3 Comments on “Ponni Arasu performing ‘Karuppi’ at the Kailasapathy auditorium in Colombo.”

  1. வித்தியாசமான முயற்சி. காலனித்துவ அரசுகளால் அடிமைகளாகக் கொண்டுசெல்லப்பட்ட காலம்முதல் இன்றைய வாழ்வுவரை பெண்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள், வன்முறைகள், இழப்புகள் ஆகியன பற்றியெல்லாம் எடுத்துக்காட்டும் தனிஆற்றுகை. ஆற்றுகைகயின் நடுவே வருகின்ற உண்மைச்சம்பவங்களும் அதற்கு ஆதாரமாக எடுத்தாளப்படும் கவிதைவரிகளும் முக்கியமானவை.

    – துவாரகன்

  2. அருமையான தனி நடிப்பு… ஆம்… எப்படிப் பார்த்தாலும், பெண் வெறும் ‘உடம்பு’தான்… கறுப்பி, சிவப்பி, கட்டை, நெட்டை,பெருத்த மார்புகள், நீண்ட கண்கள் இவ்வாறாக விபரிப்புகள்தான் வேறுபடும். பொன்னியின் நடிப்பாற்றல் பிரமிக்க வைக்கிறது.

  3. மிகவும் வித்தியாசமான அதேசமயம் அதியற்புதமான அளிக்கை.

    ஓரங்க நாடகம் மூலமும் அரிதான பல செய்திகளைச் சமூகத்துக்குச் சொல்ல முடியும் என்பதை பொன்னி அரசு நிரூபித்துள்ளார். பெண் சார்ந்த/ தனது சமூகம் சார்ந்த பன்முகப்பட்ட நுண்ணிய பிரச்சினைகளை இவ் அளிக்கை மூலம் அவர் அழுத்தமாய் வலியுறுத்துகின்றார். ஒரு “பெண்”ணாய் இருந்தும் சாதிக்க முடியும் என்பதற்கு அவர் உயிர்ச்சான்றாய்த் திகழ்வது நம்மைப் பெருமிதத்தில் ஆழ்த்துகின்றது.

    “நான் எங்கு போனாலும், யாராக இருந்தாலும் நான் ஒரு உடம்பு” என்று அழுத்தம் திருத்தமாய் அவர் கூறும் இடத்தில், அவ்வாசகம் உணர்த்தும் சமூக யதார்த்தம் அதிர்வினை ஏற்படுத்துவது. பல்தேசியக் கம்பெனிகளுக்கு லாபம் உழைத்துக் கொடுக்கிறோமே என்ற புரிதலோ விழிப்புணர்வோ இன்றி, வெறும் அழகுப் பதுமைகளாய், “பெண் என்பவள் ஓர் உடம்பு மட்டுமே!” என்பதைச் சொல்லாமல் சொல்லிப் “போஸ்” கொடுப்பதையே புகழாகக் கருதும் நவ நாகரிகப்(!?) பெண்கள் மத்தியில், “கறுப்பி” தனித்துவமானவள்! சாதிக்கப் பிறந்தவள்!

    பொன்னி அரசுக்கும், ஊடறுவுக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *