இலங்கை,வடபகுதியில் தொடரும் இராணுவ ஒடுக்குமுறையும், பாலியல் வல்லுறவுகளும்! –

சனல் 4 தொலைக்காட்சியில் மீண்டும் இலங்கை பற்றிய  செய்தி! இலங்கை நிலைமைகள் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி நேற்றிரவு (20.04.11) செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

இலங்கையில் போர் முடிவடைந்த பின்பும் கூட மிக எளிதாக எவரும் சென்றுவிட முடியாத பிரதேசங்களில் சனல் 4 தொலைக்காட்சிக்குக் கிடைத்த இந்தக் காணொளிகள் பக்கச் சார்பற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக   தெரிவிக்கப்பட்டுனள்ளது சனல் 4 தொலைக்காட்சியால் தயாரித்து வழங்கப்பட்ட இவ்வறிக்கையில் தன்னை யாரொன வெளிப்படுத்திக் கொள்ளாத ஒரு பெண் தனக்கு சிறிலங்காப் படையினரால் இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து விபரிக்கின்றார்.சுமார் ஆறு அல்லது ஏழு சிறிலங்காப் படையினரால் தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து இக் காணொளியில் குறிப்பிட்டுள்ள பெண், அக்கணத்தில் தான் எப்படி உணர்ந்தேன் என்பதை என்னால் எப்படி  விபரிக்க முடியும் என கேள்வி எழுப்புகின்றார். அத்துடன், இவ்வாறு கடவுள் ஏன் தங்களைத் தண்டிக்கிறார் என இப் பெண்மனி தனது சாட்சியத்தில் கவலை தெரிவிக்கின்றார்.

அதேவேளை, இப் பகுதிகளில் சிறிலங்காப் படையினரால் மேற்கொள்ளப்படும் பாலியல் துஸ்பிரயோகங்கள் குறித்து தகவல்கள் கிடைக்கப் பெறுவதாக குறிப்பிடுகின்ற தொண்டு நிறுவன பணியாளர் ஒருவர்இ  இச் சம்பவங்கள் தொடர்பில் எத்தகைய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாத சூழலே அங்கு காணப்படுவதாகவும்  தனது விசனத்தை வெளியிடுகின்றார்.
 
வடபகுதி மக்களுடைய நிலங்கள் உல்லாச விடுதிகள்இ வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் உல்லாசப் பயணத் துறைக்காகவும் அபகரிக்கப்படுகின்றன. ஆனால் அம் மக்களோ தரப்பாளின் கீழ் வாழ்க்கை நடாத்துவதாகவும் இச் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காணொளிக் காட்சியை எடுத்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் பணயம் வைத்தே இதனை எடுத்திருக்கிறார்கள். இப் பிரதேசங்கள் இன்னமும் சிறிலங்கா படைத்தரப்பின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழேயே இருக்கின்றன. அங்குள்ள மக்கள் மிகுந்த பயப் பீதியுடனேயே தங்களது நாட்களைக் கழித்து வருகின்றார்கள்.

அத்துடன்இ வடபகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் தற்காலிக முகாம்களிலேயே வாழந்து வருவதாகவும், அவர்கள் திட்டமிட்ட முறையில் சிறிலங்கா அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வருவதையும், பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதையும் இச் செய்தி அறிக்கை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளது.வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதுடன், இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

சனல் 4 தொலைக்காட்சிக்கு கிடைக்கப் பெற்ற ஆவணங்களின்படி வன்னிப் போரின் முடிவில் ஒரு இலட்சம் மக்கள் தொடர்பான விபரங்கள் எதுவும் இதுவரை பதிவுகளில் இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களின்படி போர் கடுமையாக இடம்பெற்ற வன்னிப் பிராந்தியத்தில் 2008ஆம் ஆண்டு 430,000 பேர் வாழ்ந்துள்ளார்கள். ஆனால், வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களை தம்மால் அறிவிக்கப்பட்ட நவன்புரி முகாம்களில் தஞ்சமடையும்படி சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி இவ்வாறு நலன்புரி நிலையங்களில் தஞ்சமடைந்தவர்களின் எண்ணிக்கை 290,000 பேர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில், சுமார் ஒரு இலட்சம் பேருக்கு என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் எதுவுமில்லை.
 
போரின் போது இடம்பெயர்ந்த பெரும்பாலான மக்கள் இன்னமும் தமது உறவுகளைத் தேடிக்கொண்டே இருக்கின்றார்கள். ஏனையவர்கள் நீதி கேட்டுப் போராடி வருகின்றார்கள். டாக்கடர் மனோகரனும் அவர்களில் ஒருவர். அவருடைய மகன் சிறிலங்காப் படையினரால் 2006ஆம் ஆண்டு படுகொலை செய்யப்;பட்டார். தன்னுடைய மகனுடைய படுகொலைக்கும்இ இலங்கையில் இவ்வாறு பாதிப்புக்குள்ளான ஏனையவர்களுக்காகவும் தான் நீதி கேட்டுப் போராடி வருவதாக அவர் சனல் 4 தொலைக்காட்சிக்கு கூறியுள்ளார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *