கேரா டோரா என்றொரு பெண்

 மாதவி ராஜ் (அமெரிக்கா)

 1910-ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த இவர்  ஹிட்லரின் நாஜி படைகள் மக்களுக்கு எதிராக யுத்தம் என்ற பெயரில் நடத்திய கொடுமைகளை எதிர்த்து பள்ளியில் படிக்கும் போதே போராட்டத்தில் இறங்கியவர்.மாணவியாய் இருந்த இவரை பிடித்து சிறையில் அடைத்தது நாஜி படை. ஆனாலும் சிறைக்குள்ளேயே இவரது போராட்டமும், நாஜிகளுக்கு எதிரான முழக்கங்களும் தொடர்ந்தன.

 அரச குடும்பத்தினர்களை சேர்ந்தவர்களை மட்டுமே அடக்கம் செய்வதற்காக ஓதுக்கப்பட்ட பரீசின் மயானத்திற்குள்  முதல் முறையாக 1937ம் ஆண்டு  பிறந்த சாதாரண குடும்பத்தை சேர்ந்த கொள்கையும், இலட்சியமும் கொண்ட உலகின் முதல் பெண் போர்க்கள புகைப்பட கலைஞர் கேரா டேராவின் உடலே அது.  அவரது இறுதி யாத்திரையின் போது பல்லயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்தனர்.   இவரைப் பற்றி 184 பக்கத்திற்கு, இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த புத்தகம்; பரபரப்பாக பேசப்பட்டது.

1910-ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த இவர்  ஹிட்லரின் நாஜி படைகள் மக்களுக்கு எதிராக யுத்தம் என்ற பெயரில் நடத்திய கொடுமைகளை எதிர்த்து பள்ளியில் படிக்கும் போதே போராட்டத்தில் இறங்கியவர்.மாணவியாய் இருந்த இவரை பிடித்து சிறையில் அடைத்தது நாஜி படை. ஆனாலும் சிறைக்குள்ளேயே இவரது போராட்டமும், நாஜிகளுக்கு எதிரான முழக்கங்களும் தொடர்ந்தன. இதனால் பல கொடுமைகளை சந்தித்தார் இவர்.இவர் மீதான கோபம் காரணமாக நாஜிகள் இவரது குடும்பத்தையே நாடு கடத்தியிருந்தனர். சிறையில் இருந்து வெளிவந்த பிறகு பிரிந்த குடும்பத்தை கடைசிவரை கண்டுபிடிக்கமுடியாமலே இறந்து போனார் டேரா

நாஜிகளின் யுத்த கொடுமைகளை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்ல பேச்சை விட புகைப்படங்களுக்கு சக்தி அதிகம் என்பதை உணர்ந்த அவர் ஓர் போர்கள புகைப்படக் கலைஞரானார். அப்போது போர்க்கள புகைப்படக் கலையில் புகழ்பெற்றிருந்த ராபர்ட் கபேயிடம் பயிற்சிகiளை பெற்றார். யுத்த களத்தில் இரத்த வெள்ளங்களுக்கு நடுவில்  குண்டு மழைக்கு நடுவில் புகைப்படத் தொழிலை நன்கு கற்று தேர்ந்தார். இராணுவ வீரர்கள் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு எதிரியை சுட்டுக்கொண்டு இருக்கும் அதே வேளையில் அவர்களுக்கு நெருக்கமாக இருந்து கொண்டு, துளியும் பயமின்றி நடக்கும் சம்பவங்களை தனது கேமிராவால் பதிவு செய்து கொள்வார் டோரா. கேரா டேராவின் தொழில் நேர்த்தியிலும், அழகிலும் மனதை பறிகொடுத்த ராபர்ட் கபே, தனது காதலை அவரிடம் ஒரு போர்முனையில் தெரிவித்தார், விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினார். காலம் வரட்டும்  எனது லட்சியம் நிறைவேறட்டும் அதுவரை நம்முடைய அன்பு என்பது நட்பாகவும், காதலாகவும் மட்டுமே இருக்கட்டும் என்று கூறி திருமணத்தை நிராகரித்துவிட்டார். டோரா

இவருக்குள் இருந்த நாஜிகளுக்கு எதிரான உத்வேகம், கொடுமைகளை சொல்லவேண்டும் என்ற விருப்பு அதிதீவிரம்  இவரது படங்களுக்கு கூடுதலாக உயிர் கொடுக்க உலகம் முழுவதும் இவரது படங்கள் பிரபலமாயின. போர்க்கள புகைப்படக்கலைஞர் என்றாலும் இவர் போரை வெறுத்தவராவார். யுத்தத்தால் பெண்களும்,குழந்தைகளும் பட்ட கொடுமைகளை  சொல்லிய உலகை உலுக்கியது  எனலாம்.

மாற்று உடையோ, போதிய உணவோ இல்லாமல் நீண்ட நாட்கள் தங்கியிருந்து இவர் எடுத்த ஸ்பானிஷ் போர் படங்களை “லைப்’, “லண்டன் நியூஸ்’ ஆகிய பத்திரிகைகள் முன்னுரிமை கொடுத்து  வெளியிட, டோராவிற்கு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் உருவானார்கள். அவரை பார்க்கவும், போர் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவும் நிறைய பேர்  அவருக்காக காத்திருந்தனர் ஆனால் யாரும் எதிர்பாரத நிலையில் ஸ்பெயின் போர்க்களத்தில் ஒரு இராணுவ டாங்கியின் கீழ்  சிக்கி உடல் சிதைந்து இறந்துபோனார். டேரா. அவருக்கு மரியாதை செலுத்தும் நோக்கில் பிரான்ஸ் அவரது உடலை  அரச குடும்பத்தினரை அடக்கம் செய்யும் மயானத்தில் விதைதது.

 

 

1 Comment on “கேரா டோரா என்றொரு பெண்”

  1. பெண் இனத்துக்குப் பெருமை தேடித் தந்துள்ள அந்த வீரப் பெண்மணியை எண்ணிப் பெருமிதம் கொள்கின்றேன். இவரைப் பற்றிய தகவலை நம்மோடு பகிர்ந்துகொண்ட மாதவி ராஜுக்கும், ஊடறுவுக்கும் நம் மனம் நிறைந்த நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *