யாரேனும் இந்த மெளனத்தைத் தகர்த்திருந்தால் ….கமலா.பாசின்

சிறுவர்கள் வாரம்

நன்றி – சரண்யா ,வாசிப்பரங்கம்

குழந்தைகள் பற்றிய குறிப்பாக பாலியல் வன்கொடுமை பற்றிய ஒரு சிறிய புத்தகமாக இருந்தாலும் இதில் கூறியுள்ள அனுபவங்களும் காட்சிகளும் புரிந்து கொள்ளும் பாணியில் எழுதியுள்ளார் கமலா பாசின். சிறிய வயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த புத்தகம் அனைத்து குழந்தைகளுக்கும், குடும்பங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். தினவாழ்வில், குறிப்பாக குழந்தைப் பருவத்தில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள், கொடுமைகள், அது தொடர்பான குழப்பங்கள், அதிலிருந்து மீளவே முடியாமல் பதிந்துபோன அனுபவங்கள், ஏன்? எதற்கு? என்று அறிந்து கொள்ள முடியாத குழந்தைகளின் மனநிலை.. அது சரியா? தவறா? இதை யாரிடமும் சொல்வது? கேட்டால் தன்னை தவறாக நினைப்பார்களா? எப்படி கேட்பது? யாரிடம் கேட்பது? பல குழப்பங்களுடன் அந்த குழந்தைகள் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முன்வருவதில்லை. அமைதியுடன் மௌனமாக தங்களுக்குள் மறைத்து கொண்டு செல்கிறார்கள். “யாரேனும் இந்த மௌனத்தைத் தகர்த்திருந்தால்…. ” நிச்சயம் அந்த குழந்தைகள் நல்லது கெட்டது தெரிந்து பல ஆண்களுக்கு மத்தியில் தைரியமாக செயல்படுவார்கள். அதற்கு அனைத்து குடும்பங்களில் உள்ள பெரியோர்கள் அப்பா, அம்மா அவர்களை வழிநடத்தி ஒரு நண்பராக பழகி குழந்தைகள் மனநிலையை புரிந்து கொண்டு வெளிப்படையாக பேசி பகிர்ந்து கொள்ள முயல வேண்டும். வெளியே செல்லாதே, படித்து போதும் வீட்டோடு இரு, தனியே செல்லாதே என்று முடக்குவதைவிட அவர்களுக்கு தைரியம் கொடுத்து வளர்த்து வாருங்கள்.

அந்தக் குழந்தைகள் சமுதாயத்தில் எப்படி தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஒரு நல்ல வழியில் செல்வார்கள். அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, மாமா, அண்ணன், அண்ணன் நண்பர்கள், அப்பாவின் நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், ஆசிரியர்கள் இவ்வளவு உறவுகளை கடந்து செல்கின்ற குழந்தைகள் அனைவரும் நல்ல உறவினர்கள் என்று தான் பழகுகிறார்கள், விளையாடுகிறார்கள். அதுவே ஒரு சமயத்தில் தவறான பார்வை, தவறான தொடுதல், முத்தம் கொடுத்தல் இந்த மாதிரி செயல்கள் குழந்தைகளுக்கு அது நல்லதா நல்லதில்லையா என்றே தெரிவதில்லை. இன்றைக்கும் இந்த சூழலில் பலதரப்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்றால். இந்த புத்தகம் அனைவரையும் சென்றடைய வேண்டும். முக்கியமாக உங்கள் வாழ்க்கையில் நீங்கள் இப்படிப்பட்ட பாதையை கடந்து வந்திருந்தால் அவர்களுக்கு இந்த புத்தகத்தை கொடுத்து படிக்க சொல்லுங்கள். எவரேனும் ஒருவராவது அந்தத் தவறை உணர்ந்தால் போதும். தன்னுடைய வாழ்நாளில் ஏற்பட்ட ஒரு அனுபவத்தை கூறி தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்திய கமலா பாசின் அவர்களுக்கு நன்றிகளும் பேரன்புகளும். இதுபோன்ற ஒரு விவாதம் வீடுகளிலும், பள்ளிகளிலும் நடைபெற்றிருந்தால், பலரின் மௌனம் அன்றே உடைபட்டிருக்கும். பெற்றோர்களும் தவறாகப் பயன்படுத்திய ஆண்களை தண்டித்திருப்பார்கள். அனைவருக்கும் விழிப்புணர்வு தேவை. அனைவரும் வாசியுங்கள். பேசுவோம்! நண்பர்களாவொம்! பாலியல் வன்முறை பற்றிய மௌனத்தை உடைப்போம். கூடு பெண்கள் வாசிப்பரங்கம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாதிரி சிறிய புத்தகங்களை வெளியிட்டு அனைவருக்கும் எடுத்து செல்கிறார்கள். மகிழ்ச்சி. வாழ்க வளமுடன். ————————————————————

புத்தகம்: யாரேனும் இந்த மௌனத்தைத் தகர்த்திருந்தால்பக்கங்கள்: 44ஆசிரியர்: கமலா பாசின்பதிப்பகம்: குட்டி ஆகாயம் சிறார் பதிப்பகம்–சரண்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *