பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்போம்; யாழ். நீதிமன்றம் முன் கவனயீர்ப்புப் போராட்டம் –

சந்தியா இஸ்மாயில்

யாழ்.மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் ஒன்றிணைந்து யாழ்ப்பாண நீதிமன்றிற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று காலை நடைபெற்றது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்றாகும். தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக் காணப்படும் நிலையில் எதிர்வரும்  காலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க வேண்டும் என கோரி பெண்கள் அமைப்பினால் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது.

 யாழ்.மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் ஒன்றிணைந்து யாழ்ப்பாண நீதிமன்றிற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று காலை நடைபெற்றது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்றாகும். தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக் காணப்படும் நிலையில் எதிர்வரும்  காலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க வேண்டும் என கோரி பெண்கள் அமைப்பினால் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது. மேலும் நாச்சிமார் கோயில் தேர்முட்டியில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் கொலை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அது தொடர்பிலான விசாரணை நீதிமன்றில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த கொலை தொடர்பில் வழக்கு விசாரணைகள்  நீதியான முறையில் நடாத்தப்பட்டு குற்றவாளி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடாத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *