இலங்கையில் நடைபெற்ற போரால் துணை இழந்த பெண்களின் துயரம்

 சந்தியா( யாழ்ப்பாணம்,இலங்கை)

checking 2 சமூகத்தின் மத்தியில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாகவும் போரினால் கணவனையிழந்த இளம் பெண்கள் மீண்டும் திருமணம் செய்வதற்கான வாய்ப்புக்கள் மிக அரிதாகவே காணப்படுகிறது. இளமையிலேயே  துணையிழந்த பெண்கள் பலர் இதே பிரச்சினைக்கு முகம் கொடுக்கிறார்கள் மோசமான இழப்பு துன்பம் மற்றும் அதனால் ஏற்ப்பட்ட கோபம் ஆகியவற்றை இவர்களிடத்தில் காணக்கூடியதாகவுள்ளது.

இலங்கை இனப்போர் முடிவுக்கு வந்த பின்னர் நாட்டினது வடக்கு கிழக்கு பகுதியில் வசித்து வரும் துணையிழந்த பெண்களில் அதிகமானோர் தங்களது மனவேதனையினைப் போக்குவதற்காக நித்திரை மருந்துகைளை  பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. .உள்ளுர் கடைகளிலேயே இவர்கள் இம் மருந்துகளை வாங்குகிறார்கள். இவர்களது வாழ்வில் தீராத துன்பத்தினையும் விரக்தினையும் பாதுகாப்பின்மையும் ஏற்படுத்தியதன் காரணமாக இவர்கள் மன உளைச்சலுக்கு உட்பட்டிருக்கிறார்கள். இதனைப் போக்குவதற்கு தேவையான பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்  என்பது தான் இந்த கணவனையிழந்த பெண்களின் தேவை எனக் கூறுகிறார் இவர்களுக்கு உதவிபுரியும் கத்தோலிக்க மத குரு ஒருவர்.  நாட்டினது வடக்குப் பகுதியில் மீள்குடியேறிவரும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உறுதியாக நீடித்து நிலைத்து தமது வாழ்வினைக் கட்டியெழுப்ப வேண்டும் தனிமை மற்றும் பாதுகாப்பின்மை ஆகியன மீள்குடியேற்றப்பட்ட கணவனையிழந்த பெண்கள் மத்தியில்  அதிகம் காணக்கூடியதாகவுள்ளது.

killings_in_srilanka

சமூகத்தின் மத்தியில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாகவும் போரினால் கணவனையிழந்த இளம் பெண்கள் மீண்டும் திருமணம் செய்வதற்கான வாய்ப்புக்கள் மிக அரிதாகவே காணப்படுகிறது. இளமையிலேயே  துணையிழந்த பெண்கள் பலர் இதே பிரச்சினைக்கு முகம் கொடுக்கிறார்கள் மோசமான இழப்பு துன்பம் மற்றும் அதனால் ஏற்ப்பட்ட கோபம் ஆகியவற்றை இவர்களிடத்தில் காணக்கூடியதாகவுள்ளது.

தற்போது மீள்குடியேற்றப்பட்டுள்ள  720 கணவனையிழந்த பெண்களையும் 45 பெற்றோரை இழந்த சிறார்களையும் சந்தித்து உரையாடிய போது இவர்கள் ஓவென்று கதறி அழுகிறார்கள்.  குழந்தைகள் கடந்த கால சோக நிகழ்வுகளை மனதில் நினைத்தவாறு தற்காலிக கூடாரங்களில் இவர்கள் எங்கோ வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருக்கிறார்கள். புத்திபேதலித்து போனவர்கள் போல இவர்கள் செயற்படுகிறார்கள். சில சமயம் நடு இரவில் எழுந்திருக்கும் இவர்கள் ஓவென்று கதறி அழுகிறார்கள் என இவர்களுக்கு உதவி செய்யும் மதகுருமார்கள் தெரிவிக்கின்றனர்.பெண்கள் ஒன்று சேர்ந்து இப்படியான பெண்களுக்கு உதவ முன்வரவேண்டும்

 எனக் கேட்டுக்கொள்கின்றோம் சந்தியா யாழ்ப்பாணத்திலிருந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *