எகிப்தில் அமைதி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுமிகள் உட்பட பெண்களை எகிப்தின் இராணுவ நிர்வாகம் 11 ஆண்டுகள் சிறை வழங்கியுள்ளது .

சர்மிதா நோர்வே

girls in prison

எகிப்தில் அமைதி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுமிகள் உட்பட   பெண்களை எகிப்தின் இராணுவ நிர்வாகம் வதைமுகாம்களில் தடுத்து வைத்துள்ளதுடன் பதினொரு ஆண்டுகள் சிறை தண்டனையையும் தீர்ப்பாக வழங்கியுள்ளது .
girls in prison

எகிப்தில் இடம்பெற்ற  இராணுவ சதிப் புரட்சிக்கு எதிராக அலெக்சாண்ரியாவில் அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிபடுத்திய பெண்கள் குழுவுக்கு  இந்த கடுமையான அடக்குமுறை மிக்க தண்டனையை வழங்கப்பட்டுள்ளது . இந்த பெண்கள் குழுவில உள்ள  சிறுமிகள்  அவர்கள் தண்டனைக்குரிய சட்டரீதியான வயதை அடையும்வரை தடுப்புமுகாம் ஒன்றில் வைக்கப்படவுள்ளனர். என்றும் சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றது .

‘பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம்’ என்ற பேரில்   ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை எகிப்தின் இராணுவ  நிர்வாக இடைக்கால ஆட்சியாளர்கள் கைதுசெய்து   தடுத்துவைத்து சித்திரவதை செய்வதுடன் படுகொலையும்  செய்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *