14,04,2024 தேடகம் அமைப்பால் நடத்தப்பட்ட மலையகா நூல் அறிமுக நிகழ்வு

நேற்று 14-04-2024 அன்று 3600 Kingston road Scarborough village community centre மண்டபத்தில் இடம் பெற்றது. அதன் சில புகைப்பட பதிவுகள். இதன் உரைகளை ஓரிரு நாட்களில் தடயத்தார் இணையவழி ஊடாக பார்க்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். நன்றி P A Jayakaran ArullingamTamil Resources Centre of Toronto – thedakam Photos by Kiruba Kandiah

‘மலையகா’ மலையகப் பெண்களின் சிறுகதைத் தொகுப்பு (ஊடறு வெளியீடு ) தமிழர் வகைதுறைவள நிலையம் (தேடகம்) ஏற்பாட்டில் ஏப்பிரல் 14 2024 ரொரன்டோவில் வெளியிடப்பட்டது. இந் நிகழ்வில் கவிஞரும் பெண்ணிய செயற்பாட்டாளரும், உளவள ஆலோசகருமான சுதா குமாரசுவாமி நூலை வெளியிட முதற்பிரதியை மார்க்கம் மாநகரசபையின் உறுப்பினரும், சமூக செயற்பாட்டளருமான ஜொனித்தா நாதனும், சிறப்பு பிரதிகளை விளம்பரம் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் சத்தயபாமா மகேந்திரன், கணனிப் பொறியியாளர் கவிதா முரளி, மறுமொழி இணையத்தள ஆசிரியர், அரசியல் ஆய்வாளர் தாம் சிவதாசன், தாய்வீடு பத்திரிகை ஆசிரியர், நாடகர் பி.ஜே. டிலிப்குமார், அரசியல் செயற்பாட்டாளர் நிமால் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள்.

நிகழ்வின் இரண்டாம் பாகமாக நூல் குறித்த உரைகள் நிகழ்த்தப்பட்டன. கலாநிதி பார்வதி கந்தசாமி அவர்களின் தலைமையில் முழக்கம் பத்திரிகையின் பொறுப்பாசிரியரும் எழுத்தாளருமான அன்பரசி, சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான யாழினி, சமூக செயற்பாட்டளரும் எழுத்தாளருமான நிரூபா, எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான மீரா பாரதி ஆகியோர் உரையாற்றினார்கள்.இவ் நிகழ்வின் மூன்றாம் பாகமாக ஊடகர் திரு வி. தேவராஜ் (முன்னாள் பொறுப்பாசிரியர், வீரகேசரி) அவர்கள் ‘மலையக தமிழ் இலக்கியம்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.மலையகா வெளியீட்டு நிகழ்வை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் தேடகம் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *