உங்கள் எல்லோரையும் இலங்கைக்கு உயிருடன் வந்து பார்க்க ஆசைப்படுகிறேன் ‐ சவப்பெட்டியினுள்ளிருந்து அல்ல

றிஸானா

Rizana இழைக்காத தவறுக்காக கடந்த ஐந்து வருடங்களாக இந்தச் சிறையில் நான் அடைபட்டிருக்கிறேன். விரைவில் நான் விடுதலை செய்யப்படலாம் அல்லது கொல்லப்படலாம். அதைப்பற்றிப் பரவாயில்லை. ஆனால் நான் ஒரு விடயத்தை வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். அது என்னவென்றால் நான் ஒரு குற்றமும் இழைக்காதவள் என்பது தான்.

இழைக்காத தவறுக்காக கடந்த ஐந்து வருடங்களாக இந்தச் சிறையில் நான் அடைபட்டிருக்கிறேன். விரைவில் நான் விடுதலை செய்யப்படலாம் அல்லது கொல்லப்படலாம். அதைப்பற்றிப் பரவாயில்லை. ஆனால் நான் ஒரு விடயத்தை வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். அது என்னவென்றால் நான் ஒரு குற்றமும் இழைக்காதவள் என்பது தான். அந்தக்குழந்தையை நான் ஒரு போதும் கொல்லவில்லை. அந்த அப்பாவிக் குழந்தை மீது அவ்வாறான ஒரு பேய்த்தனமான நடவடிக்கையை மேற்கொள்ள எனக்கு எந்தத் தேவையும் இருக்கவில்லை.
 
அந்தச்சிறுவனுக்கு நான் உணவூட்டியது அது தான் முதன் முறையுமல்ல. அன்று அவனை என்னிடம் தந்த போது அவர்களது உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து ஏற்றுக் கொண்டேன். ஏனெனில் நான் இந்த அரபு நாட்டுக்கு வந்தது மாடு போல் உழைத்தாவது எனது குடும்பத்தாருக்கு மூன்று வேளை உணவு போடத்தான்.  எனது பணி உடன்படிக்கையில் என்ன உள்ளது என்பதை நான் ஒரு போதும் அறிந்திருக்கவில்லை. எனினும் இரவோ பகலோ எனக்குத் தரப்படும் எந்த வேலையையும் நான் செய்யத் தயாராக இருந்தேன்.

  

  

 

 

 

 

 

 

  

 

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *