மலையக மக்களை இலங்கையின் ஒரு தேசிய இனமாக அடையாள படுத்தும் பண்பாட்டு வாழ்வியல்

“பாடி”ப்பறை
Feb 2012 invi Draft 1 PAGE 1 மலையக மக்களை இலங்கையின் ஒரு தேசிய இனமாக அடையாள படுத்தும் பண்பாட்டு வாழ்வியல் அம்சங்களில் மிக முக்கியமான ஒன்றாக நாட்டார் வழக்காறுகள் அதாவது கிராமிய வழிபாட்டு அம்சங்கள், நாட்டார் பாடல்கள், கதைப்பாடல்கள், கூத்துக்கள் என்பன முக்கியமான பங்கு வகிக்கின்றன.மலையக நாட்டார் பாடல்களில் கூட்டு உழைப்பு முன்னிலை பெற்று நிற்பதை தெளிவாக இனம்காண முடியும். இவற்றில் பெரும்பாலானவை இந்தியாவிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்ட பாடல்களாக உள்ளபோதும் மலையக உழைப்பின் தாக்கம் இவற்றை தனித்துவமானவை ஆக்கியுள்ளன. ஃபெப்ரவரி மாதத்திற்கான “பாடிப்பறை” நிகழ்வு மலையகத்தின் நாட்டார் பாடல்கள் என்ற தொனிப் பொருளில் வெளிப்படுகின்றது.

சமூக விஞ்ஞானக் கற்கை வட்டமானது ஒவ்வொரு மாதத்தின் முழுமதி (போயா) விடுமுறை தினம் அன்றும் “பாடிப்பறை” என்றழைக்கப்படும் இலக்கிய நிகழ்வை நடாத்தி வருகின்றது. இந்நிகழ்வில் முக்கியமாக, கவிதைகள் பிறந்த சூழல், கவிதைகள் மீதான விமர்சனம், கவிஞர்கள் பற்றிய பார்வை மற்றும் சமூகத்தில் கவிதையின் தாக்கம் ஆகிய விடயப்பரப்புகள் சார்ந்த உரைகள், துறைசார் விற்பன்னர்களைக் கொண்டு ஆற்றுவிக்கப்படும். மற்றும், பாடல்கள் , கவியாற்றுகைகள் ஆகியவையும் இடம்பெறும்.

ஃபெப்ரவரி மாதத்திற்கான “பாடிப்பறை” நிகழ்வானது, போயா விடுமுறையான எதிர்வரும் 07 – 02 – 2012 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணிக்கு, நடைபெறும்.

நிகழ்ச்சி நிரல்

கவிதை நயவுரை:
கவிஞர் சோலைக்கிளி அவர்களுடைய
“குருத்துக்கள் வாசி”

மு.மயூரன்

ஆய்வுரை:
“மலையக நாட்டார் பாடல்கள் பிரதிபலிக்கும் மக்களின் வாழ்க்கை கூறுகள்”

திரு.சிவ. இராஜேந்திரன்
உப பீடாதிபதி
சிறீபாத தேசிய கல்விக் கல்லூரி

நாட்டார் பாடல்களின் ஆற்றுகை:

திரு.சை.கிங்க்ஸ்லி கோமஸ்
திரு. ஏ.சி.ஆர். ஜோன்

நடன ஆற்றுகை:
( திருமதி. அபிராமி காண்டீபன் அவர்களுடைய நெறியாள்கையில் )

செல்வி.பாத்திமா ஜுமானா பர்கத்
செல்வி.பாத்திமா டில்சாத் றுக்சனா

பாடிப்பறை” கவித்துறை நிகழ்வினூடாக மக்கள் கலைகள் மீள வெளிப்படுத்தப் படுகின்றன. கவிதையும் சமூகமும் ஒன்றுசேரும் இந்நிகழ்வில், கலந்து சிறப்பிக்குமாறு, சமூக விஞ்ஞானக் கற்கை வட்டம் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *