‘மலேசியத் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி 2023 – யோகி

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடக்கும் ‘மலேசியத் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி 2.0-இல்’ பெயரிடாத நட்சத்திரங்கள் நூல்களை அங்கு பெற்றுக்கொள்ளலாம்

நாள்: 18.06.2023நேரம்: காலை 9.00 முதல் மாலை 5.00 வரைஇடம்: பத்து மலை மண்டபம், சிலாங்கூர்தொடர்பு: Koogai KoogaiY

இனத்துக்காய் இரங்குமாறும்
கண்ணீர் வடுக்குமாறும்
யாரையும் கேட்கப் போவதில்லைஇ
பாவப்பட்ட உயிரென்றெனக்குப்
பிச்சையளிக்க முன்வராதீர்
வீண் கழிவிரக்கத்தில் என்னை
புரிந்துகொள்ள முயலாதீர்
எனது சுயத்தை அறிக…
(அம்புலிஇ ஈழத்து பெண் போராளி)

ஊடறு மற்றும் விடியல் பதிப்பகம் இணைந்துமுதல் பதிப்பும் இரண்டாம் பதிப்பை ஊடறுவும் கொண்டு வந்திருந்த பெயரிடாத நட்சத்திரங்கள் கவிதை தொகுப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு, ஈப்போவில் வெளியீடு செய்தோம். போர்களத்தில் இன்னுயிரை நீத்த பெண் போராளிகளின் கவிதைகள் கொண்ட தொகுப்பு அது. அன்று புத்தகத்தை வாங்கியவர்களுடையப் பணம், ஈழந்துப் போராளியின் வாழ்க்கைக்கு பயனாக அமைந்திட ஊடறுவிடம் கையளிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. கூகையிடம் இன்னும்கூட சில புத்தகங்கள் இருக்கின்றன. நாளை நடைபெறும் புத்தகப் பூங்கா விழாவில் பெயரிடாத நட்சத்திரங்கள் புத்தகம் விற்பனைக்கு இருக்கும் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.( இந்த வாய்ப்பை நல்கிய ஊடறுவுக்கும் விடியல் பதிப்பகத்திற்கும் நன்றி. )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *