மறுக்கப்பட்ட பெண்ணின் உணர்வுச் சிதைவுகள்- வாரிஸ் டேரி

 வாரிஸ் டேரி கந்து அகற்றல் பற்றி குறிப்பிடும் அறியாமை, குழப்பம், வெட்கம் எல்லாமும் கலந்து…என்ற கட்டுரையை ஊடறுவில்  வாசிக்க

varis

பிரித்தானியாவில் ஒரு இலட்சம் பெண்களுக்கும் சிறுமியருக்கும்  கந்து அகற்றல்  செய்யப்பட்டுள்ளதாகத்  பத்திரிகைச் செய்தி ஒன்றில் தெரிய வந்துள்ளது.
இந்த சட்டவிரோதமான முறையில் பெண்களுக்கு கந்து அகற்றல் பத்து வயதிலேயே செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

குறித்த செயற்பாடுகளில் மருத்துவர் அல்லது  இணை  மருத்துவர்  மற்றும்  முறையான பயிற்சி எடுக்காத மருத்துவப் பயிற்சியாளர்  தாதிகள் என ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்றும்  மற்றும் சமூக  கலாசாரம்,மதம் என்ற போர்வையில்  பெண்களுக்கு செய்யப்படும் சித்திரவதையாகவே இதைப் பார்க்க முடியும் என்றும் அப் பத்திரிகையில் இதைப்பற்றி குறிப்பிட்டுள்ள மடம் ரெபேக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.  சமூக காரணங்களுக்காக இந்த நடைமுறை ஆபிரிக்கா முழுவதும் பரவியுள்ளதாகவும் இப்படியான பிறப்பிறுப்புச் சிதைப்பில் ஈடுபடுகின்றவர்களுக்கு பிரித்தானியாவில் 14 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது.  இந்த கொடுமையான ஆபத்தையும் சித்திரவதையையும்  பிரித்தானியாவில் வருடாந்தம் 22,000 பெண்கள் எதிர் நோக்குவதாக ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் குழந்தையாக இருக்கும் போதே கந்து அகற்றல் லால் பாதிக்கப்பட்ட (Waris Dirie)    வாரிஸ் டேரி தற்போது சுப்பர் மொடலாக உள்ளார்.

 வாரிஸ் டேரி கந்து அகற்றல் பற்றி குறிப்பிடும் அறியாமை, குழப்பம், வெட்கம் எல்லாமும் கலந்து…என்ற கட்டுரையை ஊடறுவில்  வாசிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *