சின்னஞ்சிறிய பூக்கள் – 3

பிள்ளைகளின் தோட்டத்தில் சின்னஞ்சிறிய பூக்களுக்காய் …

சின்னஞ்சிறிய பூக்கள் – 3  சிறுவர்களின் படைப்புகளை ஒன்று சேர்த்து அவற்றை தொகுப்பாக வெளிக்கொணர்ந்து ள்ளனர்   உதவி நண்பர்கள்

சிறுவர்களால் எழுதப்பட்ட  கவிதைகள், கட்டுரைகள் பட,குறும்பட விமர்சனம் என அவர்களின் அனுபவங்கள் பலவற்றை பதிவாக்கியுள்ளது  மிகவும் வரவேற்கத்தக்கது. சிறுவர்களின் உணர்வுகளை  அவர்களின் பிரச்சினைகள் ,  பிஞ்சு மனங்களின் உட்கிடக்கைகளையும் அவர்களது தனித்துவத்தையும் ஆளுமையையும் வளர்க்க சின்னசிறிய பூக்கள் தொகுப்பாக வெளிவந்துள்ளது.

இத்தொகுப்பில் நான் எதிர்பார்க்கும் மலையகம்,நூறு ரூபாய் ஒன்றின் சுயசரிதை,நாயக்குட்டி, பிள்ளை மடுவம்,நாளைய கந்தலோயா மற்றும் Beijing Bicycle என  பல படைப்புக்கள்     தொகுக்கப்பட்டுள்ளன.
இத் தொகுப்பில் வே. கோசலாதேவி என்ற சிறுமி சலாம் பொம்பே திரைப்படத்திற்கு எழுதிய விமர்சனத்தில் உலகத்தில் நடந்து வருகின்ற  கெட்ட சம்பவங்களை இன்று தான் நான் தெரிந்து கொண்டேன் அதுவும் இப்படத்தை பார்த்ததால் மனம் நொந்துவிட்டது சிறுவர்களை மதித்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டியவர்களே சிறுவர்களை வேலைக்கு அமர்த்துகின்றார்கள்  பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்துகின்றார்கள் அவர்களின் பிஞ்சு மனதையும் சிதைகின்றார்கள் என தனது பட விமர்சனத்தில் குறிப்பிடுகின்றார்  

சின்னஞ் சிறுசுகளின்
உள்ளக் கனவுகளில்
உணர்ந்த செய்திகள்
வெட்கமும் பயமும்
மூச்சு முட்ட இறுக்க
முனங்கி ஒடுங்கி
சொல்லத் தயங்கி

உள்ளும் புறமுமாய்
உறங்கிக் கிடந்தவற்றை
கதைசொல்லி கட்டவிழ்க்க
சின்ன சின்னதாய்
மலர்ந்த மனப் பதிவுகளை
மறக்காமல் இருக்கவும்
மனதோடு இரசிகச்கவும்
மகிழ்வுடன் பகிர்கின்றோம்  
என்கின்றனர் இந்த சிறுவர்களாகிய கதை சொல்லிகள்

சின்னஞ்சிறிய பூக்கள் என்ற தொகுப்பை பெற்றுக்கொள்ள
www.uthawi.net


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *