உங்களைப் போன்றவர்கள் என் பிணத்தைக்கூடப் பார்க்கக்கூடாது.

ஜெயமோகன்

பெரியாரியம், அம்பேத்கரிய,பெண்ணிய, மார்க்ஸியம் பேசும்,எழுதும் சிந்தனையாளர்களையும் எழுத்தாளர்களையும் கருத்துநிலைரீதியாக எதிர்கொள்ளத் திராணியற்று, அவர்கள் மீது அவதூறுகளைப் பரப்புவதன் மூலம்,,அவர்களது செயல்பாடுகளை முடக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்- சங் பரிவாரக் கூட்டத்தின் முகவராகவே நீங்கள் செயல்படுகிறீர்கள். ஏகாதிபத்தியத்தின் கள்ளக்கூட்டாளிகளாக உள்ள இந்த சங் பரிவாரத்தைச் சேர்ந்த அமைப்புகள் எத்தனை அன்னிய நிதியில் திளைக்கின்றன என்பதைப் பற்றி நீங்கள் ஏதேனும் ‘ஆராய்ச்சி’ செய்ததுண்டா?

தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா ஆகியோரால் எழுதப்பட்டதும் விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டதுமான ‘பெரியார்:சுயமரியாதை’ நூல் -முன்விலைத் திட்டத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்ட நூல்இ அன்னிய நிதி உதவியைக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்று நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் எழுதிய அபாண்டமான பொய்க்கு வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால் “நான் சொன்ன கருத்து நூலாசிரியர்களைப் பற்றியது மட்டுமே தவிர பதிப்பகம் பற்றியது அல்ல” என்று கூறியுள்ளீர்கள். எனது நேர்மையை நீங்கள் சந்தேகிக்கவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

“பெரியார்;சுயமரியாதை சமதர்மம்’ பற்றிய அந்தக்கருத்து ஒரு பிழையான நினைவில் இருந்து எழுதப்பட்டது” என்று கூறுகிறீர்கள். உங்களது ‘பிழையான நினவு’க்கு ஆயுள் எவ்வளவு என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் இந்தக் கருத்தை கடந்த ஒருவார காலமாக தோழர் எஸ்.வி.ராஜதுரைக்கும் உங்களுக்கும் நடந்து வரும் விவாதங்களூடாக மட்டும் நீங்கள் வைக்கவில்லை என்பதையும் நீண்டகாலமாகவே இந்தக் கருத்தைச் சொல்லி வருகிறீர்கள் என்பதையும் நீங்களே ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். அதாவது, இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு 1996இல் வெளிவந்தபோதே, இந்தக் கருத்தை நீங்கள் சொல்லிவந்ததாக நீங்களே கூறியுள்ளீர்கள்.

அதாவது உங்கள் ‘ நினைவுப் பிழை’ ஏறத்தாழ பதினாறு ஆண்டுகாலமாக இருந்து வருகிறது என்பதுதானே இதற்கு அர்த்தம்?

மேலும் அன்னிய நிதியைக் கொண்டு ஆராய்ச்சி செய்து எழுதுவர்கள் என்று 1996இலேயே உங்களுக்குத் தெரிந்திருக்குமானால், அப்படிப்பட்டவர்களின் நூலை வெளியிடக்கூடாது என்று என் மீது இவ்வளவு மரியாதை வைத்திருக்கும் நீங்கள் எப்போதாவது என்னிடம் சொல்லியிருக்கலாம் அல்லவா?

உங்களது அப்பட்டமான,அபாண்டமான பொய் அம்பலப்பட்ட பிறகே என்னிடம் வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள்.

தோழர்கள் எஸ்.வி.ஆரும் வ.கீதாவும் எழுதிய ‘வுழறயசனள ய ழேn-டீசயாஅin ஆழஎநஅநவெ:குசழஅ Pநசலையச வழ ஐலழழவாநந வுhயளள’ என்னும் நூல், அவர்கள் இருவரும் தமிழில் எழுதிய நூலின் ஆங்கில மொழியாக்கமே தவிர வேறு அல்ல என்று கூறியுள்ளதன் மூலம்இ அந்த ஆங்கிலப் புத்தகத்தில் ஒரு பக்கத்தைக்கூட நீங்கள் படித்ததில்லை என்பதை அம்பலப்படுத்திக் கொண்டீர்கள்.

தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா ஆகியோர் பற்றிய எனது மதிப்பீடுகளை நீங்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்று கூறியிருக்கிறீர்கள். அது உங்கள் சொந்த விஷயம். ஆனால்இ விடியல் பதிப்பகத்தின் செயல்பாடுகளிலிருந்தும் அதன் நோக்கங்களிலிருந்தும் இந்த இருவரையும் பிரித்துப் பார்க்க நான் மறுக்கிறேன். இது என் உரிமை; கடமை.

பெரியாரியம்,அம்பேத்கரிய,பெண்ணிய, மார்க்ஸியம் பேசும், எழுதும் சிந்தனையாளர்களையும் எழுத்தாளர்களையும் கருத்துநிலைரீதியாக எதிர்கொள்ளத் திராணியற்று, அவர்கள் மீது அவதூறுகளைப் பரப்புவதன் மூலம், அவர்களது செயல்பாடுகளை முடக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்- சங் பரிவாரக் கூட்டத்தின் முகவராகவே நீங்கள் செயல்படுகிறீர்கள். ஏகாதிபத்தியத்தின் கள்ளக்கூட்டாளிகளாக உள்ள இந்த சங் பரிவாரத்தைச் சேர்ந்த அமைப்புகள் எத்தனை அன்னிய நிதியில் திளைக்கின்றன என்பதைப் பற்றி நீங்கள் ஏதேனும் ‘ஆராய்ச்சி’ செய்ததுண்டா?

உங்களைப் போன்றவர்கள் என் பிணத்தைக்கூடப் பார்க்கக்கூடாது.

பெ.சிவஞானம் (விடியல் சிவா)
கோவைஇ24.06.2012

ஜெயமோகனின் பதில்

(பெருமதிப்புக்குரிய விடியல் சிவா,

எஸ்.வி.ராஜதுரையின் நூல்களால் அல்ல விடியல் நினைக்கப்படப்போவது. அவை உள்நோக்கம் கொண்ட, திரிபுகள் கொண்ட நூல்கள். இந்தியவரலாற்றின்மீதும் இந்தியவரலாற்றுநாயகர்கள் மீதும் ஏகாதிபத்திய வரலாற்றுத்திரிப்பாளர்களின் அரசியல் நோக்கத்துக்கேற்ப பொய்களைச் சுமத்தக்கூடியவை

விடியலின் வலிமை அது வெளியிட்ட முக்கியமான மொழியாக்கங்கள்தான் . தேபிபிரசாத் சட்டோபாத்யாயவின் ‘இந்திய தத்துவமரபில் நிலைத்திருப்பவையும் அழிந்தவையும்’ முதல் சமீபத்தில் வந்த டிராட்ஸ்கியின் வாழ்க்கை வரலாறு வரையிலான ஆக்கங்களால் விடியல் தமிழ்ச்சிந்தனை மரபில் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நிலைத்திருக்கும்.அதற்காகவே நீங்கள் பெருமைகொள்ளவேண்டும். இதை விடியலின் நூல்களை எல்லாம் வாங்கிய வாசகனாக நான் சொல்லலாமில்லையா?

எஸ்.வி.ராஜதுரையின் நூல் வெளிவந்தபோது நான் எழுதிய குறிப்புக்குப் பின்னர் கிட்டத்தட்ட பதினைந்தாண்டுகள் ஓடிவிட்டன. ஆகவே நூலை நினைவுகூர்வதில் பிழை ஏற்பட்டுவிட்டது. அதற்கான காரணத்தையும் சொல்லிவிட்டேன். ஆகவே தான் உங்களை வருத்தம்கொள்ளவைக்க நேர்ந்தது. உடனடியாக நான் பதிவை திருத்தியும் விட்டேன். இதை தெளிவாகவே விளக்கியிருக்கிறேன்.)தொடர்ந்து வாசிக்கhttp://www.jeyamohan.in/?p=28404)

 

3 Comments on “உங்களைப் போன்றவர்கள் என் பிணத்தைக்கூடப் பார்க்கக்கூடாது.”

  1. “ஊடறு” ஆசிரியர்களுக்கு,

    விடியல் சிவா அவர்களுடைய மடலை வெளியிட்டிருந்தீர்கள். அதன்பின், அதற்கான ஜெயமோகனின் பதிலுக்கு விடியல் சிவா எழுதியுள்ள மறுமொழியைப் பதிவு செய்கின்றீர்கள். அது சரியல்ல. விடியல் சிவா அவர்களின் மடலுக்கான ஜெயமோகனின் பதிலையும் தந்தபின், அதற்கான மறுமொழியைப் பதிவதே, பக்கசார்பற்ற “ஊடறு”வின் சரியான முன்னெடுப்பாக இருக்கும். இல்லாதபர்சத்தில் 2 பிழைகள் நேரும் அபாயம் உண்டு.

    1) “ஊடறு” வாசகர்களுக்கு விஷயம் அரைகுறையாகவே தெரியவரும் அல்லது தெளிவின்மை ஏற்பட இடமுண்டு.

    2) “ஊடறு” ஒரு பக்க சார்பான ஊடகமோ என்ற ஐயம் தோன்றவும் இடமுண்டு.

    எனவே, பொது விவாதம் என வரும்போது, களத்தில் இரு தரப்புக் கருத்துக்களையும் முன்வைப்பதே ஒரு நடுநிலை ஊடகத்தின் செயற்பாடாக இருக்கும்.

    “ஊடறு”விடம் அதையே நான் எதிர்பார்க்கின்றேன்.

    குறிப்பு: விடியல் சிவா அவர்களின் முதல் மடலுக்கான ஜெயமோகனின் பதிலை இங்கே காணலாம்:
    http://www.jeyamohan.in/?p=28404

  2. நட்புடன் லறீனாவுக்கு உங்கள் கருத்துக்கு நன்றி ஆனால் ஊடறுவுக்கு அனுப்பியதால் அதை நாம் பிரசுரித்தோம் ஜெயமோகன் எமக்கு அனுப்பவில்லை அதனால் அரவது பதிலை நாம் பிரசுரிக்கவில்லை தற்போது நீங்கள் சுட்டிக்காட்டியபின் நாம் ஜெயமோகனின் பதிலை அதே விமர்சனத்தின் கீழ் இணைத்துள்ளோம் மிக்க நன்றி உங்கள் விமர்சனங்கள் எங்களை உற்சாகப்படுத்துகின்றன. நன்றி லறீனா

  3. பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் ஒரே தரத்தில் வைத்து ஏற்றுக்கொள்ளும் உங்கள் மனப்பக்குவமும், ஊடக தர்மத்தை உறுதியாகப் பேணும் உங்கள் நேர்மையும் என்னை அளவிலா மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மிக்க நன்றி! ஊடறுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *