திரள்’ அமைப்பினர் நடாத்திய ‘நவீன கவிதைகளின் புதிய பரிமாணங்கள்’ என்ற தலைப்பில் பிரசாந்தியும் கவிதாவும் ஆற்றிய உரைகள்

பிரசாந்தி ஜேர்மன் மற்றும் ஸ்பானிஸ் கவிதைகளைத் தமிழாக்கம் செய்துவரும் அவர் தனது கவிதை மொழிபெயர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.மொழிபெயர்ப்புக் கவிதைகள் தமிழுக்கு எவ்வாறான புதிய பரிமாணத்தை, வளத்தினை கொடுக்கின்றன என்பது பற்றிக் குறிப்பிடுகின்றார்.ஒரு உலகத்திலிருந்து இன்னொரு உலகத்திற்கு கவிதையின் உணர்வை, ஒலியை, பொருளை பெயர்த்தலில் உள்ள சவால்கள், போதாமைகள் தொடர்பாகவும் கூறுகின்றார்.”ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உணரப்பட்டோ, உணரப்படாமலோ ஒரு தாளம், லயம் வெளிப்படுகின்றது. எழுத்தென்று வரும் போது ஒவ்வொரு மனிதரின் எழுத்துக்கும் ஒரு தாளம் இருக்கிறது. அதிலும் கவிதை எனும் போது இன்னும் அப்பட்டமாக அல்லது வெளிப்படையாக ஒரு தாளம் (வாசிப்பின் போது) உணரப்படுகின்றது அல்லது கடத்தப்படுகின்றது.”

கவிதா ஆற்றிய உரை: தமிழ்ச் சிந்தனை மரபிலிருந்து நவீனத்தைக் கண்டடைவதற்கான வெளி பற்றிய பார்வை….தமிழ்ச் சூழலில் நவீன இலக்கியம் பற்றிய புரிதலின், உரையாடலின் ஒருவகைப் போலித்தனம் பற்றிய விமர்சனம்

நன்றி ரூபன் சிவராஜா
திரள் அமைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *