ஊடக அடக்குமுறைக்கு எதிராக “கறுப்பு ஜனவரி” எதிர்ப்பு போராட்டம்

அன்னபூரணி (மட்டக்களப்பு ,இலங்கை)

    

ஊடக அடக்குமுறைக்கு எதிராக  கறுப்பு ஜனவரி எதிர்ப்பு  போராட்டம் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இன்று புதன்கிழமை மாலை நடைபெற்றது. இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம், சுதந்திர ஊடக அமைப்பு, முஸ்லிம் மீடியா போரம் உள்ளிட்ட ஊடக அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டு ஊடக அடக்குமுறைக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.‘பிரகீத்  எக:னலியகொட காணாமல் போய்   இரண்டு வருடங்கள் ஆகியுள்ள நிலையில்  அரசு மௌனம்’, ‘லசந்த படுகொலை செய்யப்பட்டு மூன்று வருடங்கள் கொலையாளிகள் சுதந்திர  நடமாட்டம்“, ‘லங்கா ஈ நியூஸ் கொழுத்தப்பட்டு வருடம் ஒன்று அரசு மௌனம் போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்டை ரயில் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையிலேயே ஆர்ப்பாட்டத்தை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததினால்   ஊடக அமைப்புக்கள் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளித்து லிப்டன் சுற்றுவட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து நடத்தியது. 

  ஊடக சுதந்திரம் குறித்த பட்டியலில் இலங்கை 163வது இடம் – எல்லைகளற்ற ஊடகவிலாளர் அமைப்பு 
 
பிரான்சை தளமாகக் கொண்டியங்கும் எல்லைகளற்ற ஊடகவிலாளர் அமைப்பினால் வருடம் தோறும் வெளியிடப்படும் ஊடக சுதந்திரம் குறித்த பட்டியலில் இவ்வாண்டு இலங்கை 163வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது. (. ( Reporters Without Borders -RSF)எல்லைகளற்ற ஊடகவிலாளர் அமைப்பினால் வெளியிடப்பட்ட 2011 மற்றும் 2012ஆம் ஆண்டுக்கான இப்பட்டியலில்  இத் தகவல் வெளியிடப்புடுள்ளது. இந்நிலையில், இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊடக அடக்குமுறை, ஊடகங்கள் மீதான தாக்குதல்கள், இணையத் தளங்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் தணிக்கைகள் காரணமாக இவ்வாண்டு இலங்கை பின்தள்ளப்பட்டுள்ளதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

 

 
 

0 Comments on “ஊடக அடக்குமுறைக்கு எதிராக “கறுப்பு ஜனவரி” எதிர்ப்பு போராட்டம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *