என்னுடைய “உரிமையை” பறிக்காதீர்

தேனுகா (பிரான்ஸ்)

 photowide

பிரான்சில் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை பிரான்ஸ் அரசு தடைசெய்தது யாவரும் அறிந்ததே. சுட்டம் அமுலுக்கு வந்தபின்  பர்தா  அணிந்ததற்காக் 32  வயது பெண் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஹிந்த் அஹ்மாஸ் என்னும்  அவருக்கு பாரிஸ் நீதிமன்றம் நாள் சிறை தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.  இதனை எதிர்த்து அவர் மனித உரிமை நீதிமன்றத்திற்கு செல்லப் போவதாக தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் குடியுரிமை உள்ள ஒருவர் எப்படி அந்நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைய வாழவேண்டும் என்ற பயிற்சியை இப்பெண்ணுக்கு அளிக்குமாறு அவ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவ் பயிற்சியை மறுக்கும் அப்பெண் இப்பயிற்சியை தனக்கு அளிக்குமாறு கூறிய நீதிபதிக்குத் தான் முதலில் பயிற்சி அளிக்கவேண்டும் என்றும் ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தை சீரழிக்க அந்த நீதிபதிக்கு உரிமையில்லை என்றும் கூறியுள்ளார். ஆனாலும் அப்பெண்ணுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும் 27000 யூரோ அபராதமும் விதிக்கப்படு அவர் சிறையில் அடைகச்கப்பட்டுள்ளார்.

பர்தா அணிந்தற்காக ஏற்கனவே சிறைவாசம் அனுபவிக்கும் இன்னொரு பெண்ணுடன் இணைந்து என்னுடைய உரிமையை பறிக்காதீர் என்னும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதற்கு பல முஸ்லிம் பெண்கள் ஆதரவு தெரிவித்துவருவதாக கூறப்படுகின்றது. பிரான்ஸ் பர்தாவை தடைசெய்ததை தொடர்ந்து தற்போது பெல்ஜியம்,கொலண்ட், போன்ற நாடுகளும் அடுத்த ஆண்டில் தடையுத்தரை பிறப்பிக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

1 Comment on “என்னுடைய “உரிமையை” பறிக்காதீர்”

  1. ஆகா! நாகரிகத்தின் உச்சியில் இருப்பதாய் மார்தட்டிக் கொள்ளும் ஃபிரான்ஸ்ஸில், ஓர் ஐரோப்பிய நாட்டில் எந்தளவுக்கு மனித உரிமை, தனி மனித சுதத்திரம் என்பன பேணப்படுகின்றன, பாருங்கள்!

    ஒரு பெண்ணிடம் பலவந்தமாய் ஃபர்தா போடு என்று சொல்வது எவ்வளவு அநாகரிகமோ, அதேயளவு அநாகரிகம் ஒரு பெண் போட்டிருக்கும் ஃபர்தாவைக் கழட்டு என்று நிர்ப்பந்திப்பதும்! இன-மத பேதமின்றி மனித உரிமைக்கு எதிரான இந்த அத்துமீறலை அனைத்துப் பெண்கள் அமைப்பும் எதிர்க்க முன்வரவேண்டும்!

    மிக்க அன்புடன்,
    லறீனா அப்துல் ஹக்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *