விஜயலட்சுமி (எ) …சில்க் ஸ்மிதா கவர்ச்சி/போக பொருள் அல்ல

.ஆனால் சில்க் ஸ்மிதா திரையில் நுழைந்த காலக்கட்டம் தொடங்கி, மண்ணை விட்டு பிரிந்த பின்பும் இந்த ஆணாதிக்க சமூகம் அவரை போக/கவர்ச்சி பொருளாகவும், இழிவான பெண்ணாகவும் தான் பார்கிறது.தற்போது வெளியான #markanthony திரைப்படத்தில் சில்க் ஸ்மிதாவை recreation செய்திருந்தார்கள்.Mark anthony கதையில் சில்க் ஸ்மிதா, விஜயலட்சுமி (எ) சில்க் ஸ்மிதாவாக தான் வருகிறார்.அப்படி இருக்க சில்க் ஸ்மிதாவிற்கு பாதுகாப்பு கொடுக்க வந்த SJ சூர்யாவை பார்த்து “மீச கார மாமா பேச மாட்டார, இங்க பக்கத்தில வாங்க” கூப்பிடுவது, கையில் முத்தம் கொடுக்க அனுமதித்தது போன்ற காட்சி அமைத்திருந்தது,இறந்த நபரை மீண்டும் மீண்டும் வன்முறை செய்வதாகவே இருந்தது.சில்க் ஸ்மிதா நிருபரிடம் கூறியிருப்பார்.””எங்கும் எக்ஸ்ரே கண்கள் இருப்பது போல் உணர்கிறேன்,” “நான் என் பாத்திரத்திற்குத் தேவையானதைச் செய்வேன், மேலும் நான் இந்த காலுறைகளை அணிந்திருப்பது மக்களுக்குத் தெரியாது. நான் எதுவும் அணியவில்லை என்று கூட அவர்கள் நினைக்கட்டும்,

ஆனால் காட்சிகளுக்கு இடையில், எனக்கு என் தனிமை (Privacy) வேண்டும்.”மேடையில் இருந்து எனது அலங்கார அறைக்கு நடக்க 10 நிமிடங்கள் ஆகும். “ஆனால் ஒரு மணி நேரம் ஆகிறதேன தோன்றும்”,”இந்த ஆண்களையெல்லாம் அறைந்து சொல்லனும், நீ இன்னும் என்னை முழுதா பார்க்கணும்னா, படம் வெளிவரும் வரை காத்திரு, டிக்கெட்டை வாங்கி என் உடம்பைப் பார்க்கணும்.” ~ சில்க் ஸ்மிதாஇதுதான் சில்க் ஸ்மிதா, இதுதான் சன்னி லியோன், இதுதான் எந்த ஒரு பெண் நடிகையும், பெண் P*orn நடிகைக்களும்.திரையில் கவர்சியாகவோ, உடலை முழுவதும் காட்சி படுத்திவிட்டார் என்பதற்காகவோ, p*orn காட்சிகள் நடத்திவிட்டார் என்பதற்காகவோ… நிஜத்தில் ஆண்கள் அவர்களிடத்தில் அத்துமீறலாம், இழிவு செய்யலாம், பாலியல் வரம்பு மீறலாம் என அர்த்தமில்லை, அது அயோக்கிய தனம்.இந்த பெண்ணை எந்த அளவிற்கு இந்த ஆணாதிக்க சமூக உயிரோடு இருக்கும் போது வன்முறைகளை செய்ததோ, அதே அளவு அவர் இறந்த பின்பும் செய்து கொண்டிருக்கிறது..உங்களால பெண்களையோ, திருநர், பால்புதுமையின (Trans-Queer) மக்களையோ, ஊனமுற்ற மக்களையோ, பட்டியலின மக்களையோ முறையாக காட்சிப்படுத்த தெரியவில்லை என்றால் தயவு செஞ்சி செய்யாதிங்க.உங்க Sympathy, Aesthetic ஈர வெங்காய Representation தேவையே கிடையாது…- Mkishore KumarSudha Thiagu thozar பதிவுலேருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *