இலங்கையில் கல்வியறிவு வளர்ச்சியுடன் பெண்களுக்கான வேலைவாய்ப்பின்மையும் வளர்கிறது .

நன்றி தினக்குரல்

women-strugle சமூக செயற்பாடுகளும் பெண்களுக்கெதிராக உள்ளன. “ஆண்களைப் போலன்றி பெண்கள் நீண்டநேரம் தொழில் செய்யவோ, கொழும்புக்கு வெளியிற் சென்று பணிபுரியவோ முடியாதவர்கள். எனவே அவர்கள் அரச பணியில் கவர்ச்சிகரமான தொழில் நிலைக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் அருணதிலகா கூறியுள்ளார்.

பல மாதங்களாக ஒவ்வொரு வாரமும் ஒரே நிலையே தொடர்கிறது. பத்திரிகை வாங்குவது, வேலை வாய்ப்புகளுக்கான விளம்பரங்களை அலசுவது, அருமையாகவாவது வேலைகள் கிடைக்கும் சந்தர்ப்பமாவது கிடைக்குமா எனக் குறித்துக்கொள்வது. அடுத்ததாக விண்ணப்பங்கள் அனுப்புவது பின்னர் நேர்முகப் பரீட்சைக்கான எதிர்பார்ப்புகளோடு இருப்பது. இதுதான் கர்ஷினி கத்துறுசிங்கி சம்பந்தமாக நடைபெற்றது. அனுபாமா கனெகோடா, அவரது நண்பி, இந்தப் பயங்கரமான நேர்முகப் பரீட்சைகளுக்குத் தோற்றினார். அந்த தொழில்கள் தற்காலிகமானவை. அவை வெற்றியளிவிக்கவில்லை.”ஏதோ ஒரு காரணத்திற்காக எனக்கு உத்தியோகம் கிடைக்கவில்லை. காரணம் நான் அறியேன்’ என்கிறார் கத்துறுசிங்கி ஐ.பி.எஸ்.ஸிற்கு.அவர் தகைமைகள் உள்ளவர். பட்டதாரிகளுக்கான பின்படிப்பு டிப்ளோமா பட்டம் பெற்றவர். ஆங்கிலம்  சரளமாகப் பேசுகிறார். ஆனால், அதிகரித்துவரும் விண்ணப்பதாரிகளுக்கான பதவிகள் கிடைப்பது அரிதாகவே உள்ளது என்கிறார் அவர்.அவரது நண்பியும் இரண்டு குறுகியகால பதவிகளோடு அதேவிதமான அனுபவத்தையே பெற்றுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகள் வேலையற்றவராகவே உள்ளார். “பெண்கள் பாரபட்சமாகவே நடத்தப்படுகின்றனர் என நான் கருதுகிறேன்’ என்கிறார் அவர். சிறிலங்காவில் வேலை பெற்றுக்கொள்வது பெண்களுக்கு முடியாத காரியமாகும். ஆகப் பிந்திய அரசினால் வெளிப்படுத்தப்பட்ட குடிசன மதிப்பீட்டுத் தரவுகளின் பிரகாரம் சென்ற ஆண்டு நடுப்பகுதியின் வேலையின்மை 4.2 வீதமாகும். இந்த விகிதம் பெண்களையும் ஆண்களையும் வேறுபடுத்திக் கணக்கிடும்போது வேறுபடுகிறது.

women-strugleகத்துறுசிங்கி, கனேகோடா போன்ற கல்வியறிவுடைய பெண்கள் இந்த வேலை வாய்ப்பு இன்மையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாவர். அரச கணிப்புக் கூறுவதாவது கனிஷ்ட பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை சித்தி எய்தியவர்களிடையே தான் இந்த வேலை வாய்ப்பின்மை அதிக உயர்ந்த நிலையில் உள்ளது. இது 7.8 வீதத்திலுள்ளது. இதன் பிரகாரம் வேலைவாய்ப்பின்மை பெண்கள் மத்தியில் 4.4 வீதமாகவும் உள்ளது. இந்த நிலை படித்த பெண்கள்மத்தியில் வேலை வாய்ப்பின்மை ஆண்களிலும் பார்க்க மிக உயர்ந்தளவிலுள்ள பிரச்சினை என்பதைக் காட்டுகிறது. நிபுணர்கள் சுட்டிக்காட்டுவதாவது உயர்ந்த கல்வித் தகைமைகள் கொண்ட பல பெண்கள் தாங்கள் விரும்பும் தொழில்களான  ஆசிரியத் தொழில், அரச தாபனங்களில் வேலை ஆகியவற்றிற்காகக்  காத்திருக்கிறார்கள். பல இளம் பெண்கள் தமக்கு உகந்த தொழில்களுக்காகக் காத்திருக்கின்றனர். ஆகவே அத்தகைய தொழில்கள் கிடைக்க நீண்டகாலம் எடுக்கும், “இதனை கர்ஷா அற்ருறுபானஉலக வங்கியின் கல்வி சம்பந்தமான வல்லுநர்ஐ.பி.எஸ்.ஸிற்குக் கூறியுள்ளார். தனது வேலை தேடும் பிரச்சினையை தனது உயர் படிப்புக்காகநிறுத்தி வைத்துள்ள கனகோடா இந்தக் குழுவைச் சேர்ந்தவராவர். நான் எத்தகைய தொழிலுக்குமாக இவ்விதம் கடுமையாக படிப்பில் ஈடுபடவில்லை. சரியான தொழிலுக்காக நான் காத்திருக்கிறேன்’ என்கிறார் இந்தப் பட்டதாரிப் பெண். பாதுகாப்பான வாழ்க்கை, கிடைக்கும் சலுகைள் ஆகியவை பல பட்டதாரிப் பெண்களை நல்ல அரச பணி கிடைக்கும்வரை காத்திருக்க வைக்கின்றன.இன்னொரு காரணம் அதிகளவான கலைப் பட்டதாரிகள் இருப்பதாகும். இலங்கைப் பல்கலைக்கழகங்கள் பட்டதாரிகளில் கால்வாசிப்பேர் கலைப் பட்டதாரிகளாவர். எனவே வேலைகள் குறைந்த அளவில் இருப்பதனால் நல்ல உகந்த வேலைகளைப் பெற்றுக்கொள்வது இவர்களுக்குக் கடினமாக உள்ளது.”நல்ல வேலைகளுக்கு தேவையான திறமையின்மையும் இத்தகைய அரச பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்குத் தடையாகவுள்ள’ என கொள்கை வகுப்பாளர் மன்றத்தைச் சேர்ந்த நிஷா அருண திலகா ஐ.பி.எஸ்.ஸிற்குக் கூறினார்.

சமூக செயற்பாடுகளும் பெண்களுக்கெதிராக உள்ளன. “ஆண்களைப் போலன்றி பெண்கள் நீண்டநேரம் தொழில் செய்யவோ, கொழும்புக்கு வெளியிற் சென்று பணிபுரியவோ முடியாதவர்கள். எனவே அவர்கள் அரச பணியில் கவர்ச்சிகரமான தொழில் நிலைக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் அருணதிலகா கூறியுள்ளார்.அவுஸ்திரேலியாவிலுள்ள மொனஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன் வேலை செய்வதற்கான இந்த மனநிலையில் அடிப்படையிலான மாற்றம் ஏற்பட வேண்டும் என அழைப்புவிடுக்கிறார். அவர் பெண்கள் சகல துறைகளிலும் பணி செய்ய வேண்டும் என்றும் சமூகம் அதனை ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் கூறுகிறார். தொழில் வழங்குபவர்கள் பெண்கள் பிரசவ லீவு எடுப்பது பற்றி விருப்பம் காட்டுவதில்லை. எனவே பிரசவ லீவு, வேறு பெண்களோடு தொடர்புபட்ட லீவுகள் பெண்களது வேலைவாய்ப்புகளில் எதிரான நிலைப்பாட்டை உருவாக்குகின்றன. இது ஒரு பாரபட்சமான நிலையாகும் எனவும் சர்வானந்தன் கூறுகிறார். இருபாலாருக்கும் இடையே சமநிலையைப் பேணும் சட்டம் ஒன்று தொழிற்துறையில் உருவாக்கப்பட வேண்டும். பெண்களுக்கு பாரபட்சம் காட்டும் நிலை சட்டபூர்வமாக நீக்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *