ஒற்றைப் பரிமாண ஆணாதிக்க வக்கிரங்களே பெண்களுக்கெதிரான வன்முறைக்கான காரணம்

யுகாயினி

Crying_Woman பெண்களுக்கெதிரான வன்முறைகளில் மிகவும் மோசமானதும், ஏற்றுக்கொள்ள முடியாததும் அவர்களுக்கெதிரான பாலியல் வன்முறையே ஆகும். புனிதமாக இருவர் மனமொத்து அடைய வேண்டிய இன்பப் பகிர்தலை, ஆண்கள் பலாத்காரமாக அடைவது எவ்வளவு நியாயமற்ற கொடுமையான செயல்!

இன்று நாளுக்கு நாள் பெண்களுக்கெதிரானதும்,சிறுவர்களுக்கு எதிரானதுமான வன்முறைகள் அதிகரித்து வருவதை பத்திரிகைச் செய்திகளில் தரிசிக்கின்றோம். பெண்ணியம்; முன்னேற்றப் பாதையில் தன் இலக்குகளை நோக்கி நேரிய பயணத்தை மேற்கொள்வதாகவும், பெண்ணுரிமைகள் மெல்ல கிடைத்து வருவதாகவும் கூறிக்கொள்ளும் இன்றைய புத்தாயிரம் ஆண்டில்தான் இந்தகொடுமைகள் இன்னும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. பெண் என்பவள் சக மானுடப் பிறவி என்ற கருத்தோட்டம் முற்று முழுதாக ஏற்றுக்கொள்ளப் படாமையும், பெண் பற்றிய ஒற்றைப்பரிமாண ஆணாதிக்கப் பார்வையும் பாரம்பரியமாக இன்னும் தொடர்ந்து வருவதைப் புறந்தள்ள முடியாமைதான் தற்குக் காரணம். ஆண்களின் பார்வையில் பெண் என்றதும் அவளது உடல் தான் முதன்மையாகத் தோன்றுகின்ற அவலநிலை இன்னும் தொடரவே செய்கிறது. பெண் என்றதும் பெண் எவ்வளவு படித்தவளாக, ஆற்றல் செயற்திறன் மிக்கவளாக இருப்பினும் ஆணாதிக்கப் பார்வையில் அவளது உடற் தோற்றத்தின் சிந்தனை, ஏனைய அவளது திறமைகளைப் பின் தள்ளிவிடுவதோடு, பெண் பற்றிய மனிதநேயப் பார்வையும் குறுகிவிடுகிறது. ஆண் பெண் இருவரும் பரஸ்பரம் ஒருவரில் மற்றவர் சார்ந்து வாழ்பவர்கள். ஒரு பெண்ணின் வாழ்வுக்கு ஓர் ஆண் எவ்வளவு முக்கியமோ, அதேயளவு ஆணின் வாழ்வுக்கும் அவள் முக்கியம். நிலைமை இவ்வாறு இருக்க பால் நிலை சமத்துவமற்று ஆண் பெண்ணைவிட மேலாதிக்கமானவனாக நினைத்துக் கொள்வது எவ்வளவு அபத்தமானது! அதிலும் பெண்ணைத் தனது சொத்துடமையாக ஆண் நினைக்கிறான். தனது தேவைக்கான ஒருத்தியாக மட்டும் நினைக்கிறான். பாலியல் தேவை கூட இருபாலாருக்கும் அவசியமான ஒன்றென ஆண் நினைப்பதில்லை. தான் இன்பம் அனுபவிப்பதற்கான ஒரு சாதனமாகவே பெண்ணை ஆழ்மனத்திலாவது நினைக்கின்ற நிலையில் இன்னமும் ப+ரண மாற்றம் ஏற்படவில்லை.

இதனால் தான் தமது உணர்வுகளை முதன்மைபடுத்தும் ஆண் பெண்ணின் உணர்வுகளுக்கு தடை போடுகின்றான். அதாவது இயல்பாக இருக்கின்ற உணர்வுகளைக் கூட கொச்சைப்படுத்தி தனக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி என வரையறை செய்துள்ளான். இந்த ஒற்றைப் பரிமாண ஆணாதிக்க வக்கிரம்தான் பெண்களுக்கெதிரான எல்லாவிதமானவன்முறைகளுக்கும், அடக்கு முறைகளுக்கும் தூபமிடுகின்றது என்றால் அது மிகையாகாது. பெண்களுக்கெதிரான வன்முறைகளில் மிகவும் கொடூரமானது பாலியல் வன்முறைதான். இது
முதலாவதாக பெண்ணின் ஆழ்மன உணர்வுகளை  ஏற்றுக்கொள்ளாமையைக் குறிப்பிடலாம்.

அதாவதுபெண்ணுக்கு பாலியலை ஆர்வம் இருப்பதை அங்கீகரிக்காமை, அடுத்து வெளித்தெரியும் ஆர்வத்தை கொச்சைப்படுத்தல். இதில் வேடிக்கை என்னவென்றால், பாரம்பரியமான கட்டமைப்பில் இக் கொச்சைப்படுத்தலை பெண்களின் ஊடாகவே செய்யப்படுவது தான். அதாவது பெண்களின் பாலியல் உணர்வுகள் வெளிப்படும் போது இதர பெண்களே மும்மரமாக இதைப்பற்றி விமர்சிக்கும் நிலையைச் காண்கிறோம். இவ்வாறே பெண்களிடம் சீதனம் சீர்வரிசை எதிர்பார்க்கும் விடயங்களிலும் பெண்களே முதன்மையாகவோ மூர்க்கமாகவோ
நிற்பதைக் காணமுடிகிறது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெண்களுக்கெதிரான வன்முறை களை பெண்களின் துணையுடனோ, பெண்களினூடகவோ ஆணாதிக்க சமுதாயம் சாதுரியமாகநறைவேற்றுகிறது. இதைப் பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த இலக்கை அடைவதில் பெண்ணியவாதிகளின் செயற்பாட்டின் போதாமையை
தடுக்க முடியாமலிருப்பதற்கான முக்கிய காரணம்எனலாம்.

Crying_Womanபெண்களுக்கெதிரான வன்முறைகளில் மிகவும் மோசமானதும், ஏற்றுக்கொள்ள முடியாததும் அவர்களுக்கெதிரான பாலியல் வன்முறையே ஆகும். புனிதமாக இருவர் மனமொத்து அடைய வேண்டிய இன்பப் பகிர்தலை, ஆண்கள் பலாத்காரமாக அடைவது எவ்வளவு நியாயமற்ற கொடுமையான செயல்! அதுவும் இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் பாலியல் ரீதியில் களங்கப்பட்ட பெண்ணின் எதிர்காலமே சூனியமாகி பாலியல் வக்கிரப் போக்குடைய ஆண்கள் இது பற்றி சிந்திப்பார்களா? ஆண்களில் பலர் மனிதாபிமான முள்ளவர்களாக இருப்பினும், மனிதநேயமற்ற சில ஆண்களின் செயற்பாட்டால ஏத்தனை அபலைப் பெண்களின் வாழ்வு பாழாகின்றது. பாலியல் வன்முறையில் உச்சமாக கொலையும் செய்யப்படும் நிலை உள்ளது. மனமுடைந்த பாதிப்புக்குள்ளான பெண்களில் சிலர் தற்கொலையும் செய்கின்றார்கள். இந்த கொடுமைகளுக்கு முடிவு காண்பது சமூகம்தான். சட்டங்கள் இறுக்கமாக இருந்தும் கூட இக்கொடுமைகளைத் தடுக்க முடியவில்லை. சில பெண்கள் தமது எதிர்காலம்முழுமையாக அஸ்தமிததுவிடும் என அஞ்சி சட்ட உதவிகளை நாட பின் நிற்கிறார்கள். வெறும் பாலியல் வல்லுறவுகளுக்கு அப்பால் பெண்களை நம்ப வைத்து காதலிப்பது போல் பழகி அவளுடன் உறவு கொண்டுவிட்டு ஏமாற்றும் ஆண்களையும் காணமுடிகிறது. சிலர் தமது பதவி மேலாதிக்க நிலையை முன்வைத்து பெண்களை அடிபணிய வைத்து உறவு கொள்கிறார்கள். இன்னும் லர் பெண்களின் வறுமையையும் அறியாமையையும் தமக்கு சாதகமாக்கி உறவு கொள்கிறார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக பெண் சிறுமிகளை வல்லுறவுக்கு உள்ளாக்கும் கொடியவர்களையும் காண முடிகிறது. இதில் நெருங்கிய உறவு முறையிலஉள்ளவர்களும் அடங்குவர். பெண் சிறுமிகளை மாத்திரமின்றி சிறுவர்களையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் அவலம் அண்மைக்காலமாக ஒரு தொற்று நோய் போல் தொடர்கிறது. இவை எல்லாம் முடிவுக்கு கொண்டுவரப்படாவிட்டால் பெண்ணிய இலக்குகளை எட்ட முடியாது. பாலியல் பாதுகாப்பு உணர்வை பெண் சிறார்களுக்கு ஊட்டுமளவுக்கு, அவ்வாறு ஈடுபடுவதால் ஏற்படப்போகும் பாதிப்புக்கள் பற்றி ஆண் சறார்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும். ஒழுக்க நெறிகளை சிறுவயதிலிருந்தே ஊட்டுதல்பெற்றோரினதும், ஆசிரியர்களினதும், பெரியோர் களினதும் கடமையாகும்.

மல்லிகையில் வெளிவந்த இக்கட்டுரையை ஊடறுவுற்காக சந்தியா அனுப்பித் தந்தமைக்கு நன்றிகள்.-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *