இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு

அதிரா இலங்கை

women-violence_26

லங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் வெகுவாக உயர்வடைந்துள்ளதாக பால்நிலை வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கும் பெண்களில் 43 சதவீதமானவர்கள் பாலியல் இம்சைகளுக்கு ஆளாவதாக சட்ட உதவிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் வெகுவாக உயர்வடைந்துள்ளதாக பால்நிலை வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கும் பெண்களில் 43 சதவீதமானவர்கள் பாலியல் இம்சைகளுக்கு ஆளாவதாக சட்ட உதவிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை பாதுகாப்பாக 12வது இடத்தில் உள்ளபோதும், பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் பலப்படுத்தப்படவேண்டும் என சட்ட உதவிகள் ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.எஸ்.விஜயரட்ன கூறினார்.

கல்வி மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகச் சட்டத்துறையினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.நாடு முழுவதிலும், மாதாந்தம் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறித்து 8000 முதல் 10000 வரையிலான முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பெண்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் வெகுவாக உயர்வடைந்துள்ளதாக பால்நிலை வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கும் பெண்களில் 43 சதவீதமானவர்கள் பாலியல் இம்சைகளுக்கு ஆளாவதாக சட்ட உதவிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை பாதுகாப்பாக 12வது இடத்தில் உள்ளபோதும், பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் பலப்படுத்தப்படவேண்டும் என சட்ட உதவிகள் ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.எஸ்.விஜயரட்ன கூறினார்.

கல்வி மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகச் சட்டத்துறையினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.நாடு முழுவதிலும், மாதாந்தம் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறித்து 8000 முதல் 10000 வரையிலான முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பெண்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது பெண்களின் அந்தரங்க விடயங்களை இணையத்தின் ஊடாகவோ அல்லது கையடக்கத் தொலைபேசிகளின் ஊடாகவோ பிரசுரிக்கும் கலாசாரம் உருவாகியுள்ளதெனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

பாலியல் வன்முறை, பாலியல் தொழிலுக்கு வலுக்கட்டாயப்படுத்தல் போன்ற சம்பவங்கள் இலங்கையில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் வகையிலான சட்டக் கட்டமைப்பு காணப்பட்ட போதிலும், அவற்றின் செயற்திறன் சந்தேகத்திற்குரியதாக உள்ளதென ஆய்வுக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது பெண்களின் அந்தரங்க விடயங்களை இணையத்தின் ஊடாகவோ அல்லது கையடக்கத் தொலைபேசிகளின் ஊடாகவோ பிரசுரிக்கும் கலாசாரம் உருவாகியுள்ளதெனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

பாலியல் வன்முறை, பாலியல் தொழிலுக்கு வலுக்கட்டாயப்படுத்தல் போன்ற சம்பவங்கள் இலங்கையில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் வகையிலான சட்டக் கட்டமைப்பு காணப்பட்ட போதிலும், அவற்றின் செயற்திறன் சந்தேகத்திற்குரியதாக உள்ளதென ஆய்வுக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008ம் ஆண்டு ஊடறுவில் வெளியான இக்கட்டுரை மீள் பிரசுரம் செய்யப்படுகிறது


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *