பெரு நகரங்களின் நவீன நிலப்பிரபுக்கள் -கௌரி பரா (லண்டன் )

பெருநகரங்களின் நிலப்பிரப்புக்கள்( Land Lords). ஐ நா வின் கணிப்புப்படி 5 மில்லியன் மக்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் பூர்வீக நிலங்களை விட்டு நகரங்களுக்கு குடி பெயர்கின்றனர். இது உலகின் மிகப்பெரும் இடப்பெயர்வு. கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு குடி பெயரும் மக்கள், கிராமங்களில் இருந்து புறப்படும் போது கைச்செலவிற்கான காசை மட்டும் எடுத்து போக வசதியுடையவர்களாக இருப்பார்களே தவிர அவர்கள் போய்ச்சேரும் நகரங்களில் தங்கள் இருப்பிடம் வாழ்வாதாரத்திற்கு தேவையான எதையும் எடுத்துச்செல்ல வசதியற்றவர்களாகவே இருப்பார்கள். குறிப்பாக தங்கும் வசதிக்கான வீட்டு வாடகை. நகரத்திற்கு வந்ததும் அங்கு தங்கள் நேரத்தையும் உடல் உழைப்பையும் செலுத்தி அவர்கள் ஊதியமாகப்பெற்ற பணம் அதிகளவில் செலவழிக்கப்படுவது வீட்டு வாடகைக்காகத்தான். இவர்கள் வாடகைக்கு பெறும் வீட்டின் தரம் சிறிய புறாக்கூடுகளையும் எலிவளைகளையும் ஒத்ததாக இருப்பினும் demand and supply என்ற ஒன்று மனிதர்கள் வாழத்தரம் அற்ற வீடுகளில் நியாயமற்ற வாடகைச்செலவில் அவர்களை வசிக்க நிர்ப்பந்திக்குறது.


This image has an empty alt attribute; its file name is london.jpg

இது இப்படி இருக்க இந்த நவீ ன நிலப்பிரப்புக்கள் கொஞ்சமும் குற்றவுணர்ச்சி இல்லாமல் சக மனிதனின் உழைப்பில் முக்கால் வாசியை வீட்டு வாடகையென வசூலித்துக்கொள்கிறார்கள். முதலாளித்துவ ஐனநாயக அரசுகள் இதை free- market என்கிறார்கள். அதனால் ஒரு வீட்டுற்கு எவ்வளவு வாடகையை நிலப்பிரபுக்கள் வசூலிக்கலாம் என்பதை அரசுகள் கட்டுப்படுத்துவதில்லை. நிலப்பிரபுக்களாக இருப்பவர்கள் அநேகர் உயர் மத்தியதர வர்க்கமாக இருக்கின்றனர். மத்திய தரவர்க்கம் நாளைக்கு தாங்கள் நிலப்பிரபுக்களாவது பற்றிய கனவில் ஓடி ஓடி உழைத்த வண்ணம் உள்ளனர். இப்படி இருக்கையில் யார் இதற்கு எதிராக குரல் கொடுப்பார்கள்? கொரோனாக்காலத்தில் இவர்கள் அநேகர் வெளியில் போய் வேலை செய்து கொண்டிருக்கும் போது அவர்கள் தொற்று கிருமிகள் காவிகளாக இருப்பார்களோ என்ற பயத்தில் வெளியேற்ற முனைந்தார்கள் land lords என்பதை யாரோ ஒரு தமிழர் ஒரு குறுந்திரைப்படமாகவும் எடுத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பெருநகரங்களை இயக்கும் இந்த தொழிலாளர்களின் வாழ்வை சின்னாபின்னமாக்கும் இந்த வீட்டு வாடகை உயர்வு இந்த market price என்ற ஒன்றிற்குள் அடிபட்டுப்போய் தொழிலாளர்கள் வாழ் வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கும் வண்ணம் பேர்லின் நகரம் வீட்டு வாடகை தொழிலாளர்களின் பொருளாதாரத்தை பாதிக்காமல் ஒழுங்குபடுத்தி இருக்கிறது . ஆனால் ஏனைய பெரு நகரங்களில் மனிதர்கள் உழைப்பில் மூன்று மடங்கு வாடகைக்கு செலவுக்காக பாவிக்கப்படுகிறது என்பதே நிஐம். லண்டன் போன்ற நகரங்களில் வீட்டை வாடகைக்கு விடும் நிலப்பிரபுக்கள் அநேகர் தங்களின் பொறுப்பும் கடமையாகவும் இருக்கும் வீட்டில் ஏற்படும் திருத்த வேலைகளை வாடகைக்கு இருப்பவர்கள் நேரத்திற்கு அறிவித்தாலும் நேரத்திற்கு செய்யாமல் இழுத்தடித்து விட்டுத்தான் செய்து முடிக்கிறார்கள். குழந்தைகளோடு வசிக்கும் மக்கள் சுடு நீர் இல்லாமலும் குளிர் காலத்தில் ஹீட்டர்கள் வேலை செய்யாமலும் இருக்கிறபோது குளிரால் அவதிப்படுகிறார்கள். இங்கிலாந்தில் இருக்கும் சிட்டிசன் அட்வைஸ் ஆலோசனை மையத்தின் கணிப்பின்படி ஒவ்வொரு நிமிடமும் பிரைவேட் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் ஆலோசனை பெற்ற வண்ணம் உள்ளனர்.

குறிப்பாக தனித்து குழந்தைகளோடு வாழும் பெண்களிடம் இருந்தே நிலப்பிரபுக்கள் பற்றிய புகார்கள் வருகின்றன என்கிறார்கள். அதுவும் சுடுதண்ணி பிரச்சனை போன்றவற்றை சரி செய்யக்கோரினால் வீட்டை விட்டு எழுப்புவோம் என்ற மிரட்டல்கள் தங்களின் நிம்மதியை கொரானாக்காலத்தில் மேலும் குலைத்தது என்கிறார்கள். இந்த மிரட்டல்கள் சட்ட விரோதமானது என்றாலும் நடந்த வண்ணமே உள்ளது. மேலும் சிற்றிசன் அட்வவைஸ் ன் கணிப்பின்படி அரை மில்லியனுக்கு மேலாக வீட்டு வாடகையில் இருக்கும் மக்கள் வாடகைப்பணத்தை கட்ட முடியாமல் அவதிப்படுவதோடு தரம் குறைந்ததும் அளவில் மிகச்சிறிய வீடுகளில் கொரோனாக்காலத்தில் அடைபட்டுக்கிடப்பது மனவுளைச்சலை மேலும் அவர்களுக்கு அதிகப்படுத்துகின்றது. லண்டனைப்பொறுத்தவரை சனத்தொகை கூடக்கூட வாடகை கூடுவதோடு வீடுகளிள் அளவும் தரமும் குறைகிறது. வீட்டு வாடகைக்கான அரச உதவித்தொகை (local housing allowance )என்ற ஒரு குறிப்பிட்ட தொகையாக இருப்பதனால் மேலதிக பணத்தை வாடகையில் இருக்கும் தொழிலாளர் வர்க்கம் எங்கிருந்து பெற்றுக்கொள்வது என்று விழி பிதுங்கிப்போவது வழக்கம். Land lords கள் தாங்கள் விரும்பிய பணத்தை வாடகையாக அறவிடலாம். இவை எல்லாவற்றையும் அறிந்த நவீன நிலப்பிரபுக்கள் ஏதும் அறியாததுபோல பாவனை செய்து கொண்டு தொழிலாளர் வர்க்கத்தின் துயரத்தை மேலும் மேலும் பெரிதாக்குவதோடு தாங்கள் செல்வந்தர்களாகி இன்னும் பல வீடுகளை buy to let மூலம் வாங்கி பயனடைகிறார்கள்.

நமது புலம் பெயர் தமிழ் நவீன நிலப்பிரபுக்கள் பலருக்கு தங்களிடம் எத்தனை வீடுகள் இருக்கிறது என்ற கணக்கே மறந்து போகிற அளவிற்கு வீடு பேறு பெற்றிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. இந்த வகையில் பணத்திற்கு மேல் பணம் சேர்ப்பது சட்டவிரோதம் இல்லை என்றாலும் மனசாட்சி உள்ளோருக்கு அது இயலாத காரியம். ஆகவே மனிதர்கள் வாழ உகந்த வகையில் வீடுகளை இவர்கள் பாதுகாத்து திருத்தி பராமரித்து வைத்திருப்பார்கள்; அப்படி இருக்கும் பட்சத்திலேயே குற்றவுணர்ச்சி இல்லாது இவர்கள் வாடகை வசூலிப்பார்கள் என்பதை மட்டும் எப்படி இவர்கள் நியாயமான முறையில் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும். மனச்சாட்சி என்பது மனிதில் இருந்து வர வேண்டும் , சட்ட திட்டங்களால் யாராலும் யாருக்குள்ளும் அதைத்திணிக்க முடியாது. Brexit வந்த கையோடு சனத்தொகை குறைகிறது. இனியாவது இவர்கள் வாடகையை குறைத்து மனிதாபிமானத்தை நிலை நாட்டுவார்களா? பொறுத்திருந்து பார்க்கலாம். !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *