எங்கே போய் சொல்லி “அழ”

சந்தியா (யாழ்ப்பாணம்)

வாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறோம், முன்னாள் போராளி .

முழு மக்களையும் ஆக்கிரமித்து நிற்கின்ற ஊடகங்களும் இணையங்களும்  மக்களுக்கு  மறைக்க முனைகின்ற  செய்தியை வெளிப்படையாக சொல்ல வேண்டும். தற்கொலை செய்து கொண்டவர் ஒரு முன்னாள் போராளி அதுவும் ஒரு காலை போரில் இழந்தவர்

வாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற் இதை கொலை.

‘நாங்கள் இருவரும் குருணல் மருந்தை குடித்து உயிரை விடுகின்றோம். எங்கள் இருவரது உடலையும் ஒரு பெட்டிக்குள்ளாக வைத்து ஒரு ரோட்டுக்கரை சுடலையில மற்றவர்கள்  பார்க்கும் படியாக தாட்டு கல்லை கட்டி எங்கட பெயரை எழுதி விடவும். நாங்கள் இருந்த வீட்டுக்கோலுக்குள்ளே எங்கள் உடல்களை வைத்து எடுக்க வேண்டும் வீட்டுக்கு நேரேயே பந்தல் போடவேண்டும் இது எங்கள் ஆசை இதை நிறைவேற்றி வைப்பீர்களா??

இது ஒன்றும் சினிமாவிற்காகவே அல்லது தொலைக்காட்சி நாடகங்களுக்காகவே எழுதப்பட்ட வசனமே அல்ல மாறாக மரணத்தறுவாயில்  வாழ்விழந்த ஒரு முன்னாள் போராளியின் இறுதி மூச்சுக்கணங்களில் வெளி வந்த மனக்குமுறல்கள் தான் இவை 

கடந்த 16ம் திகதி முள்ளியவளை பால்பண்ணை முறிப்பு என்ற இடத்தில் நிரஞ்சன் 29 வயது  சங்கீதா 27 வயது என்கின்ற இரு இளம் தம்பதியினர் தற்கொலை செய்து கொள்ள முதல் எழுதிவைத்த கடிதத்தில் உள்ள  வசனங்களே இவை.

ஆனால் இன்று முழு மக்களையும் ஆக்கிரமித்து நிற்கின்ற ஊடகங்களும் இணையங்களும்  மக்களுக்கு  மறைக்க முனைகின்ற  செய்தியை வெளிப்படையாக சொல்ல வேண்டும். தற்கொலை செய்து கொண்டவர் ஒரு முன்னாள் போராளி அதுவும் ஒரு காலை போரில் இழந்தவர் அவர் புனர்வாழ்வு பெற்று திரும்பி தனது வாழ்க்கையை வாழ முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

முன்னாள் பேராளிகள் என்று சொல்லும் போது அவர்கள் யார்? இன்று தழிழ் தேசியம், விடுதலை, தழிழ்ஈழம்  மாற்றுக் ,பெண்ணியம், மனிதஉரிமை, யாழமேலாதிக்கம் சாதியம்  என தங்களது சொந்த நலன்களுக்காக ஊடகங்களில் கூக்குரல் ஈடுவோரே! தங்கள் வாழ்க்கையை ஆகுதியாக்கிய அப்பாவி இளைஞர்கள் மட்டுமல்ல இன்று நம் மனங்களில் துயில் கொண்டிருக்கும் அந்த ஜீவன்களின் நினைவுகளைச் சுமந்தவர்களால் யுத்தகளத்தில் நின்று இறுதி கணம் வரை பேராடியவர்கள் இவர்கள். பல்வேறு காரணங்களால் இவர்கள் இராணுவத்திடம் சரணடையவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இங்கு ஒரு முன்னாள் பேராளி மட்டுமல்ல யுத்தினால் பாதிக்கப்பட்ட மக்களும் நாளாந்த கஞ்சி குடிக்க முடியாமல் என்ன செய்வது யாராவது ஒரு தொழில் செய்ய உதவி செய்ய மாட்டார்களா ? என்று அரச சார்பற்ற நிறுவனங்களின் பக்கம் ஒடித்திரிவதும் அரசாங்கம் கொடுக்கும் சின்ன சின்ன உதவிகளையும் பெற்று கொண்டு வயிற்றை கழுவிக்கொண்டிருக்கின்றனர். 

சாவின் விளிம்பில் எத்தனையோ முன்னாள் போராளிகள் அங்கவீனர்களாகவும் வாழ்விழந்தவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும்  சரி நாடுகடந்த தழிழீழ அரசும் சரி எதையும் செய்யவில்லை இதற்குள் புரட்சி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் எங்கே போய் சொல்லி அழ

 

 

 

3 Comments on “எங்கே போய் சொல்லி “அழ””

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *