கர்ணன்- ஒடுக்கப்பட்ட வாழ்வியல் மக்களின் கர்ஜனை-இரவிபாகினி ஜெயநாதன்

கர்ணன்- ஒடுக்கப்பட்ட வாழ்வியல் மக்களின் கர்ஜனை. படம் பார்த்ததிலிருந்து ஒருவித அழுத்தத்தம் இன்னும் எத்தனை கடைக்கோடி கிராமங்களில், நகர்ப்புற சேரிகளில் இத்தகைய விதம் மக்கள் துன்பப்பட்டும்/ ஒடுக்கப்பட்டும் கொண்டிருக்கிறார்களோ என்ற வேதனை, அங்கலாய்ப்பு தொற்றிக்கொண்டது! படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதிவரை இதயம் முழுவதும் இறக்க முடியா பாரம் இருந்துகொண்டே இருந்தது. சாதிய ஒடுக்குமுறை சார்ந்து அல்லது சமூகம் சார்ந்து படம் எடுத்தால் அதில் மாபெரும் கருத்துக்கள் இருக்க வேண்டும்; தலைவர்களின் வசனங்கள், பேர்கள் இருக்க வேண்டும் ;சிகப்பு உடைகள்/கொடிகள் இருக்க வேண்டும்; அம்பேத்கரையும் பெரியாரையும் காட்சிப்படுத்த வேண்டும் என்ற வலிந்து வைக்கும் காட்சிகள் எதுவும் இந்த படத்தில் இல்லை.

முழுக்க முழுக்க ஒரு கிராமம் அதிலிருக்கும் மக்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் அதை எதிர்கொள்ளும் விதம் மற்றும் அதற்கான குறியீடுகள் படத்தை முழுமையடைய செய்திருக்கிறது

சாதிச் சண்டைகள்/ சாதிய ஒடுக்குமுறைகள் இருவேறு சாதிகளுக்கு இடையேதான் கடத்தப்பட்டு வருகிறது என்பதைக் கடந்து இத்தகைய கட்டமைப்பை அதிகார வர்க்கங்களும் தங்களாலான எல்லாவகையிலும் தக்கவைத்துக் கொள்வதற்கான வேலைகளை செய்து கொண்டுதான் இருக்கும் என்பதே இப்படத்தின் முதன்மைப் பாடம். கர்ணனுக்கு முன்னான தலைமுறையினர் பெயரில் இருக்கும் அரசியலை உணர்ந்து மாற்றத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கிய போதும் கூட கர்ணனுக்கு பின்னான காலங்களிலும் அதே அளவான அதற்கும் மேலான ஒடுக்குமுறையையே மக்கள் சந்தித்து வருகிறார்கள் என்ற புள்ளி இத்தனை காலமும் நாம் பேசிக்கொண்டிருக்கும் அரசியலை கேள்வி கேட்கிறது.சாதியப்பிரச்சனைகளை ஆவணப்படுத்தியதில் இதுவரை நான் பார்த்த படங்களில் இதை சிறந்த படம் என்று சொல்லுவேன்.மாரி செல்வராஜ் என்னும் படைப்பாளி மீது அபரிவிதமான ஒரு நம்பிக்கை/மரியாதை ஒவ்வொரு காட்சிகளிலும் மேலோங்கியது.

தனுஷ் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞன். இந்த படம் அசுரனை விட நடிப்பதற்கு அவருக்கு அதிகமான வாய்ப்புகள் இருந்ததா என்றால் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் #லால் அந்தத் தாத்தா பாத்திரம் அசுரத்தனமான நடிப்பு. யோகி பாபு தனுஷ் மற்றும் ஓரிரு தெரிந்த முகங்களை கடந்து அப்படத்தில் வாழ்ந்த கதாபாத்திரங்கள் புதிய முகங்கள் என்றாலும் அத்தனை ஆழமாய் மனதில் பதிந்து விட்டார்கள். முக்கியமாக#லால்தாத்தா

உன் மூட நம்பிக்கைய எதிர்த்த கருத்துகளே உனக்கு இவ்ளோ வலி தருதே?ஆயிரம் வருசமா அடிப்படை உரிமைகள இழந்தவனுக்கு எம்புட்டு வலி இருக்கும்?#கர்ணன் இசை
மஞ்சனத்தி_புருஷா#குதிரைக்கார தம்பி

#


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *