுக்கிப்போடவும்.
நான் “சுயமாய்”புறப்படுகின்றேன்.
என் இதயபலத்தில்
உயிர் மூச்சின் உஸ்ணத்தில்
சூனியப் பேய்கள் சும்மாவே
பொசுங்கிப் போம்.
நான் – நானாக-பெண் – மலரல்ல – தீ

1 Comment on “எத்தனங்கள்”

  1. அன்பு தோழி சந்திரலேகாவுக்கு,

    நீங்கள் கவிதையும் எழுதுவீர்கள் என்று சொல்லவே இல்லையே!
    வாழ்த்துகள் தோழி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *