பம்பைமடு பெண்போராளிகள் தடுப்பு முகாம் சுவர்கள் சொன்ன கதைகள்(1)

நன்றி http://senppagam.blogspot.com

fighters1 விடுதலைபுலிகளுடனான போரின் பின் சரணடைந்த பெண்போராளிகளை அடைத்து வைத்திருந்த மானவர்விடுதி கட்டிடம் மீள கையளிக்கப்பட்டபின் அங்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கு சுவர்களை பார்த்ததும் ஏற்ப்பட்ட உணர்வுகளை எனக்கு சொல்ல தெரியவில்லை …

விடுதலைபுலிகளுடனான போரின் பின் சரணடைந்த பெண்போராளிகளை அடைத்து வைத்திருந்த மானவர்விடுதி கட்டிடம் மீள கையளிக்கப்பட்டபின் அங்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கு புதிதாக தங்க வைக்கப்பட்ட வவுனியா வளாகத்தின் சிங்கள மாணவர்கள் விடுதி சுவர் அசுத்தமாக உள்ளது என்று கடிதம் ஒன்றை எமது மாணவர் ஒன்றியத்துக்கு கையளித்தார்கள். உடனே விடுதி சுவரை வர்ணப்பூச்சு செய்து தாருங்கள் என்று வளாக முதல்வருக்கு கடிதம் எழுதிவிட்டு சுவர்களை புகைப்படம் பிடித்து கடிதத்துடன் இனைபதற்க்காக புகைப்பட கருவியுடன் அங்கு சில நண்பர்களுடன் சென்றேன்.

அங்கு சுவர்களை பார்த்ததும் ஏற்ப்பட்ட உணர்வுகளை எனக்கு சொல்ல தெரியவில்லை … சுவர் முழுவதும் தடுத்து வைக்கப்பட்டுருந்த பெண்போராளிகளின் உணர்ச்சி கிறுக்கல்கள் கொட்டிகிடந்தன. எல்லாவற்றையும் பார்த்து முடிந்தவுடன் எழுதிய கடிதத்தை கிழித்து போட்டுவிட்டு நானும் நண்பர்களும் கனத்த இதயங்களுடன் வெளியேறினோம். அந்த சுவர்களில் அவர்கள் காதல்,கடவுள் ,அம்மா என தங்கள் எண்ணங்களை கீறி இருந்தார்கள் அங்கே சொடுக்கிய புகைப்படங்களில் சில இதோ……

fighters1

jail1

 

jail3

1 Comment on “பம்பைமடு பெண்போராளிகள் தடுப்பு முகாம் சுவர்கள் சொன்ன கதைகள்(1)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *