நாள்வழி

September 2010
M T W T F S S
« Aug    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

வகைகள்

உள்ளீடுகள்

மேடை

க.ஆஷா,  கெட்டபுலா (இலங்கை)

அலங்கரிக்கப்பட்டப்
பொய்களுக்கெல்லாம்
ஆசனமிட்டு அமர்த்திய
அந்த மேடை
ஏசி வாசிகளாயும் சில
ஓசி வாசிகளாயும் அங்கே
சில தேசவாசிகளின்இச்சைப் பேச்சுகளுக்கும்
கொச்சைப் பேச்சுகளுக்கும்
தன்னை அடிமைப்படுத்திக்கொண்ட
அந்த மேடை
குடிக்கும் கும்மாளத்திற்காய்
விழித்திருந்து தன் அமைவின்
இலக்கையே அர்த்தப்படுத்தாத
அந்த மேடை
ஏமாற்றுப் பேர்வழியினரின்
ஓய்விற்கும் ஒய்யாரத்திற்கும்
ஒதுக்கப்பட்ட
அந்த மேடை
என் அறிவாற்றல்களின்
அரங்கேற்றத்திற்குமாகவும்
அலங்கரிக்கப்படுமா?
என் ஈன்றோரின்
கனவுகளையும், என்
ஆசைகளையும்                               
காட்சிப்படுத்த ஒரு                           
வாய்ப்பளிக்குமா?

Leave a Reply

copyrights to oodaru ஊடறு
Entries (RSS) and Comments (RSS).