சீதா ரஞ்சனியின் “கருத்துக் கொலைக்கு இறையானோர்”.

seetha

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் ஊடக ஊழியர்கள்,கலை,கலாச்சார செயற்பாட்டாளர்கள் 1981 – 2009 மார்ச்(சுதந்திர ஊடகம்)

கருத்துக்கொலைக்கு இரையானோர் என்ற நூல் வெளியாவது இலங்கையின் காணக்கூடிய அதே போல் காணமுடியாத அரசியல் சக்திகளுக்கு ஊடகங்கள் மோசமான நிலைக்கு உள்ளான சந்தர்ப்பத்திலாகும். இருந்தும் இலங்கையில் ஒட்டுமொத்த ஊடக அடக்குமுறையின் சரித்திரம் இந்த நூலில் உள்ளடக்கபடவில்லை. ஊடக அடக்குமுறை உச்சகட்டத்தில் இருந்த போது இடம்பெற்ற மனிதக்கொலைகள் மாத்திரம் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

seetha

கருத்துக்கொலை மற்றும் ஊடக அடக்குமுறையின் மிக மோசமானக குற்றம்
ஆட்கொலையாகும். ஆட்கொலை மற்றும் கொலை செய்யப்பட்ட விதம் குறித்து ஆராய்ந்த போது கருத்துக்களைக் கொண்டிருத்தல் வெளிப்படுத்துதல் மற்றும் தகவல்களை வெளியிடுவதை தடுப்பதற்கு அடக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஏனைய முயற்சிகளின் விபரீதத்தை புரிந்து கொள்ளக்கூடியதாகவிருக்கும் இவ்வாறு இடம்பெறுவதற்கான காரணமாகவிருந்த சமூக அரசியல் நிலைமைகளை உணர்ந்து கொள்வதற்கும் இது உதவியாகவிருக்கும்.

இத்தகவல் தொகுப்பு அதை ஆய்வு செய்ய ஒரு வழியை திறந்து வைப்பதாக அமையும். இதை இலகுவாக்க இந்த தகவல்கள் சம்பந்தப்பட்ட துறையின் முக்கியத்துவம் அல்லது பிரபல்யம் போன்ற காரணங்களை கொண்டு வரிசைப்படுத்தாமல் கொலையுண்ட ஆண்டு என்ற ரீதியில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக சீதா ரஞ்சனி கூறுகிறார்.

இந்நூல் முன்று மொழிகளிலும் வெளிவந்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

இப்புத்தகத்தை பெறுவதற்கு ஊடகவியலாளர்கள்,எழுத்தாளர்கள் தொடர்பு கொள்ள

சுதந்திர ஊடகம் இயக்கம்
இல. 96 கிருள் வீதி நாரேன்பிட்ட
கொழும்பு 05

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *