உரிமைக்_குரல் LGBTIQA+ சமூகத்தினர் வாழ்வில் சந்திக்கும் சிக்கல்கள்

திருநங்கைகள், திருநம்பிகள், தன்பால் ஈர்ப்பாளர்கள், பால் புதுமையர்களின் வாழ்வியல் சிக்கல்களையும் தீர்வுகளையும் பற்றி பேசும் உரிமைக்குரல்… இது ஒரு நியூஸ் 18 தமிழ்நாட்டின் முன்னெடுப்பு. இதில் முதல் நிகழ்வாக சென்ற வாரம் வியாழன் கிழமை நமது மதிப்புக்குரிய கலைமாமணி திருமிகு சுதா அம்மா அவர்கள் பங்கு கொண்டார்கள்… இந்த நிகழ்வு இரண்டு மாதம் news18 தமிழ்நாடு முன்னெடுத்து நடக்கக்கூடிய ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த நிகழ்வில் நெறியாளராக சமூக செயற்பாட்டாளர், ஓவியர், கவிஞர் சகோதரி அமைப்பை சார்ந்த மதிப்பிற்குரிய Dr. கல்கி சுப்ரமணியம் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். Dr. கல்கி சுப்ரமணியம் அவர்களின் தெளிவான சிறப்பான கேள்விகளுக்கு, நெறியாள்கைக்கு சுதா அவர்கள் அருமையாக தெளிவாக நமது சமூக மக்களின் போராட்டங்களையும் வாழ்வியல் வாழ்வாதாரங்களை பற்றியும் எடுத்துரைத்தார். LGBTQI சமூக செயற்பாட்டாளர் நாடக கலைஞர் மதிப்பிற்குரிய ஸ்ரீஜித் சுந்தரம் திருநர்கள் மற்றும் LGBTQI சமூகத்தினரின் நீண்ட போராட்டம் குறித்தும் எதிர்காலம் குறித்தும் விரிவாக பேசினார். காண்க காணொளியை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *