பெண் “போராளிகள்”

 முதலாளியத்துவ ஆதிக்கத்திற்கு எதிராக போராடப் பெண்களை அணி திரட்டுவதே இதன் நோக்கமாகும். ஈழத்தின் வட பகுதியில் பல இளைஞர்கள் கம்யூனிஸ்ட் கொள்கைகளைப் பரப்பினர் அவர்களோடு தோள் கொடுத்த மதிப்புக்குரிய பெண்கள் பலராவர். அவர்களில் வேதவல்லி கந்தையா திருமதி தங்கரத்தினம், பரமேஸ்வரி சண்முகதாசன், திருமதி வாலம்பிகை கார்த்திகேசு, திருமதி பிளோமினா என்போர் குறிப்பிடக் கூடியவர்கள். வேதவல்லி கந்தையா ஆசிரியர். இவர் மாதர்களை ஒன்று திரட்டி மாதர் சங்கத்தை உருவாக்கி ஆக்கப் பணிபல புரிந்தார். யாழ் மாவட்ட மாதர் குழு தலைவியாகவும் செயற்பட்டார். திருமதி தங்கரத்தினமும் ஆசிரியராக இருந்தவர். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகவும் மாதர் அமைப்பு தலைவியாகவும் இருந்தவர். முற்போக்கு எண்ணம் கொண்டவர். சாதி எதிர்ப்பில் ஈடுபட்டவர். அதனால் அவரது பாடசாலை எரிக்கப்பட்டது. இந்து போர்ட் இராசரத்தினம் அவர்களின் எதிர்ப்புக்கு ஆளனவர்.இதனால் பலமுறை பெற்றவர். துணிவும் மன உறுதியுகொண்டவர். நூல் சிறிதாக இருந்தாலும் சமூக முன்னேற்றத்திற்கும் முதலாளித்துவ முறைக்கும் போராடியவர்களை இன்றைய இளைய சமூகம் அறிய உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நூல்: பெண் போராளிகள் ஆசிரியர்:
வீ.சின்னத்தமபி வெளியீடு : கொழுந்து
பிரசுரம் 57 மகிந்த
பிளேஸ், கொழும்பு 6.
விலை : ரூபாய் 50 ரூபாய்

நூலாசிரியர் வ.சின்னத் தம்பி அவர்கள்P இடது சாரி இயக்கத்தைச் சேர்ந்தவர். இவர் இலங்கையிலும் சீனாவிலும் இடதுசாரி இயக்கக் கொள்கைகளைப் பரப்பியவர். இந்நூல் அகில உலக பெண்கள் தினத்திற்காக வெளியிடப்படுகிறது. சமூக முன்னேற்றத்திற்காகவும் விடுதலைக்காகவும் ஆண்கள் போராடியது போல கருத்து ரீதியாகப் பெண்களும் போராடியுள்ளனர் என்பதை உலகிற்கு காட்டு முகமாக வெளியிடப்படுகிறது. ஆணாதிக்கத்தின் பிடியில் இருந்து பெண்கள் விடுதலை பெற வேண்டும்.  அந்த வகையில் இந்நூல் முக்கியத்துவம் பெறுகின்றது. ஏன இத்தொகுபு;பை வெளியிட்டவர்களின் கருத்தாக உள்ளது.

 

1 Comment on “பெண் “போராளிகள்””

  1. இந்த நூல் தமிழ் நாட்டில் எங்கு கிடைக்கும்? இத்தகைய முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *