The Fisherman’s Diary – தேவா (ஜேர்மனி)

Netflix ல் 2 மணிநேரதிரைப்படம் மேற்கூறப்பட்டுள்ள தலைப்பில் இருக்கிறது. இங்கே பெண்கல்வி மிக இறுக்கமாக,திட்டவட்டமாக மறுக்கப்படும் நிலைமையை பார்வையாளருக்கு தெளிவாகவும், உணர்வுபூர்வமாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது.மற்ற சிறுவர்களைப்போல தானும் கல்வியை பெற்றிட துடிக்கும் 12 வயது மீனவ சிறுமியின் ஆவலையும், ஊக்கத்தையும் மிக இயல்பாக சித்தரிக்கிறது மட்டுமல்ல அவளின் குறிக்கோளை அடைவதற்கு அவள் புரியும் போராட்ட ங்களையும் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறது. இத்திரைப்படம் மீனவரின் வறுமைதான் அவள் பாடசாலைக்கு போவதை தடுக்கிறது என்ற முன் அனுமானத்தை முற்றிலும் தகர்த்துவிடுகிறது. ஏனெனில் கிராமசிறுவர்களுக்கான பாடசாலை ஒன்று அங்கு இயங்குகிறது.அதிலே  வேறு மற்றய ஆண்பெண்சிறார்களும் கல்வி பயில்கின்றனர்.

Netflix ல் 2 மணிநேரதிரைப்படம் மேற்கூறப்பட்டுள்ள தலைப்பில் இருக்கிறது. இங்கே பெண்கல்வி மிக இறுக்கமாக,திட்டவட்டமாக மறுக்கப்படும் நிலைமையை பார்வையாளருக்கு தெளிவாகவும், உணர்வுபூர்வமாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது.மற்ற சிறுவர்களைப்போல தானும் கல்வியை பெற்றிட துடிக்கும் 12 வயது மீனவ சிறுமியின் ஆவலையும், ஊக்கத்தையும் மிக இயல்பாக சித்தரிக்கிறது மட்டுமல்ல அவளின் குறிக்கோளை அடைவதற்கு அவள் புரியும் போராட்ட ங்களையும் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறது. இத்திரைப்படம் மீனவரின் வறுமைதான் அவள் பாடசாலைக்கு போவதை தடுக்கிறது என்ற முன் அனுமானத்தை முற்றிலும் தகர்த்துவிடுகிறது. ஏனெனில் கிராமசிறுவர்களுக்கான பாடசாலை ஒன்று அங்கு இயங்குகிறது.அதிலே  வேறு மற்றய ஆண்பெண்சிறார்களும் கல்வி பயில்கின்றனர்.

This image has an empty alt attribute; its file name is diary2.jpeg

,,சாப்பாட்டை தயாரி,அதை சூடாய் வைத்திரு.குளிக்க மிதமான வெந்நீர் போடு,,போன்ற இப்படி பல தந்தையின் கட்டளைக்கேள்விகளுக்கு,,நான் முன்னரே அவற்றை ஏற்கனவே செய்துவிட்டேன்,,பதில் சொல்கிறாள் மகள். மீனவத்தந்தைக்கு தன்மகள் ஒழுங்காக,கச்சிதமாக வீட்டுவேலைகளை செய்திருப்பது ஆச்சரியப்படவைக்கிறது.,,இவள் ஏன் சும்மா உட்கார்ந்திருக்கிறாள்??.அவளுக்கு தரப்பட வேறு வேலைகள் அவனுக்கு இல்லாமல் போகிறது.,,என் கால்களை அமுக்கிவிடு,,என்கிறான் கடைசியாக.

தகப்பன் பிடித்துவரும் மீன்களை விற்பனை செய்து,பணத்தை சரியாக கணக்கு பண்ணி,எண்ணி அவனிடம் ஒப்படைக்கும் போதும் மகளின் புத்திக்கூர்மையால் விழிபிதுங்குகிறான் அவன். என்றாலும் ,,பாடசாலைக்கல்வியை மகள் விரும்புகிறாள்,,அதற்கு தான் இசையக்கூடாது என்கிற ஒருகாரணத்துக்காக அவன் தன் அன்பான மகளுக்கு கட்டளைகள் போடுவதில் குறியாக இருக்கிறான். ,,அந்த நினைப்பிலிருந்து அவளை விடுவிக்கவேண்டும்,,என அவன் உஷாராய் இருக்கிறான்.

இந்த மூர்க்கமான பிடிவாதம் அந்த மீனவரது மூளையில் தீவிரமாய்  பதிந்திருக்கிறது.,,நாம் கஸ்டபட்டு,உடலை வருத்தி உழைத்தால்தான் நாம் நன்றாய் சாப்பிட்டு நிறைவாய் வாழலாம், படித்தவர்கள் சோம்பேறிகள்,மற்றவர்களின் உழைப்பை உறிஞ்சுபவர்கள்,,மேலும் பெண்பிள்ளை படித்தால் அதனால் அவள் குட்டிச்சுவராய் போய்விடுவாள்,,ஆகிய பிற்போக்கானகருத்துக்கள் மீனவ பெண்கள்மூலமும் படத்தில் வைக்கப்படுகிறது. இதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் செய்தி;உழைப்பாளிகள் ,பிறந்து,வாழ்ந்து,மடிந்து போகும்வரை உழைத்துக்கொண்டே இருக்கணும்.வேறொரு நினைப்பு வருவதே மூடத்தனம் .பெண்ணின் உழைப்பு ஆணுக்கானது.ஆணுடைய அனுமதியின்றி பெண் ஒரு அடி நகரவும் வாய்ப்பற்றவளாகிவிடுகிறாள். என்பது.

வறுமை,கடினஉழைப்பு,வாழ்வு இவ்வளவே என உழைப்பவரின் மூளையில் திணிக்கப்பட்டிருக்கும் இந்தகருத்தாக்கம் இந்துமதத்தின் வர்ணாசிரமத்தை ஞாபகப்படுத்துகிறது.பிறப்பின் மூலமாக தாழ்வுமனப்பான்மையை உருவாக்கி மேலாதிக்கத்தின் அதிகாரத்தை தக்கவைத்திருக்கிறது இந்துசமூகம். ,,கல்வியை பெறுதல் நமக்கு தேவையற்றது.  உடல்உழைப்பு,அடிமைவாழ்வு.ஆணுக்கு  பெண் அடிமை ,,போன்ற இன்னும் பலவும் மனிதரை சிதைக்கும் இழிவுசிந்தனைகள் நன்கு அறியப்பட்டவை.

தாம் விரும்பிய வாழ்வை ,குறிக்கோளை அடைவதற்கு ,தானே நினைத்தாலும்கூட அதனை நோக்கி நகரமுடியாத ,,மூளைச்சலவை,, இது.  

ஆபிரிக்ககடல்கரைகிராமம் ஓன்றின் வாழ்வை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது இப்படம்.மிக துயரங்களுடன் கூடிய சம்பவங்களுடன்  கதை உருவாக்கப்பட்டுள்ளது.12வயது. சிறுமியின் திறமையை புரிந்துகொள்ளும் ஆசிரியை,அவளுக்கு உதவ மனம் கொண்டாலும், தந்தை என்ற அதிகாரதலையீடு தன் அன்பான மகளின் கற்றலின் இலக்கை குறிவைத்து தகர்க்க முனைகிறது.  ,,சிறுமி,ஏகாவுக்கு   ஆசிரியை  உதவக்கூடாது,தந்தை அனுமதியின்றி மகள் பாடசாலை செல்ல அனுமதியில்லை,,பள்ளியின் மேல்நிர்வாகத்தால் ஆசிரியைக்கும் கைவிலங்கு போடப்படுகிறது. மகளின் லட்சியத்தை நொறுக்கும் நோக்கில் தகப்பன் தன் சின்னவயது மகளை ஒரு நடுத்தரவயது க்காரனுக்கு மணமுடித்துக் கொடுக்க இசைகிறான். திருமணத்தின்போது ஆசிரியையும் மனதுள்ளே குமுறிக் கொண்டிருக்கிறதை தவிர அவளால் ஒன்றும் செய்ய முடியாமல்,துயரத்தோடு நிற்கிறாள்.சிறுமியின் கணவனாகப்பட்டவன் அவளை பாலியல் பண்டமாக அனுபவிப்பதில் குறியாக இருக்கிறான்.அவனிடமிருந்து தப்பியோடி  வந்து தந்தையிடம் மகள் முறையிடுகிறாள்.தகப்பனோ,,நீ கணவனிடம்தான் போ,,என,விரட்டுகின்றான். தற்கொலைக்கு மகள் முயல்கிறாள்.ஆனால்……..  இப்படத்தின் இறுதியில் வரும் சந்தோசமான முடிவுதான் ஒரு நிம்மதி தருவதாயிருக்கிறது.அந்த திருப்தியானமுடிவு சந்தர்ப்பவாத அரசியலை வெளிப்படையாக்குகிறது. தலைமை கல்வி அதிகாரி தன் பதவியை தக்கவைத்துக்கொள்ளவே சிறுமியின் திறமையை பயன்படுத்துகிறான்.ஆகவே அரசியல் அதிகாரம் தன் சொந்த நலனை முன்னிட்டு இரேகாவை காப்பாற்றுகிறது.

பெண்கல்வியின் முக்கியத்துவத்தை ஒரு சிறுமியின் துயர வாழ்வின் வழியாக படம் முன்வைத்திருக்கிறது.  இதுதான் இத்திரைப்படம் அறிவிக்கும் செய்தி. இன்னொரு சிந்தனையும் இடையில் முளைக்கிறது.பெற்றோர் பலரும் தம் பாசமான பிள்ளைகள,தம் சொந்த விருப்பு-வெறுப்புக்காக எந்தவித வன்முறை செய்யவும் தயங்குவதில்லை.

கற்றலை உழைப்பாளருக்கு முதலாளித்துவ அரசுகள் மறைமுகமாக மறுக்கின்றன.காரணம் இவ்வரசுகளுக்கு தொழிலாளிகள் தேவைப்படுகின்றனர். ஆசிய,ஆபிரிக்க,தென்அமெரிக்கநாடுகளில் செழுமையான நாடுகளின் தொழில்சாலைகள் இயங்குகின்றன .பயிர்,எண்ணெய்,கோப்பி என்று பலதரப்பட்ட அன்றாடதேவைகளு க்கானவைகள் அங்கிருந்து ஏற்றமதியாகிறது.வறுமையான வாழ்விலும்,வரண்ட நிலப்பரப்பில் வாழும் பல்லாயிரக்கணக்கான சிறுவர்களின் உழைப்பிலும் அங்கு உற்பத்தியும் நடக்கிறது.ஏற்றுமதியும் பணக்கார நாடுகளுக்கு லாபகரமாக அது அமைந்துவிட்டிருக்கின்றது.  ஆகவே உழைப்பாளருக்கு வேலைசெய்தால்தான் வயிறு நிறையும் நிலைமையை ஏறபடுத்தி வைத்திருப்போர் இந்த நவீன காலனித்துவநாடுகளே. அரேபியநாடுகளும் ஆசியநாட்டு இளைஞ-ஞிர்களை உழைப்பை உறிஞ்சுவதில் முன்ணனி வகிக்கின்றன. இலங்கையில்,இந்தியாவில் ,பாகிஸ்தானில்,பங்களாதேசத்தில், நேபாளத்தில்,பாடசாலைக்கல்வியை ஆரம்பிக்கவோ  தொடரவோ முடியாத இளம் சமுதாயம் எண்ணெய்வளநாடுகளில் தம்உடல்உழைப்பில் தேய்ந்துபோகின்றனர்.வீட்டுவேலைக்காக சிறுமிகளின் வயதை கூட்டி இந்த நாடுகளுக்கு அனுப்பியதும்,அங்கு அவர்கள் எல்லாவித வன்முறைகளால் பிழியப்படுவதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

கல்வி பெண்ணுக்கு ஒரு பலம்.அது அவளுக்கு ஒரு திறந்த பெருவெளியை,சுதந்திரமாக சிந்திக்கிற மனதை,தன் உரிமையை தானே கையில் எடுத்துக்கொள்ளும்திடத்தை கொண்டுதரும்.

பெண் தன் படிப்புக்காக,வாழ்வுக்காக இன்னும் போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *