கலகத்தை முன்னிறுத்தும் அரவாணிகளின் குரல்

 aravaani  அரவாணிகள் உலகம் என்பது இங்குள்ள பெண் ஆண் உலகத்திலிருந்து தனித்து அமைந்திருக்கிறது. அரவாணிகளாகச் சேர்ந்து கொள்கிற அவர்கள் ஒரு தனிச் சமூகக் குழுவாகவே இருந்து கொண்டிருக்கிறார்கள். மனிதப் பிறவியாகவே பிறந்த அரவாணிகளைக் கேவலமான பண்பாட்டுக்குரியவர்கள் எனச் சொல்வதற்குப் பின்னால் இந்தியச் சூழலில் இந்து மதம் சார்ந்த ஆண் ஆதிக்கம் பேசுகிற தொன்மங்கள் வினையாற்றுகின்றனஇந்து மதம் சார்ந்த கருத்தியலில் ஒன்றுதான் லிங்க மைய வாதம். தந்தை வழிச் சமூகத்தின் எச்சங்களை இக் கருத்தியல்கள் தாங்கி நிற்பதை பார்க்கலாம். ஆண் மேலானவன் உயர்வானவன், வலிமையானவன், ஆளக்கூடியவன், புனிதமானவன் என்பதாக  லிங்க மையவாதம் ஆண் தலைமையை முன்வைக்கும். அதே போல பெண்ணின் யோனி வழிப்புணர்ச்சி தான் சமூகத்தில் மேலோங்கி நிற்கிறது. இக் கருத்தியல்கள் அரவாணிகளை எப்படி பார்க்கிறது. 

அரவாணிகள் ஆண்குறியோடு பிறந்திருந்தாலும் ஆண்குறி குறி தனக்கு இருப்பதை விரும்பாதவர்கள். ஏதோ ஒரு வகையில் ஆண் குறியை அறுத்து எறிந்து புதைத்து விடுகிறார்கள். இதுவே லிங்க மையவாதத்தை தகர்க்கும் தன்மை கொண்டது. லிங்க மைய வாதத்திற்கு நேர் எதிரான கலககத் தன்மை கொண்டது. இன்னொன்று அரவாணிகளுடனான பாலியல் புணர்ச்சி என்பது யோனி வழிப்பட்டதல்ல. ஆக லிங்க மைய வாதத்திற்குள் பெண் கீழாக வைக்கப்படுகிறாள். லிங்க மைய வாதத்திற்குள் வராத, எதிராக இருக்கும் அரவாணிகள் இழிவானவர்களாகக் கருத்தாக்கம் செய்கிறது அவ் வாதம். இதன் நீட்சியாகத்தான் அரவாணிகளைக் கேவலமாகப் பார்ப்பதும் அங்கீகரிக்காமல் இருப்பதுமான நிகழ்வுகளாக அமைகின்றன.

இங்கே பெண்களும் அரவாணிகளை கேவலமாகத்தான் பார்க்கிறார்கள். சமூகத்தில் பிறந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆணுக்கும் பாதுகாப்பும் பகிர்தலும் குறைந்தளவேனும் கிடைக்கப் பெறும். ஆனால் அரவாணிகளுக்கு அத்தகைய வாய்ப்புக்கள் அமைவதில்லை. பெண்கள் தங்களது அடிமைச் சிiறியிலிருந்து விடுதலை பெற வேண்டுமானால் கர்ப்பப் பைகளை அறுத்தெறியுங்கள் என்றார் பெரியார். இதைச் சமூகம் ஓரளவேனும் உணரத் தொடங்கினாலும் கூட, கர்ப்பப் பைகளே இல்லாத அரவாணிகளைப் பற்றி புரிந்து கொள்ள மறுப்புத் தெரிவிக்கிறது.  அரவாணிகள் குறித்து தவறான கற்பிதங்களை சமூகம் உருவாக்கி வைத்திருந்தாலும், அதை மாற்றிட  சமூக மாற்றத்திற்கான அமைப்புகளும் கவனம் செலுத்தியாக வேண்டும்.  அரவாணிகளும் மனிதர்களே, அவர்கள் தனித்த பிறவிகள் அல்லர் என்பதை உரத்துச் சொல்லும் காலம் என்றைக்கு வருகிறதோ அன்றைக்கு தான் மனிதர்களைச் சமூகம் புரிந்து கொண்டதாக கருத முடியும்.

இந் நூல் மகாராசன் என்பவரால் தொகுக்கப்பட்டுள்ளது. இதை தோழமை வெளியீடு செய்துள்ளது.

1 Comment on “கலகத்தை முன்னிறுத்தும் அரவாணிகளின் குரல்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *