பெண்வெளியின் தீராத தாகம் …PARCHED

-புதியமாதவி மும்பை-

கல்வி அறிவில்லாத பெண்கள் இளமையில் விதவையான தாய் ரிகார்ட் டான்ஸ் ஆடும் பெண் அவள் உடலைக் கொத்தித்தின்ன காத்திருக்கும் ஆண்களின் கூட்டம்.. பெண்ணுடலையும் ஆண் பெண்ணுடலில் தேடும் காமத்தையும் தீவிரமாக வெளிப்படுத்தும் பாடல்வரிகள் கணவன் குழந்தை தரமுடியாதப்போது வேறொரு ஆணுடன் குழந்தைப்பேறுக்காக உடலுறவு கொள்ளும் பெண்… இத்தனைப் பெண்களின் கதைகளையும் மணல்வெளி படர்ந்த ராஜஸ்தான் கிராமத்தின் கதைக்களத்தில் காட்டி தூள் பரப்பி இருக்கிறார் இயக்குநர் லீனா யாதவ். தன் மகனுக்கு ராணி (தனிஷ்தா சட்டர்ஜி) ஒரு பெண் குழந்தையைப் பெண்பார்க்கப்போகும் காட்சியுடன் ஆரம்பமாகிறது படம். கல்வி கற்க விரும்பம் அப்பெண் குழந்தை தன் நீண்ட் தலைமுடியை கத்தரித்துக்கொண்டு திரும்ணத்தை நிறுத்திவிடலாம் என்று நினைக்கிறது.ஆனால்… நீண்ட கூந்தல் வெட்டப்பட்ட நிலையில் அந்த மணப்பெண் மணமகனுடன் செல்லும்போது முக்காடு விலகி காட்சி வெளிப்படும்போது.. அவமானமாகிவிடுகிறது. பெண்ணுக்கு கூந்தல்தான் எவ்வளவு முக்கியமாகிவிடுகிறது..! குடித்துவிட்டு வரும் மகன்… தன் வீட்டிலேயே தன் சேமிப்பை திருடும் மகன்… அதைத் தட்டிக்கேட்கும் மருமகளைப் பழிவாங்க அவளை வல்லாங்கு செய்யும் காட்சி… என் வீடு விபச்சாரவிடுதி அல்ல…என்று தன் மகனுக்கு எதிராகக் குரல் கொடுத்து விரட்டும் தாய்.. இறுதியாக தன் மருமக்ளை தன் வீட்டை விற்று அவள் விரும்பிய பால்ய சிநேகிதனுடன் அனுப்பும் காட்சியில்..

பெண்ணின் வாழ்க்கை மாற்றத்தை நோக்கி பயணிக்கும் கதை ஆரம்பமாகிறது… குழந்தைக்காக வேறொரு ஆணிடம் போகும் லஜ்ஜூ (ராதிகாஅப்தே) அக்காட்சி..என்னவோ நமக்குதமிழ்நாவல் பெருமாள் முருகனின் மாதொருபாகனை நினைவூட்டுகிறது. அந்த ஆடவன் அவள் பாதம் தொட்டு கும்பிடுகிறான். ல்ஜ்ஜூவும் அவ்னைக் கண்ணீருடன் வணங்க்குகிறாள்… அதன்பிறகுதான்… உடல்களின் சங்கமம் அரங்கேறுகிறது.. அக்காட்சி வெறும் உடல் சம்பந்தப்பட்டதாக இல்லாமல் அதையும் தாண்டிய ஓர் ஜீவனுள்ள கவிதையாக விரிகிறது. பிஜ்லி (சுர்வீன் சாவ்லா) சிரிக்கும் போதெல்லாம் நமக்குச் சிரிக்கமுடிவதில்லை..! அதுவும் தசாரா திருநாளில். ஊர்ப்பொதுவெளியில் திருவிழாவில் அரக்கன் எரிந்துக்கொண்டிருக்கிறான்…. லஜ்ஜூவின் வீட்டிலும் தீ.. விபத்தாக வருகிறது.. ராணி லஜ்ஜூவின் கணவனைக் காப்பாற்ற முனையும்போது லஜ்ஜூவே அவளையும் சேர்த்து இழுத்துக்கொண்டு வெளியில் வந்டுவிடுகிறாள்….. அவர்கள் இருவரும் பிஜ்லியுடன் சேர்ந்து வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்குப் பயணிக்கிறார்கள்….
பெண்வெளியை திரையில் கொண்டுவந்த இயக்குநருக்கு வாழ்த்துகள்..

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *