மலையகா…மலையகப் பெண்களின் கதைகள், சிறுகதைகளாக தொகுக்கப்பட்டு ஊடறு வெளியீடாக சுடச்சுட வந்திருக்கிறது. 23 மலையக எழுத்தாளுமை பெண்களின் 40-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் ஒரே தொகுப்பில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு கதையும் மலையகப் பெண்களின் வாழ்வியலை பேசுகிறது. அதோடு ஒவ்வொரு கதையும் தேயிலையின் வாசத்தோடு எழுதப்பட்டிருக்கிறது. எந்தக் கதையை எடுத்துகொண்டாலும் அதில் தேயிலைகள் இருப்பை தவிர்க்கவே முடியவில்லை. தவிர மலையக மக்களின் வாழ்க்கை முறையை சிறுகதை வாயிலாக பதிவு செய்திருப்பது முக்கிய அம்சமாக கருதுகிறேன்.2
2015-ஆம் ஆண்டு ஊடறு பெண்கள் சந்திப்பு இலங்கை மலையகத்தில் நடந்தபோது நான் முதல்முறையாக கலந்துகொண்டேன். அப்போது நேரில் பார்த்த மலையகத்தை சில கதைகள் கண் முன்னே கொண்டுவந்து சில காட்சிகளை நியாபகப்படுத்துகின்றன.
ஆணாதிக்கம் நிறைந்த எழுத்துலகில், பெண் எழுத்தை தக்க வைப்பது மிகவும் சவாலான ஒன்று. அதிலும் மலையகப் பெண்களின் எழுத்துகளை தொகுப்பதும் ஆவணப்படுத்தும் முயற்சியும் எத்தனை சவால் நிறைந்தது என்று என்னால் உணர முடிகிறது.அதை சாத்தியப்படுத்திய ஊடறு றஞ்சி ம்மா.. மற்றும் அதற்கு உதவியாக இருந்த தோழமைகளுக்கு பேரன்பு.தற்போது மலேசிய வாசகர்களின் கவனத்தைப் பெற கடந்த மாதம் புத்தகங்களை றஞ்சி ம்மா கூகை நிறுவனத்திற்கு சில புத்தகங்களை அனுப்பி வைத்துவிட்டார். சுமார் 20 புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன. புத்தகம் வேண்டும் மலேசியர்கள் கூகை நிறுவன தோழர்களை தொடர்பு கொள்ளலாம்.
புத்தகம் தொடர்பான கலந்துரையாடல் செய்யவும் திட்டமிட்டு வருகிறோம். அதன் விவரம் கூடிய விரைவில் பகிரப்படும்.நன்றியோகி