ஓசை புதையும்வெளி’

parameswary 2004ல் தனது ‘எனக்கான வெளிச்சம்’ கவிதைத் தொகுப்பின் மூலமாக இலக்கிய வெளியில் அறிமுகமான தி. பரமேசுவரியின் இரண்டாவது நூல் ‘ஓசை புதையும்வெளி’. எல்லோரையும் போலவே தனது மன அவசங்களையும் தனிமையையும் இச்சமூகத்தின் மீதான அதிருப்தியையும் வெளிப்படுத்தும் பரமேசுவரி இவற்றையெல்லாம் தாண்டி தனது கவிதைகளின் வாயிலாக தன்னை தனித்து அடையாளப்படுத்த முயல்கிறார்.

ஒரு பேரலையின் மீதமர்ந்து பின் அது என்னை உருட்டிப் புரட்டிக் கீழ் தள்ளி வேடிக்கை பார்ப்பது போலக் காலம் என்னைப் புரட்டிக் கொண்டிருக்கிறது. எத்தனை விதமான மனிதர்கள், மனங்கள்,மன அவஸ்தைகள் முன்னுரையில் தனது உறைந்திருக்கும் மௌனத்தைப் பேசும் தி. பரமேசுவரியின் ஒரு கவிதை சாட்சி

உலரும் சுவடுகள்

நிலை கொள்ளா மனம்
மகிழ் நிலைகளில் தேங்கித் ததும்பி
துன்ப நினைவுகளில் காலம் கழித்து
அலைகின்றது பத்திரமின்றி
பதிந்த ஈரச் சுவடுகள்
உலர்வது போலழியும் ஆசைகள்
உலர உலரச் சொட்டும் ரத்தமென
நீளும் கானல்கள்

எப்படியோ நகர்கிறது வாழ்க்கை
அறுந்த பின்னும் துடித்துக் கொண்டிருக்கும்
பல்லியின் வாலென.

ஓசை புதையும் வெளி
தி. பரமேசுவரி பக்: 72 ,ரூ. 50/
வம்சி புக்ஸ், திருவண்ணாமலை.

1 Comment on “ஓசை புதையும்வெளி’”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *