குர்து தேசிய இன வரலாறு.


நன்றி அகரன்

கடந்த இருபத்தி மூன்றாம் தேதி பாரிஸின் பத்தாவது வட்டாரத்திற்கு 69 வயதான ஒரு பிரெஞ்சு நாட்டவர் துப்பாக்கியோடு செல்கின்றார். குர்திக்ஷ் மக்களின் கலாச்சார மையம் இருந்த பகுதி நோக்கி கண்மூடித்தனமாக தாக்குதலை மேற்கொள்கிறார். மூன்று குருதிஷ் மக்கள் இறக்க பலர் காயமடைகிறார்கள்.

இதற்கு எதிராக பாரிசில் ஒன்று கூடிய குர்திஷ் மக்கள் கண்டனங்களை தெரிவிக்க வந்தார்கள். அது ஒரு பெரும் போராட்டமாக மாறியது. பாரிஸ் வீதிகளில் தீ வளர்ந்தது.

இந்த தாக்குதலை மேற்கொண்டவர் வெளிநாட்டவர்களுக்கு எதிரான மனநிலை கொண்டவர். ஏற்கனவே இப்படிப்பட்ட தாக்குதல்களை மேற்கொண்டு உள்ளார்.
வேறு எந்த நாட்டவரும் குர்திஷ்களோடு இணைந்து போராடவில்லை.

கடந்த 2012 இல் குர்தீஸ் போராளிகள் இலக்கு வைத்து துருக்கிய ரகசிய ஆயுதப் பிரிவு நடத்திய தாக்குதலில் முக்கிய செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டனர். இதை மனதில் வைத்து இது துருக்கியின் செயல் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டார்கள்.

ஈழப் போராட்டத்திற்காக பாரிசில் நடத்தப்படும் போராட்டங்களில் குர்திஷ் மக்கள் தங்கள் கொடியோடு வந்து பங்கு கொள்வதை நான் பார்த்திருக்கிறேன்.

யார் இந்த குர்திஷ் மக்கள்?

*வீதியில் செல்கின்ற தாய் தன்னுடைய குழந்தையுடன் தன்னுடைய தாய்மொழியில் பேசக் கூடாது.

*பாடசாலைகளில் தாய்மொழி பயன்படுத்தக் கூடாது.

*உங்களது பாரம்பரிய உடையை நீங்கள் உடுத்தக் கூடாது.

*உங்களிடம் கிராமிய பாடல்கள் இருக்கிறதா? அதை நீங்கள் பாடக்கூடாது.

*இது துருக்கி தேசம்! இங்கு வேறு யாரும் இல்லை! அப்படி இருப்பதாக இருந்தால் அவர்கள் வேலைக்காரர்களாகவும் அடிமைகளாகவும் மட்டுமே இருக்க முடியும்.குர்துவா ? அவர்கள் மலைவாழ் துருக்கியர்கள். அவர்கள் ஒரு இனம் அல்ல. இப்படிப்பட்ட கொடிய துருக்கியின் சட்டங்களை உடைத்து குர்திஷ் மக்கள் போராடுகிறார்கள்.குர்திஷ் மக்களினுடைய மலைநிலங்கள் அப்படியே இருக்கிறது. அவர்களும் அங்கே இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு என்று ஒரு நாடு இல்லை. அவர்களுடைய நிலம் பல நாடுகளால் தின்னப்பட்டு இருக்கிறது.

துருக்கி ,ஈரான், ஈராக், சிரியா என பல நாடுகள் அவர்களுடைய நிலத்தையும் அவர்களையும் பட்டா போட்டு வைத்திருக்கிறார்கள்.குர்திஷ்தான் என்ற தேசத்தை கட்டமைக்க அவர்கள் இத்தனை நாடுகளோடும் போராட வேண்டி இருக்கிறது.பெரும்பான்மையான நிலத்தையும் பெரும்பான்மையான மக்களையும் அடிமைப்படுத்தி வைத்திருப்பது துருக்கி.1920 இல் பிரான்சில் ஒன்று கூடிய உலக நாடுகள் ‘குருதிஸ்தான்’ என்ற தேசத்தை அங்கீகரிக்கும் வாய்ப்பு உருவாகிறது.

துருக்கி, வல்லரசுகளுக்கு பொருளாதார நலன்களை வழங்கி குர்து மக்களை அடக்குவதில் அடிமைப்படுத்துவதில் தன் முழு கவனத்தை செலுத்தியது.1983ல் இருந்து சட்டரீதியாகவே குர்து மக்களுக்கு எதிரான வன்மமும் அவர்கள் மொழிக்கு கலாச்சாரத்துக்கு எதிரான சட்டங்களும் அங்கு உருவாகின.மலைவாழ் மக்களான இவர்கள் ஆரிய பாரசீகர்களும் ஆதிமலை குடிகளும் இணைந்து உருவாகிய ஒரு இனம்.கி.மு 400 இல் ஃசிணோ ஃபோன் என்ற ஒரு வரலாற்று அறிஞர் கார்துகெய் என்ற ‘மலைப்பாணன்’ தனது கடல் பயண துன்பத்தை பாடியதை குறிப்பிட்டுள்ளார்.

கி.பி644 இல் இஸ்லாமிய பேரலை வந்தபோது அதிகமாக மக்கள் இஸ்லாமியர்களாயினர். இன்றும் அவர்களிடம் பண்டைய நம்பிக்கைகளும் சடங்குகளும் நிலைத்து விட்டிருக்கிறது.குறிப்பாக கிட்டத்தட்ட 50,000 குர்திஷ் மக்கள் மயிலை தெய்வமாக வணங்குபவர்களாக இருக்கிறார்கள்.959 இல் தமிழர்களுக்கு சோழ பேரரசு போல் கஷன் வாஷ் பி. பார்க்கசனி எந்த மன்னன் குருந்திய பேரரசை அமைத்திருக்கிறார்.பின்னர் வந்த மங்கோலிய படையெடுப்பும், தைமூர் படையெடுப்பும் எல்லாவற்றையும் சிதைத்துப் போட்டன.முதலாம் உலக யுத்தத்தில் ஒட்டமான் பேரரசு அதாவது இன்றைய துருக்கியோடு இணைந்து குர்து வீரர்கள் தீரத்துடன் போராடி இருக்கிறார்கள்.அதே துருக்கி என்று அவர்களை மிகவும் மோசமாக அடக்கி ஆள்கிறது. தங்கள் சுதந்திர மண்ணில் அவர்கள் சக மக்கள் போல் வாழ்வதற்காக இன்று வரை போராடிக் கொண்டே இருக்கிறார்கள்.

குர்திஷ் மக்களுக்கும் ஒரு தலைவர் கிடைத்தார். அவர் பெயர் அப்துல்லா ஒசலான். ‘1978 இல் குர்திஸ் தொழிலாளர் கட்சி’ என்ற கட்சியை ஆரம்பித்தவர் பின்பு பி கே கே என்கின்ற உலகம் அறிந்த போராட்ட அமைப்பை வடிவமைத்தார்.சிரியாவில் இருந்து கொண்டு ஆயுதப் போராட்டத்தை கையில் எடுத்தார்.அவரின் அந்த ஆயுத அமைப்பு இன்று வை பி ஜி என்று அழைக்கப்படுகிறது.ஆண்களுக்கு நிகராக பெண்களையும் ஆயுதப்படையில் வைத்து இருக்கின்ற போராட்ட அமைப்புகளில் முக்கியமானது இதுவும் ஒன்று.தங்களால் அன்பாக ‘அபு’ என்று அழைக்கப்படுகின்ற தங்கள் தலைவர் ஒசலான் அவர்களின் கொமினீசிய சித்தாந்த அடிப்படையிலேயே பெண்களுக்கு சம நிகர் வழங்கி உலகின் கன்னங்களில் அறைகிறார்கள்.

1998 இல் சிரியாவும் துருக்கியும் ஒரு உடன்பாடு செய்து கொண்டபோது சரியா ஒசலானை கை கழுவி விட்டது. அதைத் தொடர்ந்து அவர் ரஷ்யா, கிரேக்கம், இத்தாலி என்று நாடு நாடாக அலைந்து திரிந்தார். அவருக்கு ஒரு நாடும் அடைக்கலம் கொடுக்கவில்லை.இறுதியில் சி ஐ ஏ யின் காட்டிக் கொடுப்பால் 1999 நைரேபியில் துருக்கியால் கைது செய்யப்பட்டார். அவர்கள் தலைவர் துருக்கியின் கொடிய சிறையில் வதைபடுகிறார். ஆனால் அவருடைய போராளிகள் இன்று மட்டும் குலையாமல் சிதையாமல் அவர்களின் சுதந்திர தேசத்துக்காக போராடிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு குர்தீஸ் குடும்பத் தலைவன் இப்படி கூறுகிறார்,

« அவர்கள் (துருக்கி ராணுவம்) தேடுதல் நடத்தி வீட்டுக்கு வந்து விட்டால் ‘100 பேரை கொன்றாயா?’ என்று கேட்டாலும் நான் ஒத்துக் கொள்வேன். ஏனெனில் ‘இல்லை’ என்று சொன்னால் அவர்கள் எங்கள் குடும்பப் பெண்கள்,குழந்தைகளை என் முன்னே நிறுத்தி சீரழிப்பார்கள் »
*
இந்த புத்தகத்தைப் படித்த பின்னர் எங்களை விட பல மடங்கு துன்பங்களையும் மோசமான அடிமைத்தனத்தையும் எதிர்கொள்ளும் மக்களின் பாரிஸ் போராட்டத்தில் பங்கு பற்றாத நாடற்ற மனம் அவமானத்தில் வேகியது.

அவர்களைச் சுற்றி இருக்கும் 36 இஸ்லாமிய நாடுகளில் ஒன்று கூட அவர்களுக்கு உதவவில்லை. ஏன் அவர்களை கோரமாக அடக்குகின்ற அந்த மூன்று பெரிய தேசங்களும் இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் தேசங்கள் தான்.

ஈழத்தை திரும்பிப் பார்த்தால் பிலாக்கொட்டைபோல் சிறிதாய் தெரிகிறது.
ஒரு ஒற்றுமை நமக்கும் யாருமில்லை

https://www.facebook.com/miru.ke.3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *